தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலைக்கு எதிர்ப்பு - மறியல்

1 hour before
கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலைக்கு எதிர்ப்பு - மறியல்

கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலைக்கு எதிர்ப்பு - மறியல்

பொள்ளாச்சி, அக்.5-ஜமீன் ஊத்துக்குளி பேரூராட்சிக்குட்பட்ட குஞ்சிபாளையம் பகுதியில், கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை மற்றும் குப்பை கொட்டும் மையம் அமைப்பதற்கு அப்பகுதி பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொள்ளாச்சி ஜமீன் ஊத்துக்குளி பேரூராட்சி எல்லைக்குட்பட்ட குஞ்சிபாளையம், காளிபாளையம், சீனிவாசபுரம், வசியாபுரம், நல்லூர் சர்ச் காலனி, நஞ்சேகவுண்டன்புதூர், கண்ணப்பன் நகர் மற்றும் குமரன் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் பேரூராட்சியின் கீழ் வருகின்றன. இந்நிலையில், குஞ்சிபாளையம் பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை மற்றும் கழிவு சேகரிப்பு மையம் அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திங்களன்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டப் பொருளாளர் கே.ஏ. பட்டீஸ்வர மூர்த்தி கூறும்போது, நிலத்தடி நீர் மற்றும்சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் இந்த திட்டத்தை முற்றிலுமாக கைவிட வேண்டும். பொருத்தமற்ற இந்த இடத்தில் சுத்திகரிப்பு ஆலையை அமைக்கக் கூடாது என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் நடத்தும் இந்த போராட்டத்தினை உணர்ந்து அரசு இந்த திட்டத்தை கைவிட வேண்டும், என்றார்.

தகவலறிந்து வந்த போலீசார் மற்றும் பேரூராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். சமாதானக் கூட்டம் நடத்தி தீர்வு காணும் வரை புதிய கட்டுமானம் மற்றும் குப்பை கொட்டும் பணிகள் நிறுத்தப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் முடிவுக்கு வந்தது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.