பெரும்பான்மைவாதமும் அரசியலமைப்புச் சட்டத்தின் எதிர்காலமும் - பிரகாஷ் காரத்
yesterday

பெரும்பான்மைவாதமும் அரசியலமைப்புச் சட்டத்தின் எதிர்காலமும் - பிரகாஷ் காரத்

சேலத்தில் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் நடைபெற்ற சுதந்திர தின கருத்தரங்கில் ஆற்றிய உரையின் பகுதிகள்

இந்தியாவில் இன்று ஜனநாயகம் என்பதுபெரும்பான்மைவாதமாக மாற்றப்பட்டுள்ளது. பெரும்பான்மைவாதம் என்பது எப்போதுமே ஜனநாயகம் ஆகாது. மக்கள் தங்களின் பெரும்பான்மை வாக்களிப்பு மூலம் யார் அரசாங்கத்தை நடத்த வேண்டும் என்பதைத் தீர்மானிக்கிறார்கள் என்பதுஉண்மைதான். இருப்பினும், ஒரு கொள்கையாகப் பெரும்பான்மைவாதம் ஜனநாயகத்திற்கு எதிரானது. ஒரு ஜனநாயக நாட்டில் சிறுபான்மையினரின் உரிமைகள் மதிக்கப்படாமலும் பாதுகாக்கப்படாமலும் போனால், அது உண்மையான ஜனநாயகமாகத் தொடர்ந்து நீடிக்க முடியாது.

இன்றைய இந்தியாவில் பெரும்பான்மைவாதம் என்பது, நாட்டின் பெரும்பான்மையினராக இருக்கும் ஒரேயொரு மதச் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே நாட்டின் குடியுரிமை உரிமைகள் உள்ளன

எனும் இந்துத்துவக் கருத்தாக்கத்தைக் குறிக்கிறது. இது இந்தியாவின் பல பகுதிகளில், குறிப்பாக பாஜக

ஆட்சி செய்யும் மாநிலங்களில் வெளிப்படையாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. அங்கு அரசியல

மைப்புச் சட்டத்தின் மாண்புகளும் கொள்கைகளும் செயல்படுவதில்லை; முறையான நடைமுறைகளும் பின்பற்றப்படுவதில்லை.

நிர்வாக ஒடுக்குமுறையும் ‘புல்டோசர் நீதி’யும்

உத்தரப்பிரதேசம் போன்ற பா.ஜ.க ஆட்சி செய்யும்மாநிலங்களில், நிர்வாகம், காவல்துறை மற்றும் நீதித்துறை கூட இந்த பெரும்பான்மைவாதக் கொள்கைக்கு வெளிப்படையாகத் துணைபோகின்றன. உத்தரப்பிரதேசத்தில் ஒரு முஸ்லிம் நபர் குற்றம் செய்ததாகக்கூறப்பட்டால், விசாரணைக்கு முன்பே அந்த நபரின் வீட்டை இடிப்பதற்கு உடனடியாக புல்டோசரை அனுப்பும்வேலையை நிர்வாகம் செய்கிறது. அந்த நபர் மட்டுமல்லாமல், அவரது குடும்பத்தினரும் தங்களது வாழ்வாதாரத்தையும் வீடுகளையும் இழந்து தவிக்கிறார்கள். இதுவே “புல்டோசர் நீதி” என்றுஅழைக்கப்படுகிறது.உத்தரப்பிரதேச முதலமைச்சர் கடந்த சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, “உத்தரப்பிரதேசத்தில் நாங்கள் வழங்கும் நீதி இதுதான்” என்றுபெருமிதத்துடன் கூறுவதற்காகத் தேர்தல் பேரணிகளுக்கு முன்னால் புல்டோசர்களை வரிசையாக நிறுத்தி விளம்பரம் தேடிக்கொண்டார். எனவே, நாடு முழுமைக்கும் சமமாகப் பொருந்த வேண்டிய இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படை விதிகள் பாஜகஆட்சி செய்யும் மாநிலங்களில் செயலற்றுப் போய்விட்டதை நாம் பார்க்க முடிகிறது.

அரசியலமைப்புச் சட்டத்தின் வீழ்ச்சி

2002 ஆம் ஆண்டில் குஜராத்தில் முஸ்லிம் சிறுபான்மையினருக்கு எதிராக அரங்கேற்றப்பட்ட கோரவன்முறைகளும் படுகொலைகளும் நடந்த காலத்தைநான் இந்த நேரத்தில் நினைவுகூர வேண்டும். பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நாங்கள் சிலர், அப்போதைய இந்தியக் குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணன்அவர்களிடம் ஒரு பிரதிநிதிகள் குழுவாகச் சென்றோம். குஜராத்தில் சிறுபான்மையினர் படுகொலை செய்யப்படுகிறார்கள், அவர்களின் வீடுகளும் சொத்துகளும் அழிக்கப்படுகின்றன; இதைக் கட்டுப்படுத்த உடனடியாகத் தாங்கள் தலையிட வேண்டும் என்று அவரிடம்முறையிட்டோம்.

எங்களின் கோரிக்கையைக் கேட்ட குடியரசுத் தலைவர் நாராயணன் அவர்கள் எங்களைப் பார்த்துக்கவலையுடன், “குஜராத்தில் இப்போது அரசியல் அமைப்புச் சட்டம் செயல்படவில்லை” என்று பதிலளித்தார். எனவே, 2002-இல் குஜராத்தில் என்ன மாதிரியான அவல நிலை அரங்கேறியதோ, அதே நிலைதான் இப்போது இந்தியாவின் பிற பகுதிகளிலும் நகலெடுக்கப்பட்டு வருகிறது. இன்றைய இந்தியாவில் பலபகுதிகளில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் பொருந்தாமல் ஆக்கப்பட்டுள்ளது. என்பதே கசப்பானஉண்மையாகும்.

இவ்வளவு சிறந்த அரசியலமைப்புச் சட்டம் நம்மிடம் இருக்கும்போது, அது ஏன் இன்று நம் நாட்டில் முறையாகச் செயல்படவில்லை என்ற கேள்வி எழுகிறது. அதற்கானபதிலை டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்கள், அன்றே வழங்கியிருந்தார். டாக்டர் அம்பேத்கர், “அரசியல்அமைப்புச் சட்டம் எவ்வளவு நல்லதாக இருந்தாலும், அதைஅமல்படுத்துபவர்கள் நல்லவர்களாக இல்லாவிட்டால், அந்த அரசியல் அமைப்புச் சட்டம் கெட்டதாகவே நிரூபிக்கப்படும்” என்று எச்சரித்திருந்தார்.அதாவது, அரசியலமைப்பை உயர்த்திப் பிடித்து நேர்மையுடன் அமல்படுத்த வேண்டிய மனிதர்களே அதற்குவிரோதமாகச் செயல்பட்டால், அந்த அரசியலமைப்பே பலனற்றுப் போய்விடும். இதுதான் இன்றுநமது நாட்டில் நடந்துகொண்டிருக்கும் யதார்த்தநிலையாகும். 2002-இல் குஜராத்தின் முதலமைச்சராக நரேந்திர மோடி பொறுப்பில் இருந்தார். அரசியலமைப்பை உயர்த்திப் பிடிப்பதற்குப் பதிலாக,குஜராத்தில் அவர் அரசியலமைப்பைக் காலில் போட்டு மிதித்தார். இன்று, அவர் நாட்டின்பிரதமராக உயர்ந்திருக்கும் நிலையில், பா.ஜ.க-வும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் இந்த அரசியலமைப்பைத் தகர்க்கும்சக்திகளாக மாறி நிற்பதன் விளைவுகளை நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.

வந்தே மாதரம் திணிப்பும் மதச்சார்பின்மைச் சீரழிவும்

இன்று மத்தியில் பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் அதிகாரத்தில் இருக்கும்போது, அரசியலமைப்பின் அடிப்படையானமதச்சார்பற்ற கொள்கையின் மீது கடுமையான தாக்குதல்கள் தொடுக்கப்படுகின்றன. இதற்குச் சமீபத்தியஉதாரணம் ‘வந்தே மாதரம்’ விவகாரமாகும். விடுதலைப் போராட்டத்தின் போது ‘வந்தே மாதரம்’ ஒரு எழுச்சிமிக்கமுழக்கமாகத் திகழ்ந்தது. இந்தச் பாடலை விடுதலைப் போராட்ட வீரர்கள் பாடியபோது, காங்கிரஸ் கட்சியில் இதுகுறித்து விவாதங்கள் நடந்து, 1837-இல் இந்தப் பாடலின் முதல் இரண்டு சரணங்கள் மட்டுமே பாடப்படும் என்று முடிவு செய்யப்பட்டது. ஏனெனில், இந்தப்பாடலின் பிற்காலச் சரணங்களில் லட்சுமி, துர்க்கை போன்ற இந்து தெய்வங்கள் - இந்தியத் தாயாகபோற்றப்படுகின்றன.

இது விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற இந்துக்கள், முஸ்லிம்கள் மற்றும் அனைத்துச் சமூ

கத்தினரையும் ஒன்றுபடுத்த உதவாது என்பதை அவர்கள் உணர்ந்தனர். முதல் இரண்டு சரணங்களில் மதக்கடவுள்கள் அல்லது தெய்வங்களைப் பற்றிய குறிப்புகள் இடம்பெறவில்லை. எனவே, சுதந்திரப் போராட்டம் முழுவதும் முதல் இரண்டு சரணங்கள் மட்டுமே பாடப்பட்டு வந்தன. அரசியல் நிர்ணய சபையும் இதை விவாதித்து, “இது நமது தேசியப் பாடல், ஆனால்தேசியப் பாடல் என்பது வந்தே மாதரத்தின் முதல் இரண்டு சரணங்களை மட்டுமே குறிக்கும்” என்றுதெளிவுபடுத்தியது.

ஆனால், தற்போது மோடி அரசு இதில் இரண்டு ஆபத்தான முடிவுகளை எடுத்துள்ளது. முதல் முடிவு சிலமாதங்களுக்கு முன்பு அமல்படுத்தப்பட்டது. தேசிய கீதமான ‘ஜன கண மன’வை விட வந்தே மாதரத்திற்குமுன்னுரிமை அளிக்கப்படும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தேசியக் கொடி ஏற்றப்படும்போதெல்லாம்,முதலில் வந்தே மாதரத்தின் ஆறு சரணங்களும் முழுமையாகப் பாடப்பட வேண்டும்; அதற்குப் பிறகே தேசிய கீதம்பாடப்பட வேண்டும் என்று மாற்றியுள்ளனர்.இரண்டாவது முடிவு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. தேசியச் சின்னங்கள் தொடர்பான சட்டத்தில் திருத்தம் செய்து, தேசிய கீதத்தை அவமதிப்பது எப்படித் தண்டனைக்குரியதோ, அதேபோல வந்தே மாதரத்தின் ஆறு சரணங்களுக்கும் நீங்கள் எழுந்து நிற்கவில்லை என்றால், உங்கள் மீதுகடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று திருத்தம் கொண்டு வந்துள்ளனர்.ஒரே மதத்தைச் சேர்ந்த தெய்வங்களைப் போற்றும் வகையில் சட்டப்பூர்வமாகப் பாடப்பட வேண்டிய ஒரு தேசியப் பாடலை நீங்கள் இப்போது அனைவர் மீதும்திணித்துள்ளீர்கள். ஒரு மதச்சார்பற்ற குடியரசில் இதை அனுமதிக்க முடியுமா? மேலும், உத்தரப் பிரதேசத்தில்உள்ள அனைத்து மதரஸாக்களிலும் மாணவர்கள் தினமும் காலையில் கட்டாயம் வந்தே மாதரம் பாட வேண்டும்என்று உ.பி மாநில அரசுஉத்தரவைப் பிறப்பித்துள்ளது. இவ்வாறு நமது நாட்டின் அடிநாதமான மதச்சார்பின்மை முற்றிலுமாகச் சிதைக்கப்பட்டு வருகிறது.

மக்களின் ஒற்றுமையும் ஒன்றுபட்ட எதிர்ப்பும்

இத்தகைய அச்சுறுத்தலான சூழலில், மக்களின் ஒற்றுமையும் ஒன்றுபட்ட எதிர்ப்பும் மட்டுமே நம்மை மீட்கமுடியும். உதாரணமாக, கேரளாவில் சுதந்திர தினத்தன்று நடைபெற்ற அதிகாரப்பூர்வ சுதந்திர தின விழாவில்வந்தே மாதரம் பாடப்படவில்லை என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். ஒன்றிய அரசின்உத்தரவு இருந்தபோதிலும், இன்று கேரளாவில் நாங்கள் எதிர்க்கட்சியாக இருக்கிறோம்; ஒன்றிய அரசின் இந்தமதவாத முடிவை எங்களால் ஏற்கமுடியாது என்றும், தேசிய கீதம் மட்டுமே பாடப்படவேண்டும் என்றும் நாங்கள் அரசிடம் கூறியிருந்தோம். முதலமைச்சர் கொடியேற்றிய போது அதுவே நடைமுறைப்படுத்தப்பட்டது.நாம் நமது எதிர்ப்பை எவ்வித சமரசமுமின்றி வெளிப்படுத்த வேண்டும். ஏனெனில் இந்த நாட்டில்மதச்சார்பின்மையைச் சீர்குலைக்க அவர்கள் எடுக்கும் ஒவ்வொரு சிறிய அடியையும் நாம் பல்வேறு நிலைகளில்எதிர்த்து நிற்க வேண்டும். நீதித்துறையாக இருந்தாலும் சரி, தேர்தல் ஆணையமாக இருந்தாலும் சரி, ஜனநாயகத்தின் அனைத்து முக்கியஅமைப்புகளும் இன்று கைப்பற்றப்பட்டு வருகின்றன. எனவே, இதுபோன்ற சூழ்நிலையில், நாம்போராடி இந்த வகுப்புவாத சக்திகளைப் பின்னுக்குத்தள்ள ஒரே வழி மக்களின் ஒன்றுபட்ட எதிர்ப்பே ஆகும். அதனால்தான் அனைத்துத் தரப்பு மக்களைஒன்றுபடுத்துவது இன்று நமது முதன்மையான பணியாக உள்ளது.

இளைய தலைமுறையின் எழுச்சியும் வழிகாட்டுதலும்

அனைத்துச் சமூகங்கள், சாதிகள் மற்றும் மதங்களைச் சேர்ந்த மக்களின் உண்மையான ஒற்றுமையே, நமது அரசியலமைப்பையும் அதன் அடிப்படைத் தத்துவங்களையும் நாம் காப்பாற்ற முடியும் என்பதற்கான ஒரே உத்தரவாதமாகும். நமக்குநம்பிக்கையளிப்பது என்னவென்றால், தில்லியில் பல்லாயிரக்கணக்கில் திரண்ட இளைஞர்கள் மற்றும்மாணவர்களின் மிகப்பெரிய எழுச்சியேயாகும். தேர்வுத் தாள் கசிவுகளுக்கு எதிரான போராட்டத்தில் ஒருலட்சத்திற்கும் அதிகமான இளைஞர்களும் மாணவர்களும் தங்களின் எதிர்காலத்திற்காகத் திரண்டனர்.மக்களை மத அடிப்படையில் பிரிக்க முயலும் ஒரு ஆட்சி நம்மிடம் உள்ளது என்பதை இளைய தலைமுறையினர்தெளிவாக உணர்ந்துள்ளனர். அந்தப் போராட்டத்தின் போது அவர்கள் முழக்கமிட்டது போல: ‘ஜப் மோடி தர்தா ஹை, ஹிந்து-முஸ்லிம் கர்தா ஹை’ (மோடி அஞ்சும்போது, ஹிந்து-முஸ்லிம் பிரிவினையைச் செய்கிறார்). அகில இந்திய மாணவர்கள் சங்கத்தின் (AISA) தலைவர்அபிஜித் மஜும்தார், ஜந்தர் மந்தர் மேடையில் பேசும்போது, “என் பெயர் காலித் என்று இருந்திருந்தால், இந்நேரம் நான் சிறையில் அடைக்கப்பட்டிருப்பேன்” என்றார்.

மதத்தின் அடிப்படையில் மோடி அரசு நாட்டின் குடிமக்களை எவ்வாறு குறிவைத்து ஒடுக்குகிறது என்பதைஇன்றைய இளைஞர்கள் நன்றாகவே அறிவார்கள். அவர்களின் அசைக்க முடியாத ஒற்றுமையும், தொடர்ச்சியான உறுதியான போராட்டமும்தான் ஒன்றிய கல்வி அமைச்சரின் ராஜினாமா என்றகோரிக்கையை ஏற்க அரசாங்கத்தை நிர்பந்தித்தது. இந்த நாட்டின் துடிப்புமிக்க இளைஞர்கள் நமக்குச் சரியானவழியைக் காட்டுகிறார்கள். மதப் பிரிவினை மற்றும் சாதி, மத ரீதியான அணி திரட்டல் முயற்சிகளைத் துணிச்சலுடன் முறியடியுங்கள். அதை நாம்வெற்றிகரமாகச் செய்தால், நமது விடுதலைப் போராட்டத்தின் பாரம்பரியத்தையும், நமது குடியரசுஅரசியலமைப்பையும் பாதுகாக்கும் மாபெரும் பணியைஇந்த நாட்டு மக்கள் தங்களின் கைகளில் எடுத்துக்கொள்வார்கள் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.தமிழில் : எஸ்.ஏ.ராஜேந்திரன்