தீக்கதிர் முக்கிய செய்திகள்
2 Oct 2026, 9:29 pm

தீக்கதிர் முக்கிய செய்திகள்

ஆம் ஆத்மி மூத்தத் தலைவர் அனுராக் தண்டா

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வாக்குகளைத் திருடுகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டம் நடத்தினோம். ஆனால், திசை திருப்பும் விதமாக அதிஷி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களைக் கைது செய்து காவலில் அடைத்துள்ளது ஒன்றிய அரசு. இது நல்லதல்ல; வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

பி.ஆர்.எஸ் மூத்த தலைவர் ஜீவன் ரெட்டி

பாஜகவுக்கு எதிரான வாக்காளர்களை, வாக்காளர் பட்டியலிலிருந்து திட்டமிட்டு நீக்குவதன் மூலம் பாஜக தேர்தல்களைத் தன்வசப்படுத்திக் கொள்கிறது. இந்த வகைத் திருட்டுக்கு ஞானேஷ் குமார் உதவுகிறார். எதிர்க்கட்சிகளின் போராட்டத்திற்குத் தொடர்ச்சியாக ஆதரவு தருவோம்.

காங்கிரஸ் எம்.பி. பிரமோத் திவாரி

பிரதமர் மோடி, அமித் ஷா மற்றும் ஞானேஷ் குமார் ஆகியோர் ஜனநாயக அமைப்புகளைச் சீர்குலைக்கின்றனர். தில்லி ஜந்தர் மந்தரில் மேற்கொள்ளப்பட்ட கைது நடவடிக்கை நல்லதல்ல. இளைஞர்கள் - மாணவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். மோடி அரசின் இந்த அடாவடி நடவடிக்கைகளை ‘இந்தியா’ கூட்டணி உறுதியுடன் எதிர்த்துப் போராடும்.

சி.ஜே.பி நிறுவனர் அபிஜீத் திப்கே

2 மாதங்களுக்கு முன் நீட் முறைகேடுகளுக்கு எதிராக போராடினோம். தற்போது எஸ்.ஐ.ஆர் - ஞானேஷ் குமாருக்கு எதிராக போராடி வருகிறோம். இரண்டு மாதங்களுக்குள் மீண்டும் போராட்டம் நடத்த வேண்டிய அளவுக்கு மோடி அரசு திறனற்றதாக உள்ளது.