முந்தய பக்கம்

அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

1 hour before
அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை, செப் 25-அங்கன்வாடி மையங்களில் காலிப்பணியிடத்தை நிரப்பக்கோரி திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கெஜவள்ளி தலைமை தாங்கினார். காயத்ரி வரவேற்றார்.

கலைவாணி, கெஜலக்ஷ்மி, சங்கீதா வாழ்த்துரை வழங்கினர். சிஐடியு சங்கர் சிறப்புரையாற்றினார்.

அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அங்கன்வாடி மையங்களில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். அங்கன்வாடி மையத்திற்கு வரும் குழந்தைகளின் உணவு செலவினத் தொகையை முன் பணமாகவோ அல்லது மாதம் மாதமாகவோ வழங்கிட வேண்டும்.

அடிப்படை ஊதியம் ரூபாய் 18,000 என்ற தேர்தல் வாக்குறுதியை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. சித்ரா நன்றி கூறினார்.

Share
FacebookXWhatsAppTelegram