தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

காலத்தை வென்றவர்கள் புதுச்சேரி பஞ்சாலைத் தியாகிகளின் 90-ஆம் ஆண்டு நினைவு நாள் - எஸ்.ராமச்சந்திரன்

29 Jul 2026, 10:48 pm
காலத்தை  வென்றவர்கள் புதுச்சேரி பஞ்சாலைத் தியாகிகளின் 90-ஆம் ஆண்டு நினைவு நாள் - எஸ்.ராமச்சந்திரன்

காலத்தை வென்றவர்கள் புதுச்சேரி பஞ்சாலைத் தியாகிகளின் 90-ஆம் ஆண்டு நினைவு நாள் - எஸ்.ராமச்சந்திரன்

புதுச்சேரியின் வரலாற்றில் உழைக்கும் வர்க்கத்தின் ரத்தத்தால் எழுதப்பட்ட வீரஞ்செறிந்த நாளான ஜூலை 30, ஏகாதிபத்திய அடக்குமுறைக்கு எதிரான போராட்டத்தின் அடையாளமாகத் திகழ்கிறது.

முதலாளித்துவச் சுரண்டலையும் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் கொடூர முகத்தையும் எதிர்த்து நெஞ்சை நிமிர்த்தி நின்ற புதுச்சேரி பஞ்சாலைத் தொழிலாளர்களின் தியாகத்தின் 90-வது ஆண்டு நினைவு தினம் இதுவாகும்.

90 ஆண்டுகளுக்கு முன்பு, ‘எட்டு மணி நேர வேலை, சங்கம் அமைக்கும் உரிமை, போராடும் உரிமை’ ஆகிய நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து சுதேசி பஞ்சாலைத் தொழிலாளர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தைத் தொடங்கினர்.

ஆனால், உழைக்கும் மக்களின் நியாயமான குரலை நசுக்க முற்பட்ட பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் இந்திய ராணுவம், தொழிலாளர்கள் மீது கொடூரமான தாக்குதலைக் கட்டவிழ்த்து விட்டது. உழைக்கும் வர்க்கத்தின் 12 தோழர்களைச் சுட்டுக் கொன்று, நூற்றுக்கும் மேற்பட்டோரை ரத்த வெள்ளத்தில் மிதக்க வைத்தது அந்த பாசிச அதிகாரம்.

எனினும், தியாகிகளின் அந்த ரத்தம் வீண்போகவில்லை. மக்கள் தலைவர் தோழர் வ. சுப்பையா மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் சமரசமற்ற தொடர் போராட்டங்களால், ஆசியாவிலேயே முதன்முறையாக புதுச்சேரியில் 8 மணி நேர வேலை, சங்கம் வைக்கும் உரிமை மற்றும் குறைந்தபட்ச ஊதியம் உள்ளிட்ட எண்ணற்ற தொழிலாளர் நலச் சட்டங்கள் நடைமுறைக்கு வந்தன.

இது தொழிலாளர் வர்க்கத்தின் மகத்தான வெற்றியாகவும், தியாகிகளின் உயிர் உரமாகி விளைந்த சரித்திரமாகவும் மாறியது. ஆனால், வரலாற்றில் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்திடம் போராடிப் பெற்ற உரிமைகளை, இன்றைய கார்ப்பரேட் - மதவாதக் கூட்டணி அரசானது அடியோடு பறித்து வருவது இன்றைய தொழிலாளர் வர்க்கத்தின் முன் உள்ள மிகப் பெரிய சவாலாகும். ஆசியாவிலேயே முதன்முதலாக புதுச்சேரி மண்ணில்தான் 8 மணி நேர வேலை வென்றெடுக்கப் பட்டது.

ஆனால் இன்று, ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள 4 தொழிலாளர் விரோதத் தொகுப்புச் சட்டங்கள், மீண்டும் 12 மணி நேர வேலைக்கு வழிவகுத்து, உழைக்கும் மக்களை மீண்டும் அடிமைப்படுத்தத் துடிக்கின்றன.

எந்த சுதேசி பஞ்சாலை முன்பு நம் தோழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்களோ, அதே சுதேசி, பாரதி, ஏ.எப்டி உள்ளிட்ட பஞ்சாலைகளையும், புதுச்சேரியின் பொதுத்துறை நிறுவனங்களையும் இன்றைய அரசுகள் மூடி கார்ப்பரேட்டுகளுக்குத் தாரைவார்க்கத் துடிக்கின்றன.

எவ்வித சமூகப் பாதுகாப்பும் இன்றி ஒப்பந்தத் தொழிலாளர்களாகச் சுரண்டப்படும் நிலையை மாற்றி, சம வேலைக்கு சம ஊதியம் மற்றும் வேலை நிரந்தரம் ஆகியவற்றுக்காக உழைக்கும் வர்க்கம் சமரசமின்றிப் போராட வேண்டிய வரலாற்றுக் கட்டாயத்தில் உள்ளது.

தொழிலாளர்களை மதத்தின் பெயராலும் சாதியின் பெயராலும் பிளவுபடுத்தி, கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்யும் அரசுகளின் சதியை முறியடித்து, “தொழிலாளர் வர்க்கம்” என்ற ஒற்றைக் குடையின் கீழ் நாம் ஒன்றிணைய வேண்டும்.

90 ஆண்டுகளுக்கு முன் தோழர்கள் சிந்திய ரத்தம் இன்றைய நம் உரிமைகளுக்கானது. அவர்கள் விட்டுச் சென்ற வர்க்கப் போராட்டக் கொடியை உயர்த்திப் பிடிக்க வேண்டியது இன்றைய இளைய தலைமுறை மற்றும் தொழிலாளர்களின் அசைக்க முடியாத கடமையாகும்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.