தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

புதுச்சேரி நியமனப் பதவிகளில் பெண்களுக்கு வாய்ப்பளித்து அரசியல் அதிகாரம் வழங்கிடுக! - வெ.பெருமாள்

29 Jul 2026, 10:43 pm
புதுச்சேரி நியமனப் பதவிகளில் பெண்களுக்கு வாய்ப்பளித்து அரசியல் அதிகாரம் வழங்கிடுக! - வெ.பெருமாள்

புதுச்சேரி நியமனப் பதவிகளில் பெண்களுக்கு வாய்ப்பளித்து அரசியல் அதிகாரம் வழங்கிடுக! - வெ.பெருமாள்

பெண்களுக்கு அரசியல் அதிகாரம், பொருளாதார சுதந்திரம் என மனுவாத பாஜக வெற்று முழக்கம் இடுகிறது. பாஜகவின் அதே பாசாங்கு அரசியலையே புதுச்சேரி என்.ஆர்.காங்கிரசும் பின்பற்றுகிறது. புதுச்சேரி சட்டப்பேரவையில் ஒரு பெண் உறுப்பினர் கூட இடம் பெறவில்லை. 15 ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் பெண்கள் அரசியல் அதிகாரம் பெறாமல் தடுக்கப்பட்டுள்ளனர். உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாததால் புதுச்சேரி கிராமப்புற வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளதை மத்திய தணிக் கைக்குழு அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது. ஆகவே, பாஜக - என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி அரசு தனது மக்கள் விரோத, பெண்கள் விரோத அரசிய லைக் கைவிட்டு, பெண்களுக்கு அரசியல் அதிகாரம் வழங்கி மெய்ப்பிப்பது அவசியமாகும். மூன்று நியமன எம்.எல்.ஏ. பதவிகளில் பெண்களை நியமிக்கவும் உள் ளாட்சித் தேர்தலை நடத்தவும் முன்வர வேண்டும்.

முழுமையுறாத ஆட்சி

புதுச்சேரி 16-ஆவது சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்து முழுமையான ஆட்சி அமையவில்லை. தவணை முறையில் அமைச்சர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர்; துறைகளும் ஒதுக்கீடு செய்யப்பட வில்லை. சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்வு நடைபெறவில்லை. நியமன எம்.எல்.ஏ. பதவிப் பங்கீட்டில் இழுபறி தொடர்கிறது. 77 நாட்களுக்குப் பின் னரே அமைச்சர்களுக்குத் துறை ஒதுக்கீடு தொ டர்பான பட்டியல் ஆளுநரிடம் ஒப்படைக்கப்பட்டது.

2026 தேர்தலில் பாஜகவுக்குப் பெரும் பின்ன டைவு ஏற்பட்ட போதிலும், கடந்த 2021-இல் ஒதுக்கிய பதவிகளையும் துறைகளையும் அது வலியுறுத்து கிறது. என்.ஆர். காங்கிரஸ் சபாநாயகர் பதவி மற்றும் ஒரு நியமன எம்.எல்.ஏ. பதவியைக் கேட்கிறது. பாஜக வின் அதிகார வளையத்துக்குள் சிக்கியுள்ள முதல்வர் என். ரங்கசாமியால் சுதந்திரமாகச் செயல்பட முடிய வில்லை. நியமன எம்.எல்.ஏ. பதவிகளில் ஒரு இடம் கேட்டு பாஜகவிடம் கெஞ்சுவது என்பது, என். ரங்கசாமி யின் கடந்த கால அரசியல் பிழைகளின் விளைவாகும்.

மாநில நியமன எம்எல்ஏ உரிமைப் பறிப்பு

என்.ஆர். காங்கிரஸ் ஆட்சியில் (2011 - 2016) நியமன எம்.எல்.ஏ-க்களை நியமனம் செய்ய அப்போதைய ஒன்றிய காங்கிரஸ் கூட்டணி அரசு அனுமதிக்கவில்லை. 2014-இல் மத்தியில் பாஜக ஆட்சி அமைந்தவுடன், ஒரு நியமனப் பதவியை பாஜகவுக்கு விட்டுக்கொடுத்து, இரண்டு நியமன எம்.எல்.ஏ-க்களை என்.ஆர். காங்கி ரஸ் பெற்றது. பின்னர் வந்த புதுச்சேரி காங்கிரஸ் ஆட்சி யில் (2016 - 2021), மூன்று நியமன எம்.எல்.ஏ-க்களைத் தன்னிச்சையாக ஒன்றிய பாஜக நியமித்தது. நியமன எம்.எல்.ஏ. விவகாரத்தில் பாஜகவின் எதேச்சதிகாரப் போக்கை, அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த என்.ரங்கசாமி கண்டிக்கவில்லை. மாறாக, நியமன உறுப்பினர்களைச் சட்டப்பேரவைக்குள் அனுமதிக்க வேண்டுமெனச் சொல்லிப் பேரவையிலிருந்து வெளி நடப்பு செய்தார்.

இந்நிலையில், அடுத்து வந்த என்.ஆர். காங்கி ரஸ் - பாஜக கூட்டணி ஆட்சியின் போது (2021 - 2026), மூன்று நியமனப் பதவிகளையும் பாஜக தன்னிச்சை யாகப் பறித்துக்கொண்டது. காங்கிரசின் வஞ்ச கத்திற்குப் பழிதீர்ப்பதாகக் கருதிக்கொண்டு, பாஜக வின் இந்த எதேச்சதிகாரச் செயலுக்கு என்.ஆர். காங்கிரஸ் துணைபோனது. இதனால் மாநி லத்தில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், ஒன்றிய அரசு நேரடியாக நியமன எம்எல்ஏக்களை நியமிக்கும் என்ற நிலைக்கு மாநில உரிமை பறிக்கப்பட்டுள்ளது.

நியமன எம்.எல்.ஏ. நடைமுறை

புதுச்சேரி யூனியன் பிரதேச ஆட்சிப் பரப்புச் சட்டம் 1963, பிரிவு 3(3)-ன் கீழ், மூன்று பேருக்கு மிகாமல் நியமன உறுப்பினர்களை நியமிக்க வழிவகை செய்கிறது. அவர்கள் அரசு ஊழியராக இருக்கக் கூடாது என்றும் குறிப்பிடுகிறது. 1985-86 முதல் 2011-16 வரையில், மாநில அரசின் பரிந்துரையின் படி, ஆளுநரால் ஒன்றிய உள்துறைக்குப் பரிந்துரைக் கப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் இந்த நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டன. மத்தியில் பாஜக அதிகாரத்துக்கு வந்த பின் கூட்டாட்சி முறை மற்றும் ஜனநாயகம் முற்றிலும் கேலிக்கூத்தாகிவிட்டது. சட்டம் மற்றும் நடைமுறை களை மீறி நேரடியாகப் புதுச்சேரி நியமன எம்.எல்.ஏ-க் களை நியமித்து, அவர்களைப் பயன்படுத்தி ஆட்சி கலைக்கப்படுகிறது. கட்சிக்குள் நடக்கும் பதவிச் சண்டையைச் சீர்செய்ய, ‘சுழற்சி முறையில் நியமன எம்எல்ஏ பதவி மாற்றப்படுகிறது’ என, ஆணவத்தோடு அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறது பாஜக அரசு.

சட்டத்தின் பின்னணி

யூனியன் பிரதேசங்கள் ஆட்சிப் பரப்புச் சட்ட மானது 1963 ஆம் ஆண்டு மக்களவையில் மே 3-ஆம் தேதியும், மாநிலங்களவையில் மே 10-ஆம் தேதியும் தாக்கல் செய்யப்பட்டது. பல அம்சங்கள் விவாதிக்கப்பட்ட போதிலும், நியமன உறுப்பினர்கள் பதவி குறித்து தீவிர விவாதங்கள் நடைபெற்றன. ஆளுங்கட்சி உறுப்பினர்கள், ‘தேர்தல் மூலம் சட்டப்பேரவையில் இடம்பெறாத ஒடுக்கப் பட்ட சமூகப் பிரிவினருக்கு வாய்ப்பளிக்க முடியும்’ என்றனர். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர், ‘இது ஜனநாயகமற்றது; தவறுகளுக்கு வழிவகுக்கும்’ என வாதாடினர். ‘ஒடுக்கப்பட்ட பிரிவினர், பெண்கள் உள்ளிட்ட பின்தங்கிய பிரிவினருக்கு வாய்ப்பளித்திட வேண்டும்’ என்பதே பெரும்பான்மை உறுப்பி னர்களின் கருத்தாக இருந்தது.

விவாதங்களுக்கு விளக்கம் அளித்து அப்போ தைய உள்துறை அமைச்சர் லால்பகதூர் சாஸ்திரி அவர்கள், “நியமன உறுப்பினர் பதவி அவசியமானது. நாட்டில் பல்வேறு பழங்குடியினப் பிரிவுகள் உள்ளன; அதிக எண்ணிக்கை கொண்ட பிரிவின ருக்கும், பெண்களுக்கும் வாய்ப்பளிக்கலாம். கல்வி யாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் தகு தியான மக்கள் பிரிவினருக்கும் வாய்ப்பளிக்கலாம். இவர்கள் சட்டப்பேரவையில் இடம்பெற்றால் சிறப்பான பங்களிப்புச் செய்ய முடியும்” என்று குறிப்பிட் டிருந்தார். சட்டம் நிறைவேற்றப்படும் போது நாடாளு மன்றத்தில் எழுந்த உணர்வுகளும் விவாதங்களும் இன்றைக்கும் மிகப் பொருத்தமானதாகும்.

நீதிமன்றத் தீர்ப்பும் பரிந்துரைகளும்

2016 புதுச்சேரி காங்கிரஸ் ஆட்சியில், ஒன்றிய பாஜக அரசு நேரடியாக பாஜக நிர்வாகிகள் 3 பேரை நியமன எம்.எல்.ஏ-க்களாகத் திணித்தது. இந்த ஜன நாயக விரோதச் செயலை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், 22.03.2018-இல் சென்னை உயர்நீதி மன்றம் இறுதித் தீர்ப்பு வழங்கியது. நியமன எம்.எல்.ஏ-க்கள் நியமனம் செல்லும் என்றும், தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ-க்களுக்கு உள்ள அனைத்து அதிகாரங்களும் இவர்களுக்கும் பொ ருந்தும் எனவும் தீர்ப்பளித்தது. மேலும், நியமன நடைமுறை குறித்து உயர்நீதி மன்றம் பின்வரும் 4 பரிந்துரைகளை வழங்கியது:

l நியமன எம்.எல்.ஏ-க்கள் நியமனம் எங்கு இருந்து துவங்குவது என்ற தெளிவான நடைமுறை வகுக்கப்பட வேண்டும். lயூனியன் பிரதேசச் சட்டம் 3(3) பாராவில், எந்த அலுவலகத்தால் நியமனச் செயல்முறை அதிகா ரத்தைப் பயன்படுத்துவது என்பது வரையறை செய்யப்பட வேண்டும்.

lபதவிக்குத் தகுதி பெற்ற ஆளுமையை உருவாக்கும் தகுதிகள் மற்றும் பண்புகள் குறிப்பிடப்பட வேண்டும்.

lநியமனம் செய்யப்படும் உறுப்பினர், அவர் சார்ந்த சட்டமன்றக் கட்சியில் அங்கம் வகிப்பார்.

ஆனால், ஏழு ஆண்டுகள் ஆகியும் நீதிமன்றப் பரிந்துரைகள் பரிசீலிக்கப்படவில்லை.

பெண்களுக்குப் பிரதிநிதித்துவம் வழங்கிடுக!

16-ஆவது சட்டப்பேரவையில் ஒரு பெண் உறுப்பி னர் கூட இடம்பெறவில்லை. சரிபாதிக்கு மேல் பெண்கள் இருந்தும், பெரிய கட்சிகள் பெண் வேட்பா ளர்களை நிறுத்தவில்லை. 1963 சட்டத்தின் பின்ன ணியை உத்தேசித்து, நடப்புச் சட்டப்பேரவையில் மூன்று பெண்களுக்கு நியமன எம்.எல்.ஏ. பதவி வழங்கிட மாநில அரசு முன்வர வேண்டும். மீன வர்கள் மற்றும் பழங்குடியின மக்கள் பிரிவினருக்குத் தலா ஒரு இடமும், தகுதியான நிபுணத்துவம் வாய்ந்த மக்கள் பிரிவிலிருந்து ஒரு இடமும் என பெண்களுக்கே நியமன உறுப்பினர் பதவி வழங்க வேண்டும். இவ்வாறு வழங்குவது சட்டப்பேரவையின் செயல்பாட்டில் நல்ல முன்னேற்றத்தை அளிக்கும்.

மத்தியில் பாஜக அதிகாரத்துக்கு வந்த பின், கூட்டாட்சி முறை மற்றும் ஜனநாயகம் கேலிக் கூத்தாகிவருகிறது. பாஜக தனது நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கையை உயர்த்திக் கொண்டு, ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’, தொகுதி மறுசீரமைப்பு மசோ தாக்கள் மூலம் அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்ப டையைத் தகர்க்க முயல்கிறது. இந்த ஆபத்தை புதுச்சேரி முதல்வர் என்.ரங்க சாமி அவர்கள் உணர்ந்திருப்பார். புதுச்சேரிக்கு முழு மாநில அந்தஸ்து பெறுவது மக்களின் உணர் வாக இருக்கிறது. அதற்கு முன்நிபந்தனையாக இருப்பது, எதேச்சதிகார பாஜகவின் மக்கள் விரோ தக் கொள்கைகளுக்கு எதிராக வெகுமக்களை அணிதிரட்டுவதாகும். இப்பணியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதியாக மேற்கொண்டு வரு கிறது. முதல்வர் என்.ரங்கசாமி தனது அரசியல் பயணத்தை மாற்றியமைப்பது ஜனநாயக அரசி யலுக்கும் மாநில வளர்ச்சிக்கும் வழிவகுத்திடும்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.