‘மிர்சாத்தின் சிறிய புத்தகம்’ வெளியீட்டு விழா
9 hours before
<p><strong>‘மிர்சாத்தின் சிறிய புத்தகம்’ வெளியீட்டு விழா </strong></p><p>தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் அறம் கிளை தலைவர் அக்கு ஹீலர் உமர் ஃபரூக் எழுதிய 50-வது நூலான ‘மிர்சாத்தின் சிறிய புத்தகம்’ வெளியீட்டு விழா சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ஞாயிறன்று (ஆக.30) நடைபெற்றது. அராஃபத் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் நூலினை எழுத்தாளர் கபிலன் வைரமுத்து வெளியிட முதல் பிரதியை மார்க்சிய ஆசான் எஸ். ஏ. பெருமாள் பெற்றுக்கொண்டார். நிகழ்வில் இலக்கியத் திறனாய்வாளர் மணிமாறன், பதிப்பாளர் வேடியப்பன், கிளை நிர்வாகிகள் பேரின்பராஜன், சண்முக லட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.</p>
