தீக்கதிர் விரைவு செய்திகள்
yesterday

இஸ்ரேல் உடனான உறவுக்கு ராகுல் காந்தி திடீர் ஆதரவு

பினராயி விஜயன் கடும் கண்டனம்சில தினங்களுக்கு முன்பு அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழக பேராசிரியர் ராபர்ட் பேப் உடனான நிகழ்வில் காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித்தலைவருமான ராகுல் காந்தி,“இஸ்ரேலுடன் வலுவான உறவையும், ஆயுதப்படை மற்றும் திட்டமிடல் நலன்களையும் ஆதரிக்கிறேன். கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதிஹமாஸ் தாக்குதலையும், அதற்கு பதிலடியாக காசா மீதான நடவடிக்கையையும் கண்டிக்கிறேன்” என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

இந்நிலையில், இஸ்ரேல் குறித்த ராகுல் காந்தியின் கருத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், கேரள எதிர்க்கட்சித் தலைவருமான பினராயி விஜயன்,“ராகுல் காந்தியின் பேச்சு காங்கிரசின் வெளிப்படையான இரட்டை வேடத்தை

யும், ஏகாதிபத்திய ஆதரவு நிலைப்பாட்டையும் காட்டுகிறது. தற்போதைய காலகட்டத்தில் காலத்தின் மிகக் கொடூரமான இனப்படுகொலைகளில் ஒன்றை காசா எதிர்கொண்டு, ஆயிரக்கணக்கான அப்பாவி குழந்தைகள் பலியாகிவரும்இந்த நேரத்தில், அந்தப் படுகொலைகளுக்குப் பொறுப்பான ஒரு நாட்டுடன் வலுவான உறவுகளையும், ஆயுதக் கொள்முதலையும் ராகுல் காந்தி வெளிப்படையாக ஆதரிக்கிறார். இந்தப் பேரழிவுக்கு மத்தியில் ஒரு ராஜதந்திர சமநிலையைக் கையாள அவர் மேற்கொள்ளும் முயற்சி எவ்விதத்திலும் நியாயப்படுத்த முடியாதது. ஏகாதிபத்தியத்திற்கு எதிராக உறுதியாக நின்று, பாலஸ்தீனப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்த நேருவின் வெளியுறவுக் கொள்கையின்பாரம்பரியத்தையும் அவரது இந்த ஏகாதிபத்திய ஆதரவு நிலைப்பாடு சிதைக்கிறது. மனிதாபிமானம் சோதனைக்கு உள்ளாக்கப்படும் நேரத்தில் எந்தவொருசமநிலைப் போக்கிற்கும் இடமில்லை” என அவர் கண்டனம் தெரிவித்தார்.

100 தொகுதிகளைக் கேட்கும் கூட்டணிக் கட்சிகள்

கடும் நெருக்கடியில் பாஜக403 தொகுதிகளைக் கொண்ட உத்தரப்பிரதேச சட்டபேரவைத் தேர்தல் அடுத்தாண்டு பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் நடைபெற உள்ளது. இந்நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் கடந்ததேர்தலை விட அதிக தொகுதிகளைக் கேட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த 2022 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 376 இடங்களிலும் (தாமரை சின்னம் போட்டியிட்ட கட்சிகள் சேர்த்து), கூட்டணிக் கட்சிகள் 27 இடங்களிலும் (நிஷாத், அப்னா தளம்) போட்டியிட்டன. ஆனால் இம்முறை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள நிஷாத் (20 தொகுதிகள்), அப்னா தளம் - எஸ் (35 தொகுதிகள்), ராஷ்டிரிய லோக் தளம்(31 தொகுதிகள்), சுகேல்தேவ் பாரதிய சமாஜ் (19 தொகுதிகள்) உள்ளிட்டகூட்டணிக் கட்சிகள் 105 தொகுதிகளை கேட்கின்றன. ஆனால் பாஜக கூட்டணிக் கட்சிகளுக்குச் சுமார் 55 முதல் 60இடங்களை ஒதுக்கப் பரிசீலித்து வருகிறது. இதனை ஏற்க கூட்டணிக் கட்சிகள் மறுத்துவிட்டதாக செய்திகள்வெளியாகியுள்ளன. இதனால் பாஜக கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளது.