சிலைகளை உடைக்கலாம், சிந்தனையை முடியுமா?
19 Jul 2026, 9:42 pm

சிலைகளை உடைக்கலாம், சிந்தனையை முடியுமா?

தத்துவத்தை விவாதங்களால் எதிர்கொள்ளத் திராணியற்ற வகுப்புவாதப் பாசிசக் கும்பல், தங்க ளது இயலாமையைத் தீர்த்துக் கொள்ள மாமேதை களின் சிலைகளைத் தகர்க்கும் அராஜகப் பாதை யைத் தேர்ந்தெடுத்துள்ளது. மேற்கு வங்கத்தின் ராணிகஞ்ச் நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்கள், ராகுல் சாங்கிருத்தியாயனின் நூற்றாண்டு நிறை வை முன்னிட்டு 1994-ல் நிறுவிய ஒன்பது அடி உயர சிலையை இந்தக் கயவர்கள் உடைத்தெறிந்தது, ஜனநாயக விழுமியங்கள் மீதான படுபாதக மான தாக்குதலாகும். ராகுல்ஜி போன்ற அறிவு ஜீவிகளின் தத்துவப் பிடிப்பு, மூடநம்பிக்கைகளை யும் சுரண்டல் சித்தாந்தங்களையும் வேரறுக்கக் கூடியவை என்பதால், அச்சமடைந்த கும்பல் இத்தகைய இழிசெயலில் ஈடுபட்டுள்ளது.

30 மொழிகளில் புலமை பெற்று, 140-க்கும் மேற் பட்ட நூல்களைத் தந்த ராகுல் சாங்கிருத்தி யாயன், மதவாதத்தின் போலி முகத்திரையைக் கிழித்தெறிந்தவர். அவரது ‘வால்கா முதல் கங்கை வரை’ எனும் காவியம், யாக்ஞவல்கியன் போன் றோர் பிரும்ம தத்துவம் என்ற மாயையை உரு வாக்கி, மக்களை அடிமைப்படுத்திய புரட்டை வர லாற்றுப்பூர்வமாக அம்பலப்படுத்தியது. உழைக் கும் மக்கள் புரட்சிகரமான பொதுவுடைமைச் சிந்தனையைப் பெற்று விழிப்புணர்வு அடை வதைப் பொறுக்க முடியாத சக்திகளே, லெனின் சிலையை திரிபுராவில் தகர்த்ததைப் போல, தற் போது ராகுல்ஜியின் சிலையை இலக்கு வைத்துள்ளன.

மசூதியைத் தகர்த்து, ராமனின் பெயரால் கொள்ளையடித்துத் திரியும் இந்த வகுப்பு வாதப் பதர்களுக்கு, தத்துவத்தின் கூர்மை என்றும் புரியாது. ராகுல்ஜி சிலை என்பது வெறும் கல் அல்ல, அது உழைக்கும் மக்களின் அறிவுச் சொத்து; உழைப்பாளி வர்க்கத்தின் உணர்வுப்பூர்வ மான அடையாளம். சிலையை உடைப்பதன் மூலம் ராகுல்ஜியின் பொதுவுடைமைச் சிந்தனை யின் வேரை அவர்களால் ஒருபோதும் தீண்ட முடி யாது. வரலாறு நெடுகிலும் ஒடுக்குமுறைக்கு எதி ராகப் போராடிய மாமேதைகளின் சிலைகளைத் தகர்ப்பது, அந்தப் பாசிசக் கும்பலின் ஆண வத்தையே காட்டுகிறது. இது போன்ற வன்முறை கள் மூலம் வரலாற்றை மறைக்க நினைக்கும் இவர்களின் முயற்சி எப்போதும் பலிக்காது

தனது தந்தை ராகுல்ஜியின் சிலையழிப்பு குறித்து அவரது மகன் பேராசிரியர் ஜெட்டா சாங்கிருத்தியாயன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இது ஒரு நன்கு திட்டமிடப்பட்ட சதி என்று அம்பலப்படுத்தியுள்ளார். இது கிழக்கு நிலக்கரிச் சுரங்கங்களை கார்ப்பரேட் முதலைகளிடம் ஒப்படைக்கத் துடிக்கும் காவி சக்திகளின் சதியின் ஒரு பகுதியாகும். இக்கொடுமையைச் செய்த குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்யுமாறு முற்போக்குச் சக்திகள் ஒன்றிணைந்து வலுவான கண்டனக் குரலை எழுப்ப வேண்டும். மாமேதை ராகுல் சாங்கி ருத்தியாயனின் அறிவார்ந்த சுடர் எப்போதும் அணையாது; நிலைபெற்று விட்ட நியாயங்களை, நிலைகொள்ளாது தடுமாறும் தத்துவங்களால் ஒரு போதும் அழித்து விட முடியாது. மார்க்சிய மெய் ஞ்ஞானம் வீசும் ஒளியின் முன் வகுப்புவாத இருளால் நிற்க முடியாது.