தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விவசாய நிலத்தில் தேங்கிய மழைநீர்

12 hours before
விவசாய நிலத்தில் தேங்கிய மழைநீர்
<p><strong>விவசாய நிலத்தில் தேங்கிய மழைநீர்</strong></p><p>உதகை, செப்.19நீலகிரி மாவட்டத்தில் தற்போது பெய்து வரும் மழையால், குன்னூர் அருகே விவசாய நிலத்தில் மழைநீர் தேங்கி, பயிர்கள் சேதமடையும் சூழல் ஏற்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டத்தில் ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் வரை தென்மேற்கு பருவமழை பெய்யும். இந்த மழையை நம்பியே விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. இதுதவிர குடிநீர் தேவைகள், மின் உற்பத்திக்கு ஆதாரமாக உள்ள அணைகளில் நீர் இருப்பு அதிகரிப்பு ஆகியவையும் இதனை நம்பியே உள்ளன. நடப்பு ஆண்டிற்கான தென்மேற்கு பருவமழை ஜூன் தொடக்கத்தில் தொடங்கி, ஓரிரு நாட்கள் மட்டுமே பெய்தது. இந்த சூழலில் செப்டம்பர் மாத தொடக்கத்தில் இருந்து லேசான மழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக தமிழகம் வழியாக நிலவும் காற்றழுத்த தாழ்வு பாதை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்களான நீலகிரி, கோவை உள்பட மாவட்டங்களில் இடி மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. இதற்கிடையே, கடந்த சனிக்கிழமை முதலே நீலகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. உதகை, குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக உதகை, குன்னூர் நகரம் சுற்று வட்டார பகுதிகளான லவ்டேல், மஞ்சூர், தாவணை, மல்லிக்கொரை மற்றும் நீர்பிடிப்பு பகுதிகளான அவலாஞ்சி, அப்பர்பவானி, எமரால்டு உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக நல்ல மழை பெய்துவருகிறது.இந்நிலையில், குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழை காரணமாக, காட்டேரி அணை அருகே உள்ள கோலணிமட்டம் பகுதியில் பாலத்தில் அடைப்பு ஏற்பட்டு, தண்ணீர்விவசாய நிலங்களில் புகுந்துள்ளது. இதனால் பல ஏக்கர் பரப்பளவில் விளைபொருட்கள் சேதமடையும் அபாயம் உருவாகியுள்ளது. வருவாய் துறையினர் மற்றும் அதிகரட்டி பேரூராட்சி அதிகாரிகள் உடனடியாக பாலத்தில் உள்ள அடைப்பை சரி செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அந்தப் பகுதியில் உள்ள விவசாயிகள் தோட்டத்தை பாதுகாக்க தண்ணீரை வெளியேற்றும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். ஆனாலும் பாலத்தில் அடைப்பை சரி செய்தால் மட்டும்தான் நிரந்தர தீர்வு கிடைக்கும் என்பதால் உடனடியாக அடைப்பை சரி செய்ய விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.