ராணிப்பேட்டையில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் தொடக்கம்
13 hours before

ராணிப்பேட்டையில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் தொடக்கம்

ராணிப்பேட்டை, செப்.10-ராணிப்பேட்டை மாவட்டத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் மாவட்ட அளவிலான ‘முதலமைச்சர் கோப்பை – 2026’ விளையாட்டுப் போட்டிகள் தொடங்கின.

வாலாஜா வட்டம், வன்னிவேடு அரசினர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டியை மாவட்ட ஆட்சியர் ந. ப்ரியா ரவிச்சந்திரன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

செப். 9 முதல் செப். 30 வரை பள்ளி, கல்லூரி, பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்கள் ஆகிய 5 பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன. வன்னிவேடு, ஆற்காடு மற்றும் ராணிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு மையங்களில் கைப்பந்து, கபாடி, கால்பந்து, சிலம்பம், சதுரங்கம் உள்ளிட்ட போட்டிகள் நடந்து வருகின்றன. இந்நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் மோகனா, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ஞானசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.