முந்தய பக்கம்

ராணிப்பேட்டை ஊராட்சிகளில் ஆட்சியர் நேரில் ஆய்வு

6 Aug 2026, 12:32 am
ராணிப்பேட்டை ஊராட்சிகளில் ஆட்சியர் நேரில் ஆய்வு

ராணிப்பேட்டை ஊராட்சிகளில் ஆட்சியர் நேரில் ஆய்வு

ராணிப்பேட்டை,ஆக.5–ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நெடும்புலி மற்றும் நாகவேடு ஊராட்சி களில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணி களை மாவட்ட ஆட்சியர் ந.பிரியா ரவிச்சந்திரன் செவ்வாயன்று (ஆக. 4) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நெடும்புலி மற்றும் நாக வேடு ஊராட்சிகளில் ரூ. 24 லட்சம் மதிப்பீட்டில் நடை

பெற்று வரும் புதிய குளம்வெட்டும் பணிகளை விரைந்து முடிக்க ஆட்சி யர் உத்தரவிட்டார். தொடர்ந்து, முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான வீடு தேடி ரேசன் பொருட்கள் வழங்கும் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து பயனாளிகளி டம் அவர் கேட்டறிந்தார்.

மேலும், நாகவேடு ஊராட்சியில் இந்திய மக்கள் தொகை கணக் கெடுப்பு 2027 பணிகளின்

முன்னேற்றம் மற்றும்திடக்கழிவு மேலாண்மை மையத்தின் செயல்பாடு களை ஆட்சியர் பார்வையிட்டு அதிகாரி களுக்கு அறிவுரைகளை வழங்கி னார்.

Share
FacebookXWhatsAppTelegram