ராணிப்பேட்டையில் கல்விக் கடன் முகாம்
12 hours before

ராணிப்பேட்டையில் கல்விக் கடன் முகாம்

ராணிப்பேட்டை, அக். 27-ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு ஊராட்சி ஒன்றியம் அரப்பாக்கம் அன்னை மீரா தொழில்நுட்பவியல் கல்லூரியில், மாவட்ட நிர்வாகம் மற்றும் முன்னோடி வங்கிஇணைந்து நடத்திய மாபெரும் கல்விக் கடன்முகாம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ந.பிரியா ரவிச்சந்திரன் கலந்து கொண்டு 50 மாணவ-மாணவியருக்கு ரூ. 2.45 கோடி மதிப்பிலான கல்விக் கடன் உதவிகளை வழங்கிப் பேசினார். நடப்பாண்டில் ராணிப்

பேட்டை மாவட்டத்தில் 1,500 மாணவர்களுக்கு ரூ. 40 கோடி கல்விக் கடன் வழங்கஇலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருவதாகவும், மாணவர்கள் பிஎம் வித்யா லக்ஷ்மி இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

முகாமில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ராஜன், கல்லூரி இயக்குநர் பிரசாந்த், செயலாளர் ராமராஸ், முதல்வர் கோபிநாதன், வட்டாட்சியர் பன்னீர்செல்வம், வங்கி அலுவலர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் மாணவ-மாணவியர், பெற்றோர் பலர் கலந்து கொண்டனர்.