நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி நாளை ராணிப்பேட்டையில் தவிச மாவட்ட மாநாடு
yesterday

நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி நாளை ராணிப்பேட்டையில் தவிச மாவட்ட மாநாடு

ராணிப்பேட்டை, ஆக. 14-காலையில் கண் விழிப்பது முதல் இரவு உறங்கும் வரை இந்த மண்ணை நம்பி மட்டுமே வாழ்ந்து வரும் ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம் இன்று பெரும் கேள்விக்குறியாகியுள்ளது. ஏரிகள் மற்றும் பாசனக் கால்வாய்கள் தூர்வாரப்படாததால் மழைநீரைச் சேமிக்க முடியாமல் விவசாயிகள் திண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ராணிப்பேட்டை மாவட்ட 2-வது மாவட்ட மாநாடு ஆக16 அன்று ஆற்காட்டில் மாவட்டச் செயலாளர் எல்.சி.மணி தலைமையில் நடைபெறவுள்ளது. இம்மாநாட்டில், மாவட்டத்தின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் இயற்கை வளங்களைப் பாதுகாக்கவும் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன.

விவசாயம் மற்றும் நீர் மேலாண்மைஏரிகள் மற்றும் பாசனக் கால்வாய்களைத் தூர்வாரி மழை நீரைச் சேமிக்கவும், விவசாய நிலங்கள் மற்றும் நிலத்தடி நீரைப் பாதுகாக்கத் தடையற்ற மும்முனை மின்சாரம் வழங்கவும் கோரப்பட்டுள்ளது. மேலும், பாலாற்றின் பண்ணையாற்றில் ஒரு கிலோமீட்டருக்கு ஒரு தடுப்பணை வீதம் கட்டுவதுடன், நீர்நிலைகள் மற்றும் நீர்வரத்து வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை உடனடி

யாக அகற்ற வேண்டும் என வலி

யுறுத்தப்படுகிறது. டெல்டா மாவட்டங்களைப் போல நிரந்தர நேரடி நெல் கொள்முதல் நிலை யங்களை அமைப்பதுடன், உழவர் சந்தைகளை நவீனப்படுத்தி விளை பொருட்களுக்குச் சரியான விலை கிடைக்க ஆவன செய்ய வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரம்சிப்காட் தொழிற்சாலை ரசாயனக் கழிவுநீர், நகராட்சி குப்பைகள் மற்றும் சாக்கடை நீர் நேரடியாக பாலாற்றில் கலப்பதைத் தடுத்து நிலத்தடி நீர் மாசுபாட்டைச் சரிசெய்வதுடன், கனிம வளக் கொள்ளையைத் தடுக்க வேண்டும் என மாநாட்டில்

வலியுறுத்தப்படுகிறது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் 100 படுக்கைகள் கொண்ட பல்நோக்கு ஈ.எஸ்.ஐ தலைமை மருத்துவமனை அமைக்கப்பட வேண்டும். மேலும், நச்சு நீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுத்தி கரிக்கப்பட்ட குடிநீர் விநியோகத்தை உறுதி செய்யவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காஞ்சனகிரி மலையின் 60 ஏக்கர் சமதளப் பரப்பு மற்றும் காவிரிப்பாக்கம் ஏரி போன்ற பகுதிகளை அதிகாரப்பூர்வ சுற்றுலா மையங்களாக அறிவித்து உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும். தேங்கால் பகுதியில் புதிய அரசு வேளாண் கல்லூரி மற்றும் தாமரைப்பாக்கம் பகுதியில் அரசு கலைக் கல்லூரி நிறுவப்பட வேண்டும்.

கோரிக்கைகள்ராணிப்பேட்டை தொகுதியி லிருந்து பிரித்து காட்பாடியுடன் இணைக்கப்பட்ட முகுந்தராயபுரம், இலாலாப்பேட்டை, நரசிங்கபுரம் உள்ளிட்ட 9 ஊராட்சிகளை மீண்டும் ராணிப்பேட்டை சட்டமன்றத் தொகுதியுடன் இணைக்க வேண்டும். பொன்னை ஆற்றின் கரையில் உள்ள பொன்னை, கீரைதாத்து, பாலேங்குப்பம், ஆவுலரங்கா பள்ளி ஆகிய 4 ஊராட்சிகளை மக்களின் விருப்பப்படி வேலூர் மாவட்டத்திலிருந்து பிரித்து இராணிப்பேட்டை மாவட்டத்துடன் சோளிங்கர் வட்டத்தோடு இணைக்க வேண்டும். மேலும், மாவட்டம் துவங்கப்பட்டதிலிருந்து ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர்கள் அடிக்கடி மாற்றப்படுவதால் ஏற்படும் வளர்ச்சித் தொய்வைத் தவிர்க்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்படுகிறது.

கட்டமைப்பு, போக்குவரத்து மற்றும் சமூக நலன்: புதியராணிப்பேட்டை பேருந்து நிலையத்தி லிருந்து சென்னை, திருப்பத்தூர், ஓசூர், பெங்களூரு, மதுரை, பாண்டிச்சேரி உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு அரசு தொலைதூரப் பேருந்துகளை இயக்க வேண்டும். உயர் மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முழுமையான இழப்பீடு வழங்கு வதுடன், கீழ்மின்னல் மதுரை கன்னிகாபுரத்தில் 50 ஆண்டுகளாக வாழும் 105 குடும்பங்களுக்கு உடனடியாக வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். அரக்கோணத்தில் நடத்தப்பட்ட காத்திருப்புப் போராட்டத்தின் மூலம் ஏழு கோடி ரூபாய் நெல் கொள்முதல் பாக்கித் தொகையை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கச் செய்ததும், நெமிலியில் இடைத்தரகர்களால் ஏமாற்றப்பட்ட விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையைப் பெற்றுத் தந்ததும் சங்கத்தின் களப் போராட்டங்களின் சான்றாக உள்ளது.விவசாயிகளின் நலன்காக்க சனிக்கிழமையன்று ஆற்காடு பேருந்து நிலைய காந்தி சிலைக்கு மாலை அணிவித்து ஊர்வலத்துடன் மாநாடு துவங்குகிறது.