தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

இடிந்து விழும் நிலையில் உள்ள ஏ.எஸ்.சகஜானந்தா சமுதாயக் கூடத்தைப் புதுப்பிக்க வேண்டும் பழங்குடியினர் விடுதலை இயக்கம் வேண்டுகோள்

1 hour before
இடிந்து விழும் நிலையில் உள்ள ஏ.எஸ்.சகஜானந்தா சமுதாயக் கூடத்தைப் புதுப்பிக்க வேண்டும்  பழங்குடியினர் விடுதலை இயக்கம் வேண்டுகோள்

இடிந்து விழும் நிலையில் உள்ள ஏ.எஸ்.சகஜானந்தா சமுதாயக் கூடத்தைப் புதுப்பிக்க வேண்டும் பழங்குடியினர் விடுதலை இயக்கம் வேண்டுகோள்

ராணிப்பேட்டை, செப். 28-ராணிப்பேட்டை மாவட்டம், மேல் புதுப்பாக்கத்தில் அமைந்துள்ள ஏ.எஸ்.சகஜானந்தா சமுதாயக் கூடம் பல ஆண்டுகளாகப் பராமரிப்பின்றிப் பாழடைந்து, தற்போது இடிந்து விழும் அபாயகரமான நிலையில் உள்ளது. இதனை உடனடியாகப் புதுப்பித்து மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் எனப் பழங்குடியினர் விடுதலை இயக்கத்தின் ஒருங்கி

ணைப்பாளர் முனைவர் வி.அகத்தியன் தமிழ்நாடு முதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி, சமூக முன்னேற்றம் மற்றும் உரிமை களுக்காகப் பாடுபட்ட சுவாமி சகஜானந்தர் (1890–1969), சிதம்பரம் ஓமக்குளக்கரையில் ‘நந்தனார் மடம்’ அமைத்து ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி வளர்ச்சிக்காகப் பெரும் பணியாற்றிய சமூக சீர்திருத்தவாதி, ஆன்மிகவாதி, எழுத்தாளர் மற்றும் அரசியல் செயல்பாட்டாளர் ஆவார்.

அவர் பிறந்த மேல் புதுப்பாக்கத்தில், அவரது நினை

வாகவும் பொதுமக்கள் பயன்பாட்டிற் காகவும், அன்றைய தீண்டாமை ஒழிப்பு கமிட்டி தலைவர் எல். இளைய பெருமாள், எம்.பி. அவர்களின் தீவிர முயற்சியால் 1988ஆம் ஆண்டு இந்த சமுதாயக் கூடம் அமைக்கப்பட்டது. கடந்த பல ஆண்டுகளாகச் சமூக நல நிகழ்ச்சிகள், பொதுமக்கள் நிகழ்வு கள் மற்றும் விளிம்புநிலை மக்களின் பல்வேறு பயன்பாடுகளுக்கு இக்கூடம் முக்கிய இடமாக இருந்து வந்துள்ளது. தற்போது கட்டிடம் மிகவும் பழுதடைந்து, இடிந்து விழும் நிலையில் இருப்பதால் பொதுமக்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளது.

எனவே, சுவாமி சகஜானந்தர் பிறந்து வாழ்ந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க இடத்தில் அமைந்துள்ள இந்த சமுதாயக் கூடத்தை தமிழக அரசு சிறப்பு கவனம் செலுத்தி, உரிய நிதி ஒதுக்கீடு செய்து முழுமையாகப் புதுப்பித்து, மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு

வர வேண்டும் என தமிழ்நாடு முதல மைச்சர் மற்றும் சமூக நீதித்துறைக்கு முனைவர் வி.அகத்தியன் வலியுறுத்தி யுள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.