பறிபோகும் தகவலறியும் உரிமை
14 Aug 2026, 8:30 pm

பறிபோகும் தகவலறியும் உரிமை

மக்களாட்சியின் மாண்பையும் வெளிப்படைத்தன்மையையும் உறுதிசெய்யும் மிக முக்கியமானஆயுதம், இடதுசாரி கட்சிகளின் உதவியுடன் 2005ம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்டதே ‘தகவலுரிமைச் சட்டம்’. ஆனால், அச்சட்டத்தின் உயிர்நாடியாக விளங்கும் மத்திய தகவல் ஆணையமே இன்றுசெயலற்று, முடங்கிக் கிடப்பது மக்களாட்சித் தத்துவத்திற்கு விடுக்கப்பட்டுள்ள பெரும் சவாலாகும்.

தற்போது வெளியிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வத் தரவுகளின்படி, மத்திய தகவல் ஆணையத்தில் 40,083-க்கும் மேற்பட்ட வழக்குகள் (3,6350 மேல்முறையீடுகள் மற்றும் 3,733 புகார்கள்) தேங்கிக் கிடக்கின்றன. தலைமைத் தகவல் ஆணையர் ராஜ்குமார் கோயல்உட்பட அனைத்து 10 ஆணையர் பணியிடங்களும் முழுமையாக நிரப்பப்பட்டநிலையிலும், இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான வழக்குகள் நிலுவையில் இருப்பது பெரும்அதிர்ச்சியளிக்கிறது.

இதில் கொடுமை என்னவென்றால், தலைமைத் தகவல் ஆணையர் ஒருவரிடமே 5,317வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆகஸ்ட் மாதம் முதல் 12 நாட்களில், ஒட்டுமொத்த ஆணையமும் சேர்ந்து வெறும் 3 மேல்முறையீட்டு வழக்குகளை மட்டுமே தீர்த்து வைத்துள்ளது. 8 தகவல்ஆணையர்கள் ஒரு வழக்கைக்கூட விசாரிக்காமல் பூஜ்ஜிய செயல்திறனைக் காட்டியுள்ளனர். தலைமை ஆணையரின் சராசரி வழக்குத் தீர்வுவிகிதம் வெறும் 46 சதவீதமாகவே உள்ளது.

முழுப் பணியாளர்களுடன் இயங்கும் ஒருமுதன்மை அமைப்பு, இவ்வாறு ஆமை வேகத்தில் செயல்படுவது தற்செயலானது அல்ல; ஒன்றியத்தில் பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் திட்டமிட்டு தகவல்கள் மறைக்கப்படுகின்றன. சில தகவல்களை ஆணையம் தர மறுக்கிறது. இதுபோன்ற செயல்கள் தகவலுரிமைச் சட்டத்தின்வீரியத்தைக் குறைத்து, அதைச் செயலிழக்கச் செய்ய நடக்கும் திட்டமிட்ட மெத்தனப் போக்கோ என்ற ஐயத்தைவெளிப்படைத்தன்மை ஆர்வலர்களிடையே ஏற்படுத்தியுள்ளது. 2015-ஆம் ஆண்டில் ஆணையர்கள் இல்லாததால் வழக்குகள் தேங்கின; ஆனால் இன்றோ, அனைத்து ஆணையர்களும் இருந்தும் வழக்குகள் முடங்கிக் கிடக்கின்றன.

மக்களின் ‘தெரிந்துகொள்ளும் உரிமையை’ப் பறிக்கும் வகையில் தகவல் ஆணையம் இவ்வாறு மந்தகதியில் செயல்படுவதை வேடிக்கைபார்த்துக்கொண்டிருக்கும் ஒன்றிய பாஜகஅரசின் போக்கு கடுமையான கண்டனத்திற்குரியது. தகவல் ஆணையத்திற்குத் தேவையானசீர்திருத்தங்களை மேற்கொள்வதிலும், வழக்குகளை விரைந்து முடிக்க ஆணையர்களை முடக்கிமுடுக்கிவிடுவதிலும் ஒன்றிய அரசு முற்றிலும் தோல்வியடைந்துள்ளது. ஒன்றியத்தில் மட்டுமல்ல தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் இதேநிலையில்தான் தகவல் ஆணையங்கள் உள்ளன.

தகவல் ஆணையம் என்பது அதிகாரிகளின் கோப்புகளைப் பாதுகாக்கும் அரண் அல்ல; மக்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் ஜனநாயகத்தின் வாசல்! ஒன்றிய அரசு உடனடியாக தலையிட்டு, நிலுவை வழக்குகளை விரைந்து முடிக்கத்நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில், ‘தகவலுரிமைச் சட்டம்’ வெறும்காகித அளவிலான சட்டமாகவே எஞ்சிவிடும்.