சம்புவராயநல்லூர் கிராமத்திற்கு குடிநீர், தெருவிளக்கு வசதி செய்யக் கோரிக்கை!
2 hours before

சம்புவராயநல்லூர் கிராமத்திற்கு குடிநீர், தெருவிளக்கு வசதி செய்யக் கோரிக்கை!

திருவண்ணாமலை, ஜூலை 31 -திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி மேற்கு ஊராட்சியில் உள்ள சம்புவராயநல்லூர் மற்றும் ஸ்ரீராம் நகர் குடியிருப்பு ஆகிய பகுதிகளில் குடிநீர் விநியோகம் இல்லாததால் பொதுமக்கள் பெரிதும் தவித்து வருகின்றனர். எனவே, உடனடியாக அப்பகுதிகளுக்குக் குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும்.மேலும், கடந்த மூன்று மாதங்களாக அப்பகுதியில் தெருவிளக்குகள் எரியாமல் இருளில் மூழ்கியுள்ளது. எனவே, உடனடியாகத் தெருவிளக்குகளை அமைத்துத் தர வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் ஆரணி கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியரிடம் வெள்ளிக்கிழமை (ஜூலை 31) கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாற்றுத் திறனாளிகள் சங்க மாவட்டச் செயலாளர் ரமேஷ்பாபு மற்றும் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.