‘சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் லிமிடெட்’ (Samvardhana Motherson International Ltd.,)
yesterday
<p>‘சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் லிமிடெட்’ (Samvardhana Motherson International Ltd.,) நிறுவனம் அதன் ஐரோப்பா மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த கூட்டு நிறுவனங்களுடன் இணைந்து, வழிகாட்டி நிறுவனத்துடன் தமிழ்நாட்டில் ரூ. 11 ஆயிரம் கோடி முதலீடு செய்வதற்கு முடிவெடுத்துள்ளது. இதன்மூலம் வடிவமைப்பு, பொறியியல், உற்பத்தி, கூட்டிணைப்பு (Assembly) மற்றும் தளவாட வசதிகள் ஆகிய துறைகளில் சுமார் 7,000 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த ரூ. 11 ஆயிரம் கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழக முதல்வர் ச. ஜோசப் விஜய் முன்னிலையில் திங்களன்று லண்டனில் கையெழுத்தானது.</p>
