வாய்ப்பு வாசல் - அமர்த்தியா
yesterday

வாய்ப்பு வாசல் - அமர்த்தியா

எஸ்பிஐ வங்கியில் 1,538

பாரத ஸ்டேட் வங்கி (SBI) – யில் Junior Associate (Customer Support & Sales) பணியிடங்களுக்காக 1,538 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பம் வெளியாகியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிக்கை CRPD/CR/SPLDRIVE/2026-27/16 வெளியிடப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி – அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு – ஏப்ரல் 1, 2026 தேதியின்படி குறைந்த பட்சம் 20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், இதர பிரிவினர்களுக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வும் வழங்கப்படும்.

தேர்வுக் கட்டணம் – ஒபிசி பிரிவினர்களுக்கு ரூ.750 செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் இராணுவத்தினருக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.

தேர்வு முறை – முதற்கட்டத் தேர்வு (Prelims), முதன்மைத் தேர்வு (Mains) மற்றும் உள்ளூர் மொழித் தேர்வு ஆகியவற்றின் மூலம் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவர்.

மேலும் முழுமையான அறிவிப்பு, கல்வித்தகுதி, வயது வரம்பு, தேர்வு முறை மற்றும் ஆன்லைன் விண்ணப்ப விவரங்களை பெற யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி – ஆகஸ்ட் 27, 2026 ஆகும்.

டிஎஸ்பிஎஸ்சி 2 & 2ஏ821 காலிப்பணியிடங்கள்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு – II (தொகுதி II மற்றும் IIA பணிகள்) அறிவிக்கை எண். 07/2026-யின் மூலம் Deputy Commercial Tax Officer, Assistant Inspector, Sub-Registrar, Assistant Section Officer, Accountant மற்றும் Assistant உள்ளிட்ட

821 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வ

அறிவிக்கையுடன் தேர்விற்கான விண்ணப்பமும் வெளியிடப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி – ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு- ஜூலை 1, 2026 தேதியின்படி குறைந்தபட்ச வயதாக 18 முதல் அதிகபட்சமாக 32/34/37 வயதிற்குள் இருக்க வேண்டும் ஒரு சில பணியிடங்களுக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்ச்சி வழங்கப்படும்.

தேர்வு முறை- முதற்கட்டத் தேர்வு (Preliminary Examination) மற்றும் முதன்மைத் தேர்வு (Main Examination) என இரண்டு கட்டங்களாகத் தேர்வு நடைபெறும். முதற்கட்டத் தேர்வு நவம்பர் 1, 2026 அன்று நடைபெறும். முதற்கட்டத் தேர்வில் தகுதி பெறுபவர்கள் முதன்மைத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர். Group II மற்றும் Group IIA பணிகளுக்கான முதன்மைத் தேர்வு முறைகள் தனித்தனியாக நடைபெறும்.

விண்ணப்பக் கட்டணம்- One-Time Registration (OTR) கட்டணம் ரூ.150. பொது மற்றும் பிசி/எம் பிசி பிரிவினர்களுக்கு முதற்கட்டத் தேர்வுக் கட்டணம் ரூ.100 செலுத்தி ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். முதன்மைத் தேர்வுக் கட்டணம் ரூ.150. எஸ்சி/எஸ்டி ஆதரவற்ற விதவைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் இராணுவத்தினருக்கு தேர்வுக் கட்டணம் இல்லை.

தேர்விற்கான முதற்கட்டத் தேர்விற்கான தேர்வுக் கட்டணமாக ரூ.100 விண்ணப்பக் கட்டண விலக்கு கோராத விண்ணப்பதாரர்கள், ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் போது செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை – எழுத்துத் தேர்விற்கான பாடத்திட்டம், தேர்வு முறை, மதிப்பெண்கள் விபரம், காலியிடப் பகிர்வு மற்றும் பிற தகவல்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிக்கையைப் பார்வையிடலாம். முழுமையான அறிவிக்கையைப் பெற https://www.tnpsc.gov.in என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம்.ஆகஸ்ட் 11, 2026 முதல் விண்ணப்பங்களை நிரப்புவது தொடங்குகிறது. விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி செப்டம்பர் 9, 2026 ஆகும்.