காலை உணவு திட்டத்திற்கான உணவை அரசே தயாரித்து வழங்க வேண்டும்இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தல்
1 hour before

காலை உணவு திட்டத்திற்கான உணவை அரசே தயாரித்து வழங்க வேண்டும்இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தல்

சென்னை, ஆக. 24 –காலை உணவு திட்டத்தில், உணவுகளை அரசு பொறுப்பில் தயாரித்து வழங்க வேண்டுமென்று இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

சென்னையை அடுத்த பூந்தமல்லி வைத்தீஸ்வரன் கோயில் வீதியில் அரசு உதவி பெறும் ஆரம்பப் பள்ளி

மாணவர்களுக்கு திங்களன்று (ஆக.24)காலை உணவு வழங்கப்பட்டுள்ளது. பல்லி இருந்த அந்த உணவை உண்ட மாணவர்கள் 17 பேருக்கு வாந்தி,மயக்கம் ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்திய மாணவர் சங்கத்தின் மத்தியக்குழு உறுப்பினர் எஸ்.ஆனந்தகுமார் உள்ளிட்டோர் மாணவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

இது தொடர்பாக மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் சி.மிருதுளா, செயலாளர் தௌ.சம்சீர் அகமது ஆகி

யோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பள்ளி மாணவர்களுக்கான உணவுகளின் தரத்தை பரிசோதிக்காமல் வழங்குவதால் இதுபோன்ற நிகழ்வுகள் தொடர் கதையாக உள்ளன.தனியார் ஒப்பந்த முறையில் உணவு தயாரித்து வழங்கும் நிறுவனங்கள் அதிக லாபமீட்டுவதற்காக, ஒருங்கிணைந்த சமையலறை என்ற முறையில் ஒரே இடத்தில் அரசு கல்லூரி,விடுதிகளுக்கும் உணவு தயாரிப்பதால், அதன் தரத்தை உறுதிப்படுத்துவதில்லை.

எனவே, அரசுப் பள்ளி மற்றும் அரசுஉதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு கொடுக்கப்படும் உணவு தரத்தை உறுதிப்படுத்த, ஆணையம் அமைப்பது, பறக்கும் படை அமைப்பது போன்றவை கண்துடைப்பு நடவடிக்கையாகவே அமையும்.எனவே, இந்த திட்டத்திற்கான உணவை அரசின் பொறுப்பில் பள்ளிவளாகத்திலேயே தயாரித்து வழங்க வேண்டும். மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை உறுதிப்படுத்த, உரிய பாதுகாப்பு வழிமுறைகள் வகுக்க வேண்டும்.ஒருங்கிணைந்த சமையலறை திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சரியான மருத்துவ உதவி அளிக் வேண்டும். உணவை தயாரித்து வழங்கிய ஒப்பந்தக்காரர் மீது வழக்குபதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.