தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மகாத்மா காந்தி பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தேர்தலில் எஸ்.எஃப்.ஐ அமோக வெற்றி!

yesterday
மகாத்மா காந்தி பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தேர்தலில் எஸ்.எஃப்.ஐ அமோக வெற்றி!

கேரளத்தின் மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளில் நடைபெற்ற மாணவர் பேரவைத் தேர்தலில் இந்திய மாணவர் சங்கம் 117 கல்லூரிகளில் 98 கல்லூரிகளில் அமோக வெற்றி பெற்றுள்ளது.

“சோசலிசமே எதிர்காலம்; மதச்சார்பின்மையே எங்கள் பலம்” என்ற முழக்கத்துடன் எம்.ஜி. பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட கல்லூரிகளில் நடைபெற்ற மாணவர் பேரவைத் தேர்தலில் இந்திய மாணவர் சங்கம் (எஸ்.எஃப்.ஐ) போட்டியிட்டது. அதில், தேர்தல் நடந்த 117 கல்லூரிகளில் 98 கல்லூரிகளில் இந்திய மாணவர் சங்கம் வெற்றி பெற்றுள்ளது.

கோட்டயம் மாவட்டத்தில் போட்டியிட்ட 32 கல்லூரிகளில் 27-இல் எஸ்.எப்.ஐ. வெற்றி பெற்றது. கடந்த ஆண்டு இழந்த சி.எம்.எஸ். கல்லூரி உள்ளிட்ட மூன்று கல்லூரிகளை மீண்டும் கைப்பற்றியது.

இடுக்கி மாவட்டத்தில் போட்டியிட்ட 27 கல்லூரிகளில் 22-லும், எர்ணாகுளம் மாவட்டத்தில் 41 கல்லூரிகளில் 33-லும் எஸ்.எப்.ஐ. வெற்றி பெற்றது. எர்ணாகுளத்தில் யு.சி. கல்லூரி, பாரத் மாதா சட்டக் கல்லூரி, இந்திரா காந்தி கலை அறிவியல் கல்லூரி, செயின்ட் பீட்டர்ஸ் கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளை மீண்டும் கைப்பற்றியது.

பத்தனம்திட்டா மாவட்டத்தில் போட்டியிட்ட 16 கல்லூரிகளில் 15-இல் எஸ்.எப்.ஐ. வெற்றி பெற்றதுடன், கத்தோலிக்கேட் கல்லூரி மாணவர் பேரவையையும் மீண்டும் கைப்பற்றியது. ஆலப்புழா மாவட்டத்தில் எடத்துவா செயின்ட் அலோசியஸ் கல்லூரியிலும் எஸ்.எப்.ஐ. வெற்றி பெற்றது.

கேரளத்தில் எஸ்.எஃப்.ஐ தலைவர்கள் மீது நடத்தப்பட்ட இலக்கு வைக்கப்பட்ட தாக்குதல்களுக்கு மத்தியிலும் இந்த அமோக வெற்றி கிடைத்துள்ளது. முன்னதாக, இந்த தேர்தல் காலத்தில் எஸ்.எஃப்.ஐ மத்திய குழு உறுப்பினர் டோனி குரியாக்கோஸ் உட்பட பல நிர்வாகிகள் பொய் வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

கேரள பல்கலைக்கழகங்களைக் காவிமயமாக்க ஆளுநர் எடுக்கும் முயற்சிகளுக்கு எதிராகவும், இந்தச் செயல்களுக்கு உடந்தையாக இருந்து மாணவர் விரோதப் போக்கைக் கடைப்பிடிக்கும் மாநிலத்தில் உள்ள காங்கிரஸ் அரசுக்கு எதிராகவும் எஸ்.எஃப்.ஐ நடத்திய போராட்டங்களுக்குக் கிடைத்த ஆதரவையே இந்த வெற்றிபிரதிபலிப்பதாக எஸ்.எஃப்.ஐ மாநிலக் குழு தெரிவித்தது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.