ஏகாதிபத்திய வர்த்தக ஒப்பந்தங்களை எதிர்த்து ஆகஸ்ட் 10-ல் நாடு முழுவதும் மாபெரும் போராட்டம் ஐக்கிய விவசாயிகள் முன்னணி தேசிய மாநாட்டில் பிரகடனம்
29 Jul 2026, 10:51 pm

ஏகாதிபத்திய வர்த்தக ஒப்பந்தங்களை எதிர்த்து ஆகஸ்ட் 10-ல் நாடு முழுவதும் மாபெரும் போராட்டம் ஐக்கிய விவசாயிகள் முன்னணி தேசிய மாநாட்டில் பிரகடனம்

புதுதில்லி, ஜூலை 29- இந்திய விவசாயத் துறையையும் நாட்டின் இறையாண்மையையும் அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய சக்திகளுக்கு அடகு வைக்கும் தாராள வர்த்தக ஒப்பந்தங்களை (FTA) உடனடியாகக் கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட முக்கியக் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஐக்கிய விவசாயிகள் முன்னணி (சம்யுக்த கிசான் மோர்ச்சா) அமைப்பின் அகில இந்திய மாநாடு தில்லி மின்டோ சாலையில் உள்ள சிவிக் சென்டர் அரங்கில் ஜூலை 28 செவ்வாயன்று வெற்றிகரமாக நடைபெற்றது.

விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாது காக்கக் கோரியும், மோடி அரசின் கார்ப்பரேட் சார்பு நடவடிக்கைகளைக் கண்டித்தும் நாடு முழுவதும் தொடர் மக்கள் போராட்டங்களை முன்னெடுக்க இந்த மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

ஐக்கிய விவசாயிகள் முன்னணி மாநாடு ஏற்றுக்கொண்ட 7 முதன்மைக் கோரிக்கைகள்

• இந்தியா - அமெரிக்கா மற்றும் அனைத்து வகையான தாராள வர்த்தக ஒப்பந்தங் களையும் (FTAs) உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

• C2+50% கோட்பாடு அடிப்படையில் அனைத்து விளைபொருட்களுக்கும் குறைந்த பட்ச ஆதரவு விலையை சட்டப்பூர்வ மாக்கி, முழுமையான கொள்முதலை உறுதி செய்ய வேண்டும்.

• விவசாயிகளின் கடன் சுமையை முற்றிலு மாக ரத்து செய்ய வேண்டும்; விவசாயி மற்றும் தினக்கூலித் தொழிலாளர் தற்கொலைகளைத் தடுத்து, தற்கொலை செய்துகொண்ட குடும்பங்களுக்குத் தலா ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.

• 4 தொழிலாளர் தொகுப்புச் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும்; அனைத்துத் தொழி லாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியமாக ரூ. 26,000 வழங்க வேண்டும்.

• மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை மீட்டெடுத்து, ஆண்டுக்கு 200 நாட்கள் வேலையும், குறைந்தபட்ச ஊதியமாக ரூ. 700-ம் வழங்க வேண்டும்.

• மின்சாரத் தனியார்மயமாக்கல் மசோதா 2025, விதை மசோதா 2025 மற்றும் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத் திருத்த மசோதா ஆகியவற்றைத் திரும்பப் பெற வேண்டும்.

• கட்டாய நில அபகரிப்பு மற்றும் கார்ப்பரேட் நிலக் குவிப்புக்குத் தடை விதிக்க வேண்டும்; 2013 நிலக் கையகப்படுத்துதல் சட்டம் மற்றும் 2006 வன உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் பழங்குடி மற்றும் வனவாசிகளின் நில உரிமை கள் முழுமையாகப் பாதுகாக்கப்படவேண்டும்.

அறிவிக்கப்பட்ட தொடர் போராட்ட வடிவங்கள்

ஆகஸ்ட் 10 - தேசிய அளவில் மாபெரும் போராட்டம்: வரலாற்றுச் சிறப்புமிக்க ‘வெள்ளையனே வெளியேறு’ நாளான ஆகஸ்ட் 10-ம் தேதியன்று, தேசத்திற்கு விரோதமான தாராள வர்த்தக ஒப்பந்தங்களை எதிர்த்து நாடு முழுவதும் 1,000 இடங்களில் சிறை நிரப்பு போராட்டம், ரயில் மறியல் மற்றும் சாலை மறியல் போராட்டங்கள் பிரம்மாண்டமாக நடைபெறும். பல வெகுஜன அமைப்புகள் இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

ஆகஸ்ட் 17 - கோரிக்கை மனு அளிக்கும் இயக்கம்: பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், அனைத்து மாநில முதலமைச்சர்கள் மற்றும் எம்பி, எம்எல்ஏ-க்களிடம் ஐக்கிய விவசாயிகள் முன்னணி பிரதிநிதிகள் நேரில் சந்தித்து தங்களது முதன்மைக் கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்குவர்.

மாநில மாநாடுகள் மற்றும் பிரச்சார இயக்கங்கள்: அடுத்த இரண்டு மாதங்களுக்கு மாநில அளவிலான மாநாடுகள் நடத்தப்பட்டு, பாதயாத்திரைகள், வாகனப் பேரணிகள், டிராக்டர் பேரணிகள் மற்றும் பொதுக்கூட்டங்கள் மூலமாக கிராமங்கள் தோறும் பிரச்சாரம் தீவிரப்படுத்தப்படும்.

அக்டோபர் 3 - லக்கிம்பூர் கெரி தியாகிகள் நாள்: அக்டோபர் 3 அன்று கிராம அளவிலான மகாபஞ்சாயத்துகள் நடத்தப்பட்டு, நவம்பர் 26, 2026 முதல் தொடங்கவுள்ள நீண்ட காலப் போராட்டத்திற்கான தொண்டர்கள் மற்றும் தன்னார்வலர்களின் பட்டியல் தயார் செய்யப்படும்.

நவம்பர் 26 முதல் தில்லி நோக்கி விவசாயிகள் பேரணி: கடந்த 2021 டிசம்பர் 9 அன்று எழுத்துப்பூர்வமாக அளித்த வாக்குறுதிகளை (குறைந்தபட்ச ஆதாரவிலை மற்றும் கடன் தள்ளுபடி) அமல்படுத்தாமல் ஒன்றிய பாஜக அரசு தொடர்ந்து ஏமாற்றி வருவதால், நவம்பர் 26 முதல் தில்லி மற்றும் இந்தியா முழுவதும் 100 இடங்களில் பல நாட்கள் தொடரும் மாபெரும் விவசாயிகள் பேரணிகளும் மக்கள் திரள் போராட்டங்களும் தீவிரப்படுத்தப்படும்.

மாணவர் - விவசாயிகளின் ஒற்றுமை

மாநாட்டில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கிய மாணவப் பிரதிநிதி ஆசுதோஷ் ரங்கா, கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானைப் பதவி விலகச் செய்த வெற்றிகரமான மாணவர் போராட்டத்தின் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். மேலும், வரவிருக்கும் போராட்டங்களில் மாண வர்களும் விவசாயிகளும் கைகோர்த்து ஒட்டு மொத்த மக்கள் திரள் ஒற்றுமையைக் கட்டி யெழுப்ப வேண்டும் என அறைகூவல் விடுத்தார்.

மாநாட்டில் மேலும் இரண்டு முக்கியமான தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன

• தில்லி எல்லைகளில் ஓராண்டு காலம் வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டம் நடத்தி இன்னுயிரை நீத்த 736 விவசாயத் தியாகிகளின் நினைவாக, சிங்கு எல்லையில் தில்லி அரசு போதிய நிலம் ஒதுக்கி பிரம்மாண்டமான ‘தியாகிகள் நினைவுச் சின்னம்’ அமைத்துத் தர வேண்டும்.

• தற்போதைய கடுமையான வறட்சி, வெள்ளம் மற்றும் சுற்றுச்சூழல் பேரழிவுகளை எதிர்கொள்ளும் வகையில், பயிர்கள், கால்ந டைகள் மற்றும் வாழ்வாதார இழப்புகளுக்கு பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் உரிய இழப்பீடு வழங்கும் முறையான பேரிடர் மேலாண்மை அமைப்பை அரசு உடனடியாக ஏற்படுத்த வேண்டும்.