விளையாட்டு
14 minutes before

விளையாட்டு

மகளிர் உலகக்கோப்பை கால்பந்து 11, 12ஆவது சீசன் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு 2031 - மெக்சிகோ, கோஸ்டாரிகா, ஜமைக்கா, அமெரிக்கா ; 2035 - பிரிட்டன்

2031 மற்றும் 2035ஆம் ஆண்டுகளில் நடைபெறும் மகளிர் உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்தும் நாடுகளின் பட்டியலை சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிபா) அறிவித்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பில், “2031ஆம் ஆண்டு நடைபெறும் 11ஆவது சீசன் மகளிர் உலகக்கோப்பை கால்பந்து மெக்சிகோ, கோஸ்டாரிகா, ஜமைக்கா, அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து நடத்த உள்ளன. மகளிர் உலகக்கோப்பை வரலாற்றில் முதல் முறையாக 11ஆவது சீசனில் 48 அணிகள் பங்கேற்க உள்ளன. அதேபோல 12ஆவது சீசன் உலகக் கோப்பை பிரிட்டனில் (இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ், அயர்லாந்து)நடைபெறுகிறது. 2027ஆம் ஆண்டு பிரேசிலில் நடைபெறும் மகளிர் உலகக் கோப்பையில் 32 அணிகள்பங்கேற்கின்றன. 2011-இல் ஜெர்மனியில் 16 அணிகளுடன் நடைபெற்ற தொடருடன் ஒப்பிடும்போது, வேகமாக வளர்ந்து வரும் இத்தொடர் இப்போது மூன்று மடங்காக விரிவடைந்துள்ளது” என பிபா தலைவர் ஜியானி இன்பான்டினோ கூறினார்.

இந்தியாவின் பந்துவீச்சுக் கூட்டணி சரியில்லை! முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கடும் கண்டனம்

வெல்லிங்டன் டெஸ்ட் போட்டியின் (இந்தியா - நியூஸிலாந்து) முதல் இன்னிங்ஸில் 352 ரன்கள் என்ற பிரம்மாண்ட முன்னிலை பெற்றும், வலுவான நிலையிலிருந்து வெற்றியைப் பதிவு செய்ய இந்தியா தவறியதை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில் சவுரவ் கங்குலி கூறுகையில்,”நியூஸிலாந்து தொடரில் இந்தியா மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. வெள்ளைப் பந்து கிரிக்கெட் (ஒருநாள், டி-20) மற்றும் இப்போது சிவப்பு பந்து (டெஸ்ட்) கிரிக்கெட் என இரண்டிலுமே இந்தியாவின் செயல்பாடு சிறப்பாக உள்ளது. குறிப்பாக பேட்டிங்கில் வெளிப்படுத்தப்பட்ட அணுகுமுறை அருமையாக இருந்தது.

ஆனால், வெளிநாடுகளில் டெஸ்ட் போட்டிகளில் வெல்ல வேண்டுமானால், நேரம் செல்லச் செல்ல வேகப்பந்து வீச்சுக்கு ஒத்துழையாமல் மாறும் ஆடுகளங்களில் உண்மையான ஒரு சுழற்பந்து வீச்சாளர் அவசியம் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அப்படி ஒருவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் நிச்சயம் விளையாட வைக்க வேண்டும். வாஷிங்டன் சுந்தர் ஒரு ஆல்-ரவுண்டராக விளையாடலாம். குல்தீப் அல்லது மானவ் சுதார் எங்கே?” என அவர் கேள்வி எழுப்பினார்.

உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடக்கம் இந்தியாவின் குகேஷ்- உஸ்பெகிஸ்தானின் ஜவோகிர் சிந்தாரோ பலப்பரீட்சை

புகழ்பெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. டிசம்பர் மாதம் 12ஆம்தேதி வரை நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் இந்தியாவின் குகேஷூம், உஸ்பெகிஸ்தானின் ஜவோகிர் சிந்தாரோவும் பலப்பரீட்சை நடத்துகின்றனர். இருவருக்கும் தற்போது வயது 20. குறிப்பாக இரு குறைந்த வயது வீரர்கள் மோதும் உலக செஸ் சாம்பியன்ஷிப்பாக இது பார்க்கப்படுகிறது.

14 சுற்றுகள் கொண்ட இந்த போட்டி கிளாசிக்கல் முறையில் (நீண்ட நேரம் அடிப்படையில்) நடைபெறுகிறது. வெற்றிக்கு ஒரு புள்ளியும், டிராவுக்கு அரை புள்ளியும்வழங்கப்படும். யார் முதலில் 7% புள்ளியை எட்டு கிறார்களோ அவர்கள் உலக சாம்பியன் பட்டத்தை வெல்வார்கள். 14 சுற்று முடிவில் சம நிலை நீடித்தால், டைபிரேக்கர் கடைபிடிக்கப்படும்.