தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மாநில அளவிலான ஸ்கேட்டிங் விளையாட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு

2 hours before
மாநில அளவிலான ஸ்கேட்டிங் விளையாட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு

மாநில அளவிலான ஸ்கேட்டிங் விளையாட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு

உடுமலை, ஆக.2-மாநில அளவில் நடைபெற்ற ரோலர் ஸ்கேட்டிங் விளையாட்டு போட்டியில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்கள், சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம், உடுமலையிலுள்ள ஜாகுவார் ஸ்கேட்டிங் அகாடமியில் பயிற்சி பெற்ற 46 மாணவர்கள், கடந்த ஜூலை 26-ம் தேதி கரூரில் நடைபெற்ற மாநில அளவிலான ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டனர். அட்ஜசடபிள்,குவாடு, இன்லைன், பேன்சி இன்லைன் பிரிவுகளில் 200 மீட்டர் மற்றும் 400 மீட்டர் ஓட்ட பந்தயங்களில் சிறப்பாக விளையாடி முதல் 3 இடங்களில் வெற்றி பெற்றனர். இவர்களுக்கான பாராட்டு விழா ஞாயிறன்று உடுமலையிலுள்ள சுபாஷ் ரேணுகாதேவி அறக்கட்டளை வளாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், அறக்கட்டளை நிறுவனர் செல்வராஜ், சத்யம் சோசியல் சர்வீஸ் நிர்வாகி சத்யம் பாபு, குடிமங்கலம் காளீஸ் மோட்டார்ஸ் உரிமையாளர் காளீஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.உடுமலை சட்டமன்ற உறுப்பினர் எம்.ஜெயக்குமார் பங்கேற்று வாழ்த்திப் பேசினார். இந்நிகழ்வில், விவேகானந்தாமேல்நிலைப்பள்ளி தாளாளர் எஸ்.மூர்த்தி, மாணவர்கள் மற்றும் பெற்றோர் என 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.