தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

காவல்துறை சீர்திருத்தத்தை வலியுறுத்தும் ஆய்வறிக்கை

yesterday
காவல்துறை சீர்திருத்தத்தை வலியுறுத்தும் ஆய்வறிக்கை

காவல்துறை சீர்திருத்தத்தை வலியுறுத்தும் ஆய்வறிக்கை

தில்லி ஜந்தர் மந்தர் போராட்டத்தில் காவல்துறையினர் பெல்லட் குண்டுகள், கண்ணீர்ப் புகைக் குண்டுகள், ரப்பர் குண்டுகள் மற்றும் ஆணியுடன் கூடிய தடிகளைப் பயன்படுத்தி மாணவர்கள் மீது வன்முறைத் தாக்குதல்களை நடத்தினர்.இதன் பின்னணியில் மீண்டும் ஒருமுறை ஜனநாயக ரீதியாகப் போராடுபவர்கள் மீது காவல்துறை வன்முறைகளை ஏவுவது குறித்து விவாதங்கள் எழுந்துள்ளன.இத்தகைய சூழலில், இந்தியாவில் காவல் பணி குறித்த நிலை அறிக்கை 2025-ஐ (Status of Policing in India Report 2025) முன்வைத்து தி இந்து நாளிதழில் வெளியான கட்டுரை பல திடுக்கிடும் உண்மைகளைக் கூறியுள்ளது.நாடு முழுவதும் 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த காவல் துறையில் பணியாற்றும் 8,276நபர்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முக்கிய அம்சங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

சட்ட விதிகளும் நடைமுறை எதார்த்தமும்

இந்தியாவில் குற்றவியல் சட்டங்களின்படி (பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா), ஒருசட்டவிரோதக் கூட்டத்தைக் கலைக்க, முறையாக எச்சரித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்னரே காவல் துறை பலத்தைப் பயன்படுத்த வேண்டும். மேலும், தேசிய மனிதஉரிமைகள் ஆணையத்தின் வழிகாட்டுதல்களின்படி, காவல்துறையினர் பேச்சுவார்த்தை மற்றும்எச்சரிக்கைகளுக்குத்தான்முன்னுரிமை அளிக்க வேண்டும். தவிர்க்க முடியாத சூழலில்

மட்டுமே, அதுவும் குறைந்தபட்ச பலத்தைத்தான் பயன்படுத்த வேண்டும்.ஆனால், கள எதார்த்தம் இதற்கு மாறாக

உள்ளது. ஜனநாயகப்பூர்வமான போராட்டங்கள் மற்றும் மக்களின் நியாயமான உரிமைகளைக் கேட்டு நடத்தும் போராட்டங்கள் மீதுதான் காவல்துறை வன்முறைகளை ஏவி வருகிறது.கைது செய்யப்படும் நபர்களுக்கு அவர்களின் கைதுக்கான காரணத்தைத் தெரிவிப்பது, கைது குறித்தான குறிப்பேடுகளைத் தயாரிப்பது, அவர்களின் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிப்பது, மருத்துவப் பரிசோதனை உறுதி செய்வது மற்றும் வழக்கறிஞரைச் சந்திக்க அனுமதிப்பது போன்ற சட்டப்பூர்வ நடைமுறைகளை 50 சதவீதத்துக்கும் மேலான காவலர்கள் பின்பற்றுவதில்லை. வெறும் 41% காவலர்களே எப்போதும்பின்பற்றுவதாகத் தெரிவிக்கின்றனர்.கைது செய்யப்பட்டவர்கள் தங்களின் வழக்கறிஞர்களைத் தனிப்பட்ட முறையில் சந்திப்பதை எப்போதுமே அனுமதிக்கக்கூடாது என்று ஐந்தில் ஒரு பங்கு காவலர்கள் கருதுகின்றனர். காவல்துறையினர் மத்தியில் சட்ட வரம்புகளை மீறி,தங்களுக்குக் கூடுதல்அதிகாரங்கள் வேண்டும் என்ற எண்ணம் ஆழமாக வேரூன்றியுள்ளதை இந்த ஆய்வுத் தரவுகள் காட்டுகின்றன.காவலர்களின் கடமைகளைச் சரியாகச் செய்ய வேண்டுமென்றால் வன்முறையைப் பயன்படுத்த அனுமதிக்கப்படவேண்டும் என்று70%க்கும் அதிகமான காவலர்கள் கருதுகின்றனர். (இதில் 26% பேர் முழுமையாக உடன்படுகிறார்கள், 45% பேர் ஓரளவு உடன்படு கிறார்கள்.)சந்தேகத்தின் அடிப்படையில் நீதிமன்ற விசாரணையின்றி ஒருவரைக் கைது செய்து அடைத்து வைக்ககாவல்துறையினருக்கு உரிமை இருக்க வேண்டும் என்று 69% காவலர்கள் எதிர்பார்க்கின்றனர். இது மிகவும்ஆபத்தானது. ஏனெனில் இது சட்டத்தின் ஆட்சிக்கும் (Rule of Law), அரசியலமைப்புப் பாதுகாப்புகளுக்கும் எதிரானது.பொதுமக்களிடையே காவல்துறையைப் பற்றிய அச்சத்தை உருவாக்க கடுமையான அணுகுமுறைகளைப் (Tough methods)பயன்படுத்துவது மிகவும் அல்லது ஓரளவு முக்கியமானது என்று 55%க்கும் அதிகமான காவலர்கள் கருதுகின்றனர்.

குற்றக் கட்டுப்பாடு மற்றும் சமூகப் பார்வை

ற்றங்களைக் கட்டுப்படுத்த என்ன வகையான நடவடிக்கைகள் உதவும் என்பது குறித்து காவல்துறையினர் வெவ்வேறு கருத்துக்களைக் கொண்டுள்ளனர். வழக்கமான ரோந்துப் பணிகளை அதிகரிப்பது (64% பேர் ‘மிகவும் பயனுள்ளது’ என்கின்றனர்) மற்றும் காவல்துறையில் அதிக பெண்களைச் சேர்ப்பது (58%) போன்ற முறைகளைப் பெரும்பான்மையான காவலர்கள் ஆதரிக்கின்றனர்.சமூக விரோத நடவடிக்கைகளைத் தடுக்க முன்கூட்டியே தடுப்புக்காவலில் வைப்பது (48%) மற்றும் மக்களை எந்தஒருகாலக்கெடுவும் இல்லாமல் அடைத்து வைக்க சிறப்புப் படைகளை உருவாக்குவது (43%) போன்ற கடுமையான வழிகளையும்காவலர்கள் ஆதரிக்கின்றனர்.

அதிகாரப்பூர்வ தரவுகளும் மறைக்கப்படும் உண்மைகளும்

காவல்துறையின் ஒடுக்குமுறை மற்றும் வன்முறைகள் குறித்த அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் மிகவும் முரணாக உள்ளதாகஅந்த அறிக்கை குற்றம்சாட்டியுள்ளது. தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் ‘இந்தியாவில் குற்றங்கள்’ எனும் அறிக்கைபல பெரிய போராட்டங்கள் மற்றும் வன்முறைகள் நடந்த போதிலும், காவல்துறையின் நடவடிக்கைகளால் காயமடைந்த பொதுமக்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே காட்டப்படுவதாகக் கூறுகிறது.உதாரணமாக, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (CAA) எதிராக 2020-இல் நடத்தப்பட்ட போராட்டத்தில் கலவரம் உருவாக்கப்பட்டது. நாடு முழுவதும் காவல்துறைநடவடிக்கைகளால் 76 பேர் மட்டுமே காயமடைந்ததாகத் தேசிய குற்ற ஆவணக் காப்பகத் தரவுகள் தெரிவிக்கின்றன. ஆனால் ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் அறிக்கையோ தில்லியில் மட்டுமே 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகக் கூறியது.இதே போல, விவசாயிகள் நடத்திய ‘டெல்லி சலோ’ போராட்டங்கள் நடந்த 2024ஆம் ஆண்டிலும் கூட, வெறும் 2 பேர் மட்டுமேபடுகாயமடைந்ததாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் கூறியுள்ளது.இந்தியாவில் காவல் பணி குறித்த நிலை அறிக்கை 2025 தரவுகள், நம் நாட்டின்ஜனநாயகக் கட்டமைப்பிற்குக் காவல்துறையின் நடவடிக்கைகள் கடுமையான எச்சரிக்கையாக உள்ளதைக் காட்டுகின்றன. மேலும் காவல்துறை சீர்திருத்தம் செய்ய வேண்டியதன் அவசியத்தையும் இது உணர்த்துகிறது.அதாவது, காவல்துறைக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான உறவு பலப்பட வேண்டும் என்றால், காவல்துறையினருக்கு மனித உரிமைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சி குறித்த முறையான உணர்வு ரீதியிலான பயிற்சி அளிக்கப்பட வேண்டும். மேலும், காவல்துறையின் நடவடிக்கைகள் வெளிப்படைத்தன்மை யுடன் இருந்து, அவற்றுக்கான சட்டப்பூர்வ பொறுப்பேற்புஉறுதிப்படுத்தப்பட்டால் மட்டுமே உண்மையான ஜனநாயகத்தைக் காப்பாற்ற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.