தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மாநிலங்களுக்கு நிதிப் பகிர்வில் வஞ்சனை - நாடாளுமன்ற பதிலில் வெளி வரும் உண்மை

yesterday
மாநிலங்களுக்கு நிதிப் பகிர்வில் வஞ்சனை - நாடாளுமன்ற பதிலில் வெளி வரும் உண்மை

மொத்த வரி வருவாயில் செஸ், சர்சார்ஜ் விகிதம் பெருமளவு உயர்ந்து இருப்பதையும் இதன் மூலம் மாநிலங்களுக்கான நிதிப்பகிர்வில் வஞ்சனை இழைக்கப்பட்டு இருப்பதையும் அமைச்சரின் புள்ளிவிபரம் உறுதிப்படுத்துகிறது என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது:

நான் மக்களவையில் எழுப்பிய கேள்விக்கு நிதி இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி அளித்துள்ள பதில் மொத்த வரி வருவாயில் செஸ், சர்சார்ஜ் விகிதம் பெருமளவு உயர்ந்து இருப்பதையும் இதன் மூலம் மாநிலங்களுக்கான நிதிப்பகிர்வில் வஞ்சனை இழைக்கப்பட்டு இருப்பதும் வெளிப்பட்டுள்ளது.

அமைச்சர் பதில்

மக்களவையில் அமைச்சர் பங்கஜ் சவுத்ரி தெரிவித்துள்ள பதிலின்படி 2014 - 15 இல் ரூ 89,117 கோடிகளாக இருந்த செஸ் வருவாய் 2025 - 26 இல் ரூ 3,33,650 கோடிகளாக அதிகரித்துள்ளது. அது போல சர்சார்ஜ் ரூ 30,792 கோடிகளில் இருந்து இதே காலத்தில் ரூ 3,35,970 கோடிகளாக அதிகரித்திருக்கிறது. மொத்த வருவாயில் செஸ், சர்சார்ஜ் விகிதம் 9.6 சதவீதத்தில் இருந்து 16.4 சதவீதமாக உயர்ந்திருக்கிறது.

அமைச்சரின் பதில், பாஜக ஆட்சி காலத்தில் பிரிக்கத்தக்கதல்லாத வருவாய் மிகப் பெருமளவிற்கு அதிகரித்து இருப்பதை காண்பிக்கிறது. இதில் ஜி.எஸ்.டி இழப்பீடு செஸ் மாநிலங்களுக்கு தரப்பட்டு வந்தாலும் அதுவும் 2025 - 26 இல் பெருமளவு சரிந்து 2026 - 27 பட்ஜெட்டில் முடிவுக்கு வந்து விட்டது.

கூட்டாட்சிக்கு அநீதி

ஓராண்டுக்கு சராசரியாக 6,50,000 கோடிகள் செஸ், சர்சார்ஜ் மூலமாக வசூல் ஆகிறதென்றால் அவற்றில் மாநிலங்களுக்கு பங்கு கிடைக்காது.

ஏற்கெனவே மாநிலங்களுக்கான நிதிப் பகிர்வை 50 சதவீதமாக உயர்த்த வேண்டுமென்ற கோரிக்கை 16 வது நிதி ஆணையத்தால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. மேலும் நிதிப் பகிர்வு வரையறைகள் தமிழ்நாடு போன்ற மாநிலங்களுக்கு நியாயம் வழங்கவில்லை என்றும் தொடர்ந்து கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் செஸ் சர்சார்ஜ் விகிதங்கள் அதிகரித்து வருவது இது நிதிக் கூட்டாட்சிக்கு இழைக்கப்படும் அநீதியாகும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.