தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சுற்றுச்சூழல் விதிகளில் சட்டவிரோதத் தளர்வுக்கு முற்றுப்புள்ளி!

30 Jul 2026, 10:03 pm
சுற்றுச்சூழல் விதிகளில் சட்டவிரோதத் தளர்வுக்கு முற்றுப்புள்ளி!

சுற்றுச்சூழல் விதிகளில் சட்டவிரோதத் தளர்வுக்கு முற்றுப்புள்ளி!

சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் சட்ட விரோதமாகத் தொடங்கப்படும் திட்டங்க ளுக்குப் பின்புலமாக நின்று, அவற்றுக்கு முன்தேதியிட்டு ஒப்புதல் வழங்கும் ஒன்றிய பாஜக அரசின் கார்ப்பரேட் சாதகப் போக்கிற்கு உச்சநீதிமன்றம் பலத்த அடி கொடுத்துள்ளது. 2021-ஆம் ஆண்டு ஒன்றிய அரசு வெளியிட்ட அலுவலகச் சுற்றறிக்கையை ரத்து செய்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வு முக்கியத் தீர்ப்பை வழங்கியுள்ளது. முன்அனுமதியின்றித் தொ டங்கப்பட்ட திட்டங்களுக்கு நிர்வாக உத்தர வுகள் மூலம் தொடர்ச்சியாக விலக்கு அளிப்பது, 1986 சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்தின் நோக் கத்திற்கே எதிரானது என்றும், அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 14 மற்றும் 21-ஐ மீறுவதாகும் என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

இயற்கையையும் இயற்கை வளங்களையும் பாதுகாப்பதற்குப் பதிலாக, விதிகளை மீறும் பெரு நிறுவன முதலாளிகளுக்குப் பின்வாசல் வழியா கச் சலுகை அளிப்பதையே மோடி அரசு தனது வழக்கமான பாணியாகக் கொண்டுள்ளது. வெறும் நிர்வாகக் குறிப்புகள் மூலம் சுற்றுச் சூழல் பாதுகாப்பு விதிகளையே மாற்றியமைக்க முயன்ற ஒன்றிய அரசின் நடவடிக்கை, சட்ட விரோதமானது என்று உச்சநீதிமன்றம் கடுமை யாகச் சாடியுள்ளது. “பொதுநலன்” என்ற பெய ரில் கார்ப்பரேட் நிறுவனங்கள் சுற்றுச்சூழல் விதிகளுக்குப் புறம்பாகச் செயல்படுவதை அனு மதிப்பது, நாட்டின் இயற்கைச் சமநிலையைச் சீர்குலைக்கும் ஆபத்தான போக்காகும்.

இருப்பினும், “பொதுநலன்” என்ற விலக்கின் கீழ் 1986 சட்டத்தின் மூலம் சில விதிவிலக்குக ளை அளிக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது என்றும், ஏற்கெனவே உள்ள அனுமதிகள் பாதிக் கப்படாது என்றும் நீதிமன்றம் கூறியுள்ள இடை வெளியை ஒன்றிய அரசு தவறாகப் பயன்படுத் தும் அபாயமும் இத் தீர்ப்பில் உள்ளது. இயற்கை வளங்களைச் சுரண்டி லாபம் ஈட்டும் கார்ப்ப ரேட்டுகளின் நலனுக்காக சுற்றுச்சூழல் சட்டங் களை நீர்த்துப்போகச் செய்யும் பாஜக அரசின் முயற்சிகள் முற்றாக முறியடிக்கப்பட வேண்டும்.

எதேச்சதிகார நிர்வாக உத்தரவுகள் மூலமா கச் சுற்றுச்சூழல் விதிகளை வளைத்து, பெரு நிறுவனங்களின் அத்துமீறல்களுக்குச் சிவப்புக் கம்பளம் விரிக்கும் மோடி அரசின் நடவடிக்கை ஒட்டுமொத்தப் பொதுமக்களின் வாழ்வுரி மைக்கே அச்சுறுத்தலாகும். நிலையான வளர்ச்சி யை உறுதிசெய்வதற்குப் பதிலாக, கார்ப்ப ரேட்டுகளின் லாப வெறிக்கு வழிவகுக்கும் இத்தகைய சட்டவிரோதச் சுற்றறிக்கைகளை நீதிமன்றம் ரத்து செய்திருப்பது ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை உயர்த்தியுள்ளது எனலாம்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்யவும், பெருநிறுவனங்களின் அத்துமீறல்களைத் தடுத்து நிறுத்தவும் உச்சநீதிமன்றத்தின் இத்தீர்ப்பு முக்கிய திருப்புமுனையாக உதவட்டும்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.