‘நேரமில்லை’ என்பதா நீதி?
22 Jul 2026, 9:30 pm

‘நேரமில்லை’ என்பதா நீதி?

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் பொறுப்பேற்கும் நீதிபதிகள், “எவ்வித அச்சமும் பாரபட்சமும் இன்றி, சட்டத்தின் ஆட்சி யையும் மக்களின் அடிப்படை உரிமைகளை யும் உயர்த்திப்பிடிப்பேன்” என்றே உறுதிமொழி எடுத்துக்கொள்கின்றனர். மக்கள் தங்களின் உரிமைகள் பறிக்கப்படும்போதோ, அரசு அதி காரத்தின் அடக்குமுறைக்கு ஆளாகும்போதோ தஞ்சம் புகும் கடைசிப் புகலிடமாக நீதி மன்றமே திகழ்கிறது.

தில்லியில் மாணவர்கள் மீதான காவல்துறை யின் அடக்குமுறையைக் கண்டு தேசமே கொந்தளிக்கிறது. ஆனால் உச்ச நீதிமன்றமோ மாணவர்கள் மீதான காவல்துறை வன்முறை தொடர்பான வீடியோ ஆதாரங்களை ஆய்வு செய்ய மறுத்து, “நாங்கள் வீடியோக்களைப் பார்க்க விரும்பவில்லை; நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்க வேண்டாம்” என தலைமை நீதிபதி தெரிவித்த கருத்துக்கள் அதிர்ச்சியளிக்கிறது.

அதானி - ஹிண்டன்பர்க் வழக்கு, ரிலை யன்ஸ் - ஃபியூச்சர் குரூப் - அமேசான் வழக்கு, டாடா - சைரஸ் மிஸ்திரி மற்றும் அர்னாப் கோஸ்வாமி ஜாமீன் வழக்கு போன்றவற்றை யெல்லாம் அவசர வழக்காக எடுத்து விசாரித்திருக்கிற அதே உச்சநீதிமன்றம், மாணவர்கள் மீதான நடவடிக்கை போன்ற பொது முக்கியத்துவம் வாய்ந்த விஷயத்தில் “நேரமில்லை” என்று சொல்வது அநியாயம்.

சங்பரிவார் அமைப்புகளும் அதிகாரத்தில் உள்ளவர்களும் இந்தப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தவும் திசைதிருப்பவுமே முயற்சிக்கின்றனர். சங்பரிவாரின் திசைதிருப்பல் போக்கிற்கும், உச்சநீதிமன்றத்தின் இந்த அணுகுமுறைக்கும் இடையே உள்ள ஒற்றுமை தற்செயலானது தானா என்ற நியாயமான கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுகிறது.

ஒரு நாட்டின் எதிர்காலம் வகுப்பறைகளில் தீர்மானிக்கப்படுகிறது என்பார்கள். ஆனால், இந்திய வகுப்பறைகளும் மாணவர்களின் எதிர்காலமும் இன்று முறைகேடுகளாலும், ஊழல்களாலும், அதிகார அமைப்புகளின் அல ட்சியத்தாலும் சிதைக்கப்பட்டு வருகின்றன. மாணவர்கள் கேட்கும் நீதி மிகவும் எளிதா னது — “எங்கள் கடின உழைப்பை ஊழலுக்கு இரையாக்காதீர்கள்” என்பதுதான். ஆனால், அதற்குப் பதிலாக அவர்களுக்குக் கிடைப்ப தெல்லாம் காவல் துறையின் பெல்லட் குண்டு களும், மின் அதிர்வுக் கம்பிகளும்தான்.

கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 152 வினாத்தாள் கசிவுகள் நடந்துள்ளன. அதாவது, சராசரியாக மாதம் ஒரு வினாத்தாள் கசியும் அவலம் இங்கு நிலவுகிறது. இதன் மூலம் 7.5 கோடி மாணவர்களும் அவர்களது குடும்பங்களும் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தனை முறைகேடுகள் நடந்தும், ஒருவர் கூட தண்டிக்க ப்படவில்லை. இதற்கு நீதிகேட்பது தவறா?

அதிகாரத்தின் நிழலில் நிற்பதல்ல நீதி மன்றத்தின் வேலை; நீதியை நிலைநாட்டுவதே! அரசும் அமைப்புகளும் தங்களின் கடமையி லிருந்து விலகும்போது, வரலாறு அவர்களுக் குச் சரியான பாடத்தைப் புகட்டியே தீரும்!