தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நூலாற்றுப் படை

22 Nov 2026, 8:59 pm
நூலாற்றுப்  படை

நூலாற்றுப் படை

தனக்காக மட்டும் வாழாமல் சமூகத்திற்காகவும் வாழத் தூண்டும் ‘அறிவோம் ஆளுமை’! - எம். ஜே.பிரபாகர்

சிறந்த ஆளுமைகளின் வாழ்க்கைப் பயணத்திலிருந்து புதிய தலைமுறையினர் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்களைக் கதைசொல்லல் பாணியில் சுவையாக அறிமுகப்படுத்துகிறது எழுத்தாளர் சி. சரிதா ஜோ எழுதிய ‘அறிவோம் ஆளுமை’ கட்டுரைத் தொகுப்பு. ஆலா பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்நூல், குழந்தைகளுக்குப் போதனை மொழியில் அறிவுரை கூறாமல், உரையாடல் வழியாக அவர்களின் சந்தேகங்களுக்குப் பதிலளித்து அறிவுத் தேடலைத் தூண்டுகிறது.

சாவித்திரிபாய் பூலே, கே.பி.ஜானகியம்மாள், அம்பேத்கர், காரல் மார்க்ஸ், சே குவேரா, மலாலா, மகாத்மா காந்தி, பெரியார், பகத்சிங், வேலுநாச்சியார், டாக்டர் முத்துலட்சுமி, கிரெட்டா தன்பெர்க் உள்ளிட்ட மாபெரும் ஆளுமைகளின் சாதனைகளை மட்டும் பட்டியலிடாமல், அவர்கள் எதிர்கொண்ட தடைகள், சமூகச் சூழல்கள் மற்றும் போராட்டங்களை இந்நூல் உயிரோட்டமாக விவரிக்கிறது.

கைப்பேசி, இணையம் மற்றும் சமூக ஊடகக் கவனச் சிதறல்களில் சிக்கியுள்ள இன்றைய குழந்தைகளை வாசிப்பின் பக்கமும், மனிதநேயம் மற்றும் சமூக அக்கறையின் பக்கமும் திருப்பும் இந்நூல், பெற்றோர்களும் ஆசிரியர்களும் தங்கள் குழந்தைகளுக்கு அவசியம் அறிமுகப்படுத்த வேண்டிய பயனுள்ள வழிகாட்டியாகும்.

அறிவோம் ஆளுமை (ஆளுமைகள் பற்றிய கட்டுரைத் தொகுப்பு)

ஆசிரியர்: சி. சரிதா ஜோவெளியீடு: ஆலா பதிப்பகம், ஈரோடு-638012 / விலை: ₹130/-தொடர்புக்கு: 9940716606

இயற்கையைக் காப்பாற்றினால் இயற்கை நம்மைக் காப்பாற்றும்

இயற்கை வரலாற்று ஆய்வாளரும் ஆவணப்படத் தயாரிப்பாளருமான சர் டேவிட் அட்டன்பரோவின் நூற்றாண்டுப் பிறந்தநாளை முன்னிட்டு, அறிவியல் அறிஞர்கள், சூழலியல் பேராசிரியர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட 21 பேரின் கட்டுரைகளைச் செ. கார்த்திக் தொகுத்துள்ள நூல் ‘டேவிட் அட்டன்பரோ 100 – ஒரு நூற்றாண்டின் இயற்கை சாட்சியம்’. பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ள இந்நூல், ஒரு தனிமனிதரின் வாழ்க்கை வரலாற்றைத் தாண்டி, கடந்த ஒரு நூற்றாண்டில் இயற்கை உலகம் எதிர்கொண்ட மாற்றங்களையும் சூழலியல் நெருக்கடிகளையும் ஆவணப்படுத்துகிறது.

1954-இல் பிபிசி நிறுவனத்தின் ‘Zoo Quest’ நிகழ்ச்சியில் தொடங்கிய தனது பயணத்தின் மூலம் காடுகள், கடல்கள் மற்றும் பல்லுயிர் உலகின் அதிசயங்களை உயிரோட்டமுள்ள கதைகளாக உலகுக்குக் காட்டியவர் அட்டன்பரோ. குறிப்பாக, கடலில் நெகிழி மாசுபாட்டின் ஆபத்தை உணர்த்திய ‘Blue Planet II’ உள்ளிட்ட இவரது ஆவணப்படங்கள் இன்றைய இந்தியச் சூழலின் காடழிப்பு மற்றும் காலநிலை மாற்றப் பிரச்சினைகளுக்கும் மிகப் பொருத்தமானவை.

“இயற்கையை வெல்வது மனிதனின் வெற்றி அல்ல; இயற்கையோடு இணைந்து வாழ்வதே மனிதகுலத்தின் உண்மையான வெற்றி” என்ற உயரிய பாடத்தை மாணவர்களுக்கும் இயற்கை ஆர்வலர்களுக்கும் இந்நூல் அழுத்தமாகக் கடத்துகிறது.

டேவிட் அட்டன்பரோ 100 – ஒரு நூற்றாண்டின் இயற்கை சாட்சியம் தொகுப்பாசிரியர்: செ. கார்த்திக்வெளியீடு: பாரதி புத்தகாலயம், சென்னை-600018/விலை: ₹190தொடர்புக்கு: 9444567935

கணிதத்தை அச்சமின்றி நேசிக்க வைக்கும் ‘கணிதம் பேசும் அறிவுத்தோட்டம்’! - கணிதம் என்பது வெறும் தேர்வு மதிப்பெண்களுக்கான பாடமல்ல; நமது அன்றாட வாழ்க்கையின் ஒவ்வொரு செயல்பாட்டிலும் இயங்கிக்கொண்டிருக்கும் ஓர் அறிவியல் என்பதைக் குழந்தைகளுக்கு உணர்த்துகிறது எழுத்தாளர்கள் விழியன் மற்றும் சரண்யா இணைந்து படைத்துள்ள ‘கணிதம் பேசும் அறிவுத்தோட்டம்’. புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியிட்டுள்ள இந்நூல், கணிதத்தைப் பாடப்புத்தகத்தின் வட்டத்திலிருந்து விடுவித்து இயற்கையோடும் குழந்தைகளின் கற்பனை உலகத்தோடும் இணைக்கிறது. ‘சுற்றளவு அளந்து வேலி கட்டலாம்!’, ‘தேங்காய் எப்படிப் பணமாக மாறுகிறது?’, ‘வரிசை எண்களின் ரகசிய வரைபடம்!’ போன்ற 20 சுவாரசியமான தலைப்புகளில் உரையாடல்கள் மற்றும் செயல்பாடுகள் வழியாகக் கணிதத்தை இந்நூல் அறிமுகப்படுத்துகிறது. விடையை மனப்பாடம் செய்வதைவிட விடையைக் கண்டறியும் தர்க்கச் சிந்தனையையும், கவனித்தல், ஒப்பிடுதல், அளவிடுதல் போன்ற திறன்களையும் இந்நூல் ஊக்குவிக்கிறது.

மரத்தில் உள்ள இலைகளின் எண்ணிக்கை முதல் வானத்தில் தெரியும் நட்சத்திரங்களின் அமைப்பு வரை குழந்தைகளின் கணிதப் பார்வையை விரிவுபடுத்தும் இந்நூல், கணிதப் பயத்தைப் போக்கி மகிழ்ச்சியான கற்றல் அனுபவத்தை வழங்கும் சிறந்த சிறார் இலக்கியப் படைப்பாகும்.

கணிதம் பேசும் - அறிவுத்தோட்டம்ஆசிரியர்கள்: விழியன், சரண்யாவெளியீடு: புக்ஸ் ஃபார் சில்ரன், சென்னை-600018/விலை:₹150/-தொடர்புக்கு: 044-24332924

16 வயதுக்குள் 3 யுத்தங்களைச் சந்தித்தவர்கள்: இளம் மேதைகளின் போராட்டங்கள்!

உலகத்தை மாற்றுவதற்கு வயது ஒரு தடையல்ல என்பதை நிரூபித்த ஆறு இளம் ஆளுமைகளின் வாழ்க்கைப் போராட்டங்களை மலையாள எழுத்தாளர் ராஜு காட்டுபுனம் எழுத, யூமா வாசுகி தமிழில் மொழிபெயர்த்துள்ள நூல் ‘இளம் மேதைகளின் போரா ட்டங்கள்’. புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியிட்டுள்ள இந்நூல், குழந்தைகளை வெறும் எதிர்காலத் தலைமுறையாகப் பார்க்காமல், நிகழ்காலத்திலேயே சமூக மாற்றத்தை உருவாக்கும் சக்தியாக முன்னிறுத்துகிறது.

தலிபான்களின் துப்பாக்கிக் குண்டுகளைத் தாண்டிப் பெண் கல்விக்காக ஐ.நா. சபையில் முழங்கிய மலாலா யூசுப்சாய், “இல்லாத எதிர்காலத்திற்காக நாங்கள் ஏன் படிக்க வேண்டும்?” என உலக ஆட்சியாளர்களை உலுக்கிய சூழலியல் போராளி கிரெட்டா தன்பெர்க், இளம்பிள்ளை வாதத்தை வென்று ஒலிம்பிக் ஓட்டப்பந்தயத்தில் மூன்று தங்கம் வென்ற வில்மா ருடோல்ப் ஆகியோரின் துணிச்சல் இதில் பதிவாகியுள்ளது. மேலும், ஹிட்லரின் நாஜி இனவெறியை நாட்குறிப்பில் பதிவு செய்த ஆன் பிராங்க், ஒன்பது வயதில் குழந்தைத் திருமணத்தை எதிர்த்து விவாகரத்துப் பெற்றுச் சட்டத் திருத்தத்திற்கு வித்திட்ட நுஜுத் அலி, காசா போர்

கொடுமைகளை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டிய பாலஸ்தீனச் சிறுமி பரா பேக்கர் ஆகி

யோரின் வரலாறு இளைய தலை

முறைக்கு மிகச்சிறந்த உத்வேகமாகும். இன்றைய குழந்தைகளுக்கு வெறும் மதிப்பெண்களுக்கான பயிற்சியை மட்டும் வழங்காமல், சமத்துவ உணர்வையும் அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்கும் துணிச்சலையும் விதைக்கும் சிறந்த அறிவுப் பெட்டகம் இந்நூல்.

இளம் மேதைகளின் போராட்டங்கள்ஆசிரியர்: ராஜு காட்டுபுனம் தமிழில்: யூமா வாசுகிவெளியீடு: புக்ஸ் ஃபார் சில்ரன், சென்னை-600018விலை: ₹120/தொடர்புக்கு: 9444567935

விற்கப்பட்டு, கடத்தப்பட்டு, கைவிடப்பட்டு மீண்டெழுந்த சிறுமிகளின் வரலாறு!

ஆப்பிரிக்கா கண்ட த்திலுள்ள கென்யா நாட்டின் தலைநகர் நைரோபியில் கடத்தப்பட்டு, விற்கப்பட்டு, கை விடப்பட்ட 17 சிறுமிகளில், வறுமை மற்றும் வன்கொடுமைகளிலிருந்து மீண்டெழுந்து இன்று சொந்தக் காலில் நிமிர்ந்து நிற்கும் 7 பேரின் நெஞ்சை உலுக்கும் வாழ்க்கைப் போராட்டங்களை ஆவ ணப்படுத்தியுள்ளது ‘நல்லார் ஒருவர்’ எனும்நூல். மெய்பொருள் பதிப்பகம் வெளி யிட்டுள்ள இந்நூல், பசியின் காரணமாகப் பாலியல் சுரண்டலில் சிக்கிய இளம் சிறுமி கள், கைவிடப்பட்ட மாற்றுத்திறனாளிக் குழந்தைகள் மற்றும் அனைத்தையும் இழந்த தாய்மார்களுக்கு மெய்பொருள் அமைப்பு வழிகாட்டி அவர்களின் வாழ்வில் ஒளியேற்றிய விதத்தை யதார்த்தமாகப் படம் பிடித்துக் காட்டுகிறது.

ஒவ்வொரு மனிதரின் வாழ்க்கை யிலும் வெளியில் தெரியாத துய ரங்களும் போராட்டங்களும் இருக்கின்றன; மேலோட்டமாகப் பார்த்து எவரையும் மதிப்பிடுவது தவறு என்பதை இந்நூல் உணர்த்து

கிறது. பெண்களைப் பரிதாபத்திற்குரி யவர்களாக பார்க்காமல், தங்க ளுக்குக் கிடைத்த சிறிய உதவியைப் பற்றிக்கொண்டு வாழ்க்கையை மீட்டெடுக்கப் போராடும் ஆற்றல்மிக்க மனிதர்களாகப் புரிந்துகொள்ள வேண்டிய அவசியத்தை ஆசிரியர் வலியுறுத்துகிறார்.

தனிமனித முன்னேற்றம் என்பது தனிப்பட்ட முயற்சியால் மட்டுமே நிகழ்வதில்லை; சமூகத்தின் அக்கறை யும் ஆதரவும் அதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

துயரங்களுக்கு இடையிலும் நம்பிக்கை யைக் கைவிடாமல் வாழும் மனிதர்களின் அனுபவங்களைப் பதிவு செய்துள்ள இந்நூல், மனித மாண்புகளையும் சமூகப் பொறுப்புணர்வையும் வாசகர்களிடம் விதைக்கும் மிக முக்கியமான படைப்பாகும்.

நல்லார் ஒருவர்வெளியீடு: மெய்பொருள் பதிப்பகம், சென்னைவிலை: ₹180/-தொடர்புக்கு: 9363687259

உணவு டெலிவரி : முதலாளித்துவ சமூகத்தின் துயரக் கதைகள் - எஸ்.பாலா

“முழு நேர வேலையைவிடச் சுதந்திரமானது, விரைவாக இலட்சக்கணக்கில் வருமானம் ஈட்டலாம்” என்ற முதலாளித்துவக் கட்டுக்கதைகளை நம்பி, டிஜிட்டல் தொழில்நுட்பத்தால் நவீன முறையில் சுரண்டப்படும் கிக் (Gig) தொழிலாளர்களின் அவல வாழ்வை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது அ. இருதயராஜ் எழுதிய ‘உணவு டெலிவரி கதைகள் (நாகரிக வாழ்வில் நவீன சுரண்டல்)’. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (NCBH) வெளியிட்டுள்ள இந்நூலுக்கு சிஐடியு மாநிலச் செயலாளர் கோபிகுமார் சிறப்புரை வழங்கியுள்ளார்.

கொரோனா காலத் தேவைகளைப் பயன்படுத்தி வளர்ந்த ஸொமாட்டோ (Zomato), ஸ்விகி (Swiggy) போன்ற பெருநிறுவனங்கள் இன்று கோடிக்கணக்கில் லாபம் ஈட்டுகின்றன. ஆனால், நாடு முழுவதும் பணியாற்றும் 77 லட்சம் டெலிவரி தொழிலாளர்களுக்குப் பணிப் பாதுகாப்போ, நிரந்தரச் சம்பளமோ, பெட்ரோல்-வாகனப் பராமரிப்புச் செலவோ, காப்பீடோ, அடிப்படை உரிமைகளோ இல்லை. நிறுவனம், ஹோட்டல் உரிமையாளர், வாடிக்கையாளர் என மூன்று எஜமானர்களைத் திருப்திப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இவர்கள் சிக்கியுள்ளனர்.

குறிப்பாக, தொழிலாளர்களின் உழைப்பை உறிஞ்சும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள ‘அல்கரிதம்’ (Algorithm) சூழ்ச்சி மிகவும் கொடூரமானது. ஆரம்பத்தில் கூடுதல் ஆர்டர்களைக் கொடுத்து ஈர்ப்பதும், பின்னர் ஊக்கத்தொகை (Incentive) இலக்கை எட்டும் கடைசி நிமிடத்தில் ஆர்டர்களைத் தடுத்து நிறுத்தி ஏமாற்றுவதும் அன்றாட நிகழ்வாக உள்ளது.

வேலைவாய்ப்பு மறுக்கப்பட்ட பொறியியல் உள்ளிட்ட உயர்கல்வி பயின்ற இளைஞர்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஒடுக்கப்பட்ட பிரிவினர் வேறு வழியின்றி இத்தொழிலில் நுழைந்து சந்திக்கும் சாலை விபத்துகள், கழிப்பறை வசதிகூட இல்லாத துயரங்கள் மற்றும் பாகுபாடுகளை இந்நூல் மனதை உருக்கும் வகையில் தோலுரித்துக் காட்டுகிறது. நவீன டிஜிட்டல் சுரண்டலைப் புரிந்துகொள்ள அனைவரும் வாசிக்க வேண்டிய முக்கிய ஆவணமாகும்.

உணவு டெலிவரி கதைகள் (நாகரிக வாழ்வில் நவீன சுரண்டல்)ஆசிரியர்: அ. இருதயராஜ்வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (NCBH)பக்கங்கள்: 196 | விலை: ₹195/-தொடர்புக்கு: 044-26251968

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.