தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தமிழ்நாட்டின் இரு தொகுதிகளுக்கு அக்.6-இல் இடைத்தேர்தல்!

yesterday
தமிழ்நாட்டின் இரு தொகுதிகளுக்கு அக்.6-இல் இடைத்தேர்தல்!

தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு, அதி​முக எம்​எல்​ஏ-க்​களாக தேர்ந்​தெடுக்​கப்​பட்ட மரகதம் குமர​வேல் (மதுராந்தகம்), சத்​தி​ய​பா​மா (தாராபுரம்), ஜெயக்​கு​மார் (பெருந்​துறை), இசக்கி சுப்பை​யா (அம்பாசமுத்திரம்), சி.​விஜய​பாஸ்​கர் (விராலிமலை), எம்.ஆர்​.​விஜய​பாஸ்​கர் (கரூர்) ஆகியோர் தங்கள் எம்.எல்.ஏ பதவியை ராஜினமா செய்திவிட்டு தவெக-வில் இணைந்தனர். இதை தொடர்ந்து இந்த தொகுதிகள் காலியானதான சட்டப்பேரவை தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவித்தார்.

இந்த நிலையில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கு மட்டும் வரும் அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாள் செப்டம்பர் 16-ஆம் தேதி; வேட்புமனு மீதான பரிசீலனை செப்டம்பர் 17 ஆம் தேதி; வேட்புமனுவை திரும்பப்பெற கடைசிநாள் செப்டம்பர் 19-ஆம் தேதி; வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 9-ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி கிழக்கு, அம்பாசமுத்திரம், விராலிமலை, பெருந்துறை, கரூர் ஆகிய தொகுதிகளில் தேர்தல் தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருப்பதால், இத்தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை.

அதே போல், புதுச்சேரியின் தட்டாஞ்சாவடி, அசாமின் நாகுன், மேற்கு வங்கத்தின் ரெஜிநகர் மற்றும் நந்திகிராம் ஆகிய 4 தொகுதிகளுக்கும் வரும் அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 9-ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.