இடைத்தேர்தல்: சிபிஎம், சிபிஐ வேட்பாளர்கள் அறிவிப்பு!
yesterday

தமிழ்நாடு இடைத்தேர்தலில் போட்டியிடும் சிபிஎம் மற்றும் சிபிஐ வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில், மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகள் காலியாக உள்ளதால், ஆக்.6 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை ஆக்.9 ஆம் தேதி நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதைத் தொடர்ந்து திமுக, தவெக, அதிமுக, நதக ஆகிய கட்சிகளின் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.

இந்த சூழலில், திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், இந்த இடைத்தேர்தலில் இடதுசாரிக் கட்சிகள் இணைந்து போட்டியிட முடிவு செய்துள்ளதாகவும், வேட்பாளர்கள் செப்.15-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், மதுராந்தகம் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பி.சுகந்தியும், தாராபுரம் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பா.லட்சுமணனுன் போட்டியிடுவதாக சிபிஎம், சிபிஐ, சிபிஐ(எம்-எல்)விடுதலை தலைவர்கள் கூட்டாக அறிவித்துள்ளனர். மேலும், இவர்கள் நாளை வேட்புமனுத் தாக்கல் செய்ய இருக்கின்றனர்.