முந்தய பக்கம்

தமிழறிஞர் சாலமன் பாப்பையா காலமானார்!

yesterday
தமிழறிஞர் சாலமன் பாப்பையா காலமானார்!
<p>தமிழறிஞரும், பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் காலமானார்.</p><p>மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றிய சாலமன் பாப்பையா, தனது நகைச்சுவை கலந்த பேச்சு, கம்பீரமான குரல் மற்றும் அழுத்தமான தீர்ப்புகளால் பட்டிமன்றங்களை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தினார். இதுவரை 12,000க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தியுள்ளார். உலகின் பல நாடுகளிலும் பல்லாயிரக்கணக்கான பட்டிமன்றங்களை நடத்தி தமிழ் மொழியின் சிறப்பை பரப்பியவர். </p><p>திருக்குறள் உள்ளிட்ட பல்வேறு தமிழ் இலக்கியம் கொண்டாடிய நூல்களுக்கு, சாலமன் பாப்பையா உரை எழுதியிருக்கிறார். தமிழ் மொழிக்கும் கலைக்கும் அவர் ஆற்றிய சேவையைப் போற்றும் வகையில் 2000-ஆவது ஆண்டில் தமிழக அரசு அவருக்கு கலைமாமணி விருதை வழங்கியது. 2021-ஆம் ஆண்டு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. சாலமன் பாப்பையாவின் மறைவு தமிழ் உலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகினர், தமிழ் ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram