முந்தய பக்கம்

டாமின் நிறுவன கனிமவளக் கொள்ளை: ஆட்சியரிடம் முன்னாள் ராணுவ வீரர் புகார்

3 Sept 2026, 1:11 am
டாமின் நிறுவன கனிமவளக் கொள்ளை: ஆட்சியரிடம் முன்னாள் ராணுவ வீரர் புகார்

டாமின் நிறுவன கனிமவளக் கொள்ளை: ஆட்சியரிடம் முன்னாள் ராணுவ வீரர் புகார்

ராணிப்பேட்டை, செப்.2-தமிழ்நாடு கனிம நிறுவனத்தில் நடைபெறும் கோடி ரூபாய் மதிப்பிலான கனிமவளக் கொள்ளையைத் தடுத்து நிறுத்தி, முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முன்னாள் ராணுவ வீரர் கேப்டன் மு. பரமசிவன் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற முன்னாள் படைவீரர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டத்தில் சோளிங்கர் வட்டம், கட்டாரி குப்பத்தைச் சேர்ந்த கேப்டன் பரமசிவன் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: டாமின் நிறுவனத்தில் ‘டெக்ஸ்கோ’ மூலம் பணியாற்றிய முன்னாள் ராணுவ வீரர்கள், அங்கு நடைபெற்ற முறைகேடுகளுக்கு உடன்பட மறுத்ததால் அதிரடியாகப் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 26 அன்று இரவோடு இரவாகப் புதிய பாதை அமைத்து, ஆகஸ்ட் 25 முதல் 30 வரை பல லாரிகளில் கோடி ரூபாய் மதிப்பிலான கருப்புச் சுரங்கக் கற்கள் கடத்தப்பட்டுள்ளன. அரசுக்கு வருவாய் ஈட்டித் தர வேண்டிய டாமின் ஊழியர்களே இந்த கனிமவளக் கொள்ளையில் ஈடுபட்டுள்ளது வேதனையளிக்கிறது. எனவே, தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் உடனடியாகத் தலையிட்டு இதில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்து இயற்கை வளங்களைப் பாதுகாக்க வேண்டும்.

Share
FacebookXWhatsAppTelegram