முந்தய பக்கம்

தென்காசியில் அரசு மருத்துவக் கல்லூரி அமைத்திடுக! வாலிபர் சங்க மாவட்ட பேரவை கோரிக்கை

yesterday
தென்காசியில் அரசு மருத்துவக் கல்லூரி அமைத்திடுக! வாலிபர் சங்க மாவட்ட பேரவை கோரிக்கை

தென்காசியில் அரசு மருத்துவக் கல்லூரி அமைத்திடுக! வாலிபர் சங்க மாவட்ட பேரவை கோரிக்கை

தென்காசி, ஆக.22-இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தென்காசி மாவட்ட பேரவை தென்காசியில் மாவட்ட பொருளாளர் காளிராஜ் தலைமையில் நடைபெற்றது. கிருஷ்ணகுமார் வரவேற்றார்.

முன்னாள் மாவட்டச் செயலாளர் மணிகண்டன், மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் மதன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாநில செயற்குழு உறுப்பினர் அரவிந்த்சாமி சிறப்புரையாற்றினார். மாவட்டத் தலைவர் மகேந்திரன் பேசினார். மாநிலசெயற்குழு உறுப்பினர் விஷ்ணு நிறைவுரையாற்றினார். அருண் நன்றி கூறினார். பேரவையில் தென்காசியில் அரசு மருத்துவக்கல்லூரி அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

புதிய நிர்வாகிகள்

பேரவையில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்டத் தலைவராக காளிராஜ், மாவட்டச் செயலாளராக மகேந்திரன், மாவட்டப் பொருளாளராககிருஷ்ணகுமார், துணைத் தலைவராக அருண், துணைச் செயலாளராக பாலயோகி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram