முந்தய பக்கம்

வேளாங்கண்ணி பக்தர்களுக்கு தமிமுன் அன்சாரி அலுவலகத்தில் வசதி

10 hours before
வேளாங்கண்ணி பக்தர்களுக்கு தமிமுன் அன்சாரி அலுவலகத்தில் வசதி

வேளாங்கண்ணி பக்தர்களுக்கு தமிமுன் அன்சாரி அலுவலகத்தில் வசதி

சிதம்பரம், ஆக 26-வேளாங்கண்ணி பேராலயத்திற்கு பாத யாத்திரையாக கடலூர் மாவட்டம் சிதம்பரம் வழியாக தினம்தோறும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் செல்கிறார்கள். இவர்களுக்கு மத பாகு பாடுகள் இல்லாமல் பல இடங்களில் உணவு உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை பல தரப்பினர் செய்து வரு கின்றனர்.

இந்த நிலையில் கடந்த செவ்வாய் கிழமை மதியம் புதுச்சேரியில் இருந்து தமிழக நிதித்துறை அமைச்சர் மரியம் வில்சன் பாதயாத்திரையை தொடங்கி புதன்கிழமை சிதம்பரம் வழியாக சென்றார்.

இந்நிலையில் வேளாங்கண்ணிக்கு சிதம்பரம் வழியாக பாத யாத்திரையாக செல்லும் பக்தர்கள் சிதம்பரம் எம்எல்ஏ அலுவலகத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: பாத யாத்திரையாக செல்லும் பக்தர்கள் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலக வளாகத்தை பயன் படுத்திக் கொள்ளலாம். அங்கு ஓய்வெடுப்பதோடு தேவையான அடிப்படை வசதிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.பாது காப்பாகவும், சிரமமின்றி தங்களது பயணத்தைத் தொடரலாம் என்று தமிமுன்அன்சாரி தெரிவித்துள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram