மாநில அளவிலான உறைவாள் போட்டியில் தஞ்சை மாணவிக்கு இரட்டை தங்கம் ஒடிசா மாநிலத்தில் நடைபெறவுள்ள தேசிய போட்டிக்கும் தேர்வு!
18 minutes before

மாநில அளவிலான உறைவாள் போட்டியில் தஞ்சை மாணவிக்கு இரட்டை தங்கம் ஒடிசா மாநிலத்தில் நடைபெறவுள்ள தேசிய போட்டிக்கும் தேர்வு!

தஞ்சாவூர், நவ. 24- 17ஆவது மாநில அளவிலான உறைவாள் போட்டியில் தஞ்சாவூர் மாணவி, இரண்டு பிரிவுகளில் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம்பெற்றார்.

சூரக்கோட்டையைச் சேர்ந்தர் எஸ்.தர்ஷினி(18). இவர் கும்பகோணத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். ஈரோடு மாவட்டம் நம்பியூரில் உள்ள தனியார் கல்லூரியில் நவ.21, 22 ஆகிய இரு நாட்கள் 17 ஆவது மாநில அளவிலான உறைவாள் போட்டி நடைபெற்றது. இதில் தமிழகத்தின் 26 மாவட்டங்களில் இருந்து 400 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

இதில் 65 கிலோவுக்கு உட்பட்ட எடைப் பிரிவில் தர்ஷினி, சண்டைப் பிரிவு, கட்டாப் பிரிவு ஆகிய இரண்டிலும் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் பெற்றார். வெற்றி பெற்ற தர்ஷினியை, பசுமை சித்தர், தமிழ்நாடு உறைவாள் சங்கத்தின் அமைப்பாளர் எஸ்.குணசேகரன், தலைவர் ஜி.செல்வராஜ், செயலாளர் எஸ்.செல்வம், பொருளாளர் அருள்செல்வி, முதன்மை நடுவர் சையது முகமது பிலால் உள்ளிட்டோர் பாராட்டினர்.

இதையடுத்து, 2027 ஜனவரி மாதம் 11 முதல் 14 ஆம்தேதி வரை ஒடிசா மாநி லத்தில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான உறைவாள் போட்டியில் பங்கேற்கதர்ஷினி தகுதிபெற்றுள்ளார்.