தீக்கதிர் முக்கிய செய்திகள்
9 Oct 2026, 10:11 pm

தீக்கதிர் முக்கிய செய்திகள்

சிவசேனா (உத்தவ்) கட்சி

மகாராஷ்டிராவில் நடைபெறவுள்ள சட்ட மேலவைத் தேர்தல் தொடர்பான திட்டமிடல்கள் காரணமாகத் தங்கள் கட்சியின் பிரதிநிதிகள் குடியரசுத் தலைவர் மனு அளிக்கும் நிகழ்வில் பங்கேற்கவில்லை. அதே வேளையில் ‘இந்தியா’ கூட்டணிக்கு எங்களின் முழுமையான மற்றும் உறுதியான ஆதரவைத் அளிக்கிறோம். ‘இந்தியா’ கூட்டணியில் எந்த பிளவும் இல்லை.

நாகா மாணவர்கள் முன்னணி

மாணவர்கள் - இளைஞர்கள் கவலைகளை மோடி அரசு கவனமாக எடுத்துக்கொள்வது நல்லது. முக்கியமாக இவர்கள்தான் வாக்கு அளிக்க வேண்டும். இவர்கள் வாக்களிக்கக் கூடாது என முடிவு செய்ய ஒன்றிய அரசுக்கும் - தேர்தல் ஆணையத்திற்கும் எந்த தகுதியும் கிடையாது. போராட்டங்களை மோடி அரசு அலட்சியமாக எடுத்துக் கொண்டால் மணிப்பூர் போல ஜந்தர் மந்தரும் மாறலாம்.

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க்

உலகின் 165-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஸ்டார்லிங்க் சேவைக்கான உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இந்திய அரசின் அனைத்து விதிமுறைகளுக்கும் சட்டங்களுக்கும் உட்பட்டு கடந்த 5 ஆண்டுகளாக நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், இன்னமும் எங்களுக்கு ஏன் அனுமதி உரிமம் வழங்கப்படவில்லை? இந்தியாவின் உண்மையான முதலாளி அம்பானிதானா?

பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி

மாணவர்கள் நம் பிள்ளைகள். அவர்களின் கவலைகளை அரசு கேட்க வேண்டும். அவர்களைத் தடியால் அடிக்க வேண்டாம். இளைஞர்களுக்கு எதிராக வன்முறையைப் பயன்படுத்துவதன் மூலம் எந்தத் தீர்வையும் எட்ட முடியாது. மாணவர்களின் குறைகளுக்கு நிதானத்துடனும், அனுதாபத்துடனும் பதிலளிக்க வேண்டும்.