தேனி: கைதிகள் தப்பியோடிய விவகாரம் - 9 காவலர்கள் பணியிடை நீக்கம்!
yesterday

தேனி மாவட்ட சிறையிலிருந்து 17 கைதிகள் தப்பியோடிய விவகாரத்தில் காவலர்கள் 9 பேரை பணியிடை நீக்கம் செய்து சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே தேக்கம்பட்டியில் உள்ள மாவட்ட சிறையில் இருந்து பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 17 கைதிகள், காவலர்களின் பாதுகாப்பை மீறி நேற்று இரவு சுமார் 10.20 மணியளவில் சிறையில் இருந்து தப்பிச் சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதை தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக 10க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைத்து தென் மண்டல ஐஜி விஜேந்திர பிதாரி தலைமையில் மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

இந்த சூழலில், விவகாரத்தில் காவலர்கள் 9 பேரை பணியிடை நீக்கம் செய்து சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார். தற்போது வரை, தப்பியோடிய 17 பேரில் 5 பேர் பிடிபட்ட நிலையில், 12 கைதிகளைத் தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.