தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருப்பரங்குன்றம் விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர் அறிக்கை தாக்கல்!

5 hours before
திருப்பரங்குன்றம் விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர் அறிக்கை தாக்கல்!

திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரத்தில், சில தவிர்க்க முடியாத காரணங்களால் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை நடைமுறைப்படுத்த முடியவில்லை என உச்சநீதிமன்றத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரம் தொடர்பான வழக்கில், ஒரே முறை மட்டும் சர்ச்சைக்குரிய சர்வே கல் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி அளித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் அரவிந்த் குமார், விபுல் பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த நவம்பர் 20-ஆம் தேதி இடைக்கால உத்தரவை பிறப்பித்தது. மேலும், இதற்கான ஏற்பாடுகளை மதுரை மாவட்ட ஆட்சியர் மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.

இதை தொடர்ந்து, திருப்பரங்குன்றத்தில் வழக்கமாக தீபம் ஏற்றப்படும் உச்சி பிள்ளையார் கோவில் அருகேவுள்ள தீப மண்டபத்தில் மட்டுமே தீபம் ஏற்றப்பட்டது. சர்வே கல் தூணில் தீபன் ஏற்றப்படவில்லை.

இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

அதில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைச் செயல்படுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம் செய்து முடித்திருந்ததாகவும், கோயில் தேவஸ்தானத்தால் அங்கீகரிக்கப்பட்ட குழு கல் தூண் பகுதிக்கு வரவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மத மரபுகள் மற்றும் ஆகம விதிகளின் அடிப்படையில் நவம்பர் 24 அன்று அறங்காவலர் குழு நிறைவேற்றிய தீர்மானத்தின்படி, வழக்கமான இடமான உச்சிப்பிள்ளையார் கோயில் அருகிலுள்ள தீப மண்டபத்தில் மட்டுமே கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டதாகவும், கல் தூணில் விளக்கு ஏற்றப்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.