தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருப்பரங்குன்றத்தில் நீதித்துறை அத்துமீறலும் சங் பரிவார அணிதிரட்டலும் - சுஜாதா சிவஞானம்

21 Nov 2026, 10:30 pm
திருப்பரங்குன்றத்தில் நீதித்துறை அத்துமீறலும் சங் பரிவார அணிதிரட்டலும்  - சுஜாதா சிவஞானம்

திருப்பரங்குன்றத்தில் நீதித்துறை அத்துமீறலும் சங் பரிவார அணிதிரட்டலும் - சுஜாதா சிவஞானம்

திருப்பரங்குன்றம் மலையில் தர்கா அருகே உள்ள கல் தூணில், நவம்பர் 24 கார்த்திகை தீப நாளில், தேவஸ்தானம் அனுமதிக்கும் சிறு குழு “ஒருமுறை மட்டும்” தீபம் ஏற்றலாம் என்று உச்ச நீதிமன்றம் நவம்பர் 20 அன்று உத்தரவிட்டுள்ளது. அதே நேரத்தில், இது எந்த மரபு, மத, சொத்துரிமையையும் அங்கீகரிக்காது, முன்னுதாரணமாகாது என்று கூறி, உயர் நீதிமன்றத் தீர்ப்பின் முடிவுகளுக்கும் இடைக்காலத் தடை விதித்துள்ளது. ஒரு கையால் அனுமதி, மறு கையால் தடை என்ற இந்தக் குழப்பமான உத்தரவை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அரசியல் இயக்கங்கள் விமர்சித்துள்ளன. இந்தச் சர்ச்சையின் வேர்களை வரலாற்று, அறிவியல் ஆதாரங்களுடன் விளக்கும், “தி கேரவன்” இதழின் 2026 ஜனவரி அட்டைக் கட்டுரையின் முக்கியப் பகுதிகள் இங்கே.

2025 டிசம்பர் 3: நடந்தது என்ன?

முருகனின் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில், நூறாண்டுகளாகக் கார்த்திகை தீபம் ஏற்றப்படுவது உச்சிப் பிள்ளையார் கோவிலில். 2025 டிசம்பர் 3 அன்றும்அங்கே தீபம் ஏற்றப்பட்டு, பல கிலோமீட்டர்தொலைவுக்குத் தெரிந்தது. ஆனாலும் “தீபம் ஏற்றப்படவில்லை” என்று கூச்சலிட்டபடி, “ஜெய் ஸ்ரீராம்”, “பாரத் மாதா கீ ஜே” முழக்கங்களுடன் சுமார் முந்நூறு பேர் கொண்ட கூட்டம் காவல்துறைத் தடுப்புகளைத் தள்ளி முன்னேறியது. “ஏதோ விநோதமான போர் முழக்கம்போலஇருந்தது. கூட்டம் காவலர்களைத் தாக்கியது; இரண்டு மூன்று காவலர்கள் காயமடைந்ததாகத் தெரிந்தது” என்கிறார், கோவில் பாதையில் வீடுள்ள பொறியியல் மாணவர் டி.சித்தார்த்தன். 144தடை உத்தரவு அறிவிக்கப்பட்டு, பாஜகவின் எஸ்.ஜி.சூர்யா, எச்.ராஜா தடுத்து வைக்கப்பட்டனர். ஆனாலும் சுமார் முப்பது பேர்தர்கா பாதையில் விரைந்து, பலகைகளைஉடைத்துத் தீ வைத்து, நெல்லித்தோப்பில் முஸ்லிம்களின் கல்லறைகளுக்கு அருகேசுள்ளிகளைக் குவித்து ஒரு “தீபம்” மூட்டினர்.

பின்னர், சர்வே தூணில் தீபம் ஏற்றஉயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளதாகக் கூறி, ஒன்றிய அரசின் சிஐஎஸ்எப் படையினர் அறுபது பேர் மலையேற முயன்றனர். மாநில அரசுக்கும்ஒன்றிய அரசுக்கும் நேருக்கு நேர் மோதல். “ஆனால் காவல்துறை ஆணையர் அங்கே இருந்தார்; பதவியில் அவர்சிஐஎஸ்எப் அதிகாரிகளைவிட மூத்தவர். 144 அமலில் உள்ளது, அனுமதிக்க முடியாது என்று சொல்லப்பட்டது” என்கிறார் மார்க்சிஸ்ட் கட்சியின் என்.தியாகராஜன். “நீங்கள் உயர் நீதிமன்ற உத்தரவை அவமதிக்கிறீர்கள்” என்று இந்துத்துவவாதிகள் வாதிட்ட காணொலி பரவலாகப் பகிரப்பட்டது. “உங்களை அனுமதிக்கமாட்டோம். விளைவுகளை நாங்கள் சந்திக்கிறோம்” என்று அமைதியாகப் பதிலளித்தார் மதுரைத் துணை ஆணையர் ஏ.ஜி.இனிகோ திவ்யன். சுற்று மாவட்டங்களிலிருந்து சுமார் 4,000 காவலர்கள் திரட்டப்பட்ட நிலையில் சிஐஎஸ்எப் படையினர் திரும்பினர். மறுநாள்பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் அதே முற்றுகை நடந்தது; கூட்டம் பாதியாகக்குறைந்திருந்ததால் அவர் எளிதில் தடுத்து வைக்கப்பட்டார். மூன்றாம் நாள் அமைதியாகக் கழிந்தாலும், அசாதாரணமான பதற்றம் நிலவியதாக ஊர் மக்கள் கூறுகின்றனர். தீபம்எப்போதும்போல உச்சிப் பிள்ளையார் கோவிலில் மட்டுமே ஏற்றப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு இல்லாவிட்டாலும்அடுத்த ஆண்டு அவர்கள் வென்றுவிடுவார்களோ என்ற கவலை இப்போது உருவாகியுள்ளது.

அயோத்தியுடனான ஒப்புமை இங்கேமிகத் தெளிவு; களத்தில் உள்ள இந்துத்துவவாதிகளே அதைச் சொல்கிறார்கள். 2025 டிசம்பர் 3-க்குப் பின் ஆயிரம் பேர்பங்கேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உண்ணாநிலைப் போராட்டத்தில் பேசிய மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், “1992 அயோத்தியைப் போலச் செய்யமுயன்றார்கள். பாஜகவும் இந்துத்துவ சக்திகளும் உருவாக்க முயலும் இந்த ஆபத்தான அரசியல் சூழ்ச்சிகளுக்குமதுரை ஒருபோதும் பணியாது” என்றார். 1990-களில் சங் பரிவாரம் தர்காவை நோக்கி நெருங்கியபோது,பள்ளிவாசல், கோவில் நிர்வாகங்களுடன் இணைந்து மதப் பிளவைத் தடுத்தவர், அன்று இளம்சிபிஐ(எம்) தலைவராக இருந்த வெங்கடேசன்.

ஒரு மலை, மூன்று பெயர்கள்

ஒற்றைப் பாறையால் ஆன இந்த மலையை சமணர்கள் “சமணர் குன்று”, இந்துக்கள் “கந்தர் மலை”, முஸ்லிம்கள் “சிக்கந்தர் மலை” என்கின்றனர். ஏறத்தாழ ஆயிரம் அடி உயரம் வரை செல்லும் பாதை, உச்சிப் பிள்ளையார்கோவில், “நெல்லித்தோப்பு” என்ற சிறு நெல்லிமரத் தோப்பு ஆகியவற்றைக் கடந்து, சூஃபி துறவி ஹஸ்ரத்சுல்தான் சிக்கந்தர் பாதுஷா அவுலியாவின் தர்காவை அடைகிறது.

இங்குள்ள நல்லிணக்கம் எவ்வளவுஆழமானது என்றால், அதை வரையறுப்பதே கடினம். தர்கா விருந்துக்கு ஏராளமான இந்துக் குடும்பங்கள் செல்கின்றன; தர்காவுக்கான ஹலால் அறுப்பைச் செய்வதும் ஓர் இந்துக் குடும்பமே. மலையடிவாரப் பள்ளிவாசல்அருகே “அமுதா சலூன்” வைத்திருக்கும் ஆர்.ஆசையின் நெற்றி நிறைய விபூதி. தர்கா விழா நாட்களில் முஸ்லிம்பயணிகளுக்கு முடி வெட்டுபவர் அவர்; அதற்காக, விருந்தில் ஜமாஅத்தின் மூத்தவரான ஹஸ்ரத்துடன் சேர்ந்து அவருக்கேமுதலில் பரிமாறப்படுகிறது. “அதன் பிறகுதான் மற்றவர்கள் சாப்பிடுவார்கள்” என்று கத்தரிக்கோல் ஓசைக்குநடுவே சாதாரணமாகச் சொல்கிறார் அவர்; இன்று மதப் பிரிவினையாக அதைக் கேட்பதே அவருக்கு வியப்பாக இருந்தது.

தமிழ்நாட்டில் முஸ்லிம்கள் 5.8 சதவீதம்; கிறிஸ்தவர்கள் சற்று அதிகம்; இந்து அல்லாதோர் அனைவரும் சேர்ந்தே சுமார் 12 சதவீதம். ஆனாலும் 1960-களிலிருந்து ஆளும் பார்ப்பனிய எதிர்ப்பும், பிற்படுத்தப்பட்டோர் அரசியலும் இந்துதேசியவாதம் வளர்வதைப் பெருமளவு தடுத்து வந்துள்ளது; இங்கே மதத்தைவிடச் சாதியே பெரிய பிளவு. திமுக, அதிமுக இரண்டுமே முஸ்லிம் சமூகத்தில்ஆழமாக வேரூன்றியவை; முஸ்லிம் லீக்,மனிதநேய மக்கள் கட்சி, தமுமுக ஆகியவற்றுடன் நீண்ட தொடர்பு கொண்டவை.“பாருங்கள், எங்கள் முஸ்லிம் சகோதரர்களுக்கும் எங்களுக்கும் வேறுபாடில்லை” என்று முடியும் உணர்ச்சிமயமான யூடியூப் காணொலிகளுக்கான தேவை அண்மையில்தான்எழுந்துள்ளது.

மலையின் வரலாறு

திருப்பரங்குன்றம் மலையின் வரலாற்றில் வன்முறையான அகற்றல்கள், அழிப்புகள், மறு

விளக்கங்களும் சம அளவில் உண்டு. “கி.மு. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த பத்து முதல் பன்னிரண்டு சமணக்கற்படுக்கைகளும், தமிழி எழுத்தில் ஒரு கொடைக் கல்வெட்டும் அங்கே உள்ளன. அதுதான் மிகப் பழையதொல்லியல் சான்று. சமணர்களின் எட்டு முக்கியக் குன்றங்களில், ‘பெருங்குன்றம்’ என்ற இதுவேமுதன்மையானது என்று இரண்டாம் நூற்றாண்டுத் தமிழ்ப் பாடல்கள் சொல்கின்றன” என்கிறார், தமிழ்நாடுதொல்லியல் துறையின் ஓய்வுபெற்ற அதிகாரியும் “மாமதுரை” நூலின் இணை ஆசிரியருமான சொ.சாந்தலிங்கம்.

பழங்காலக் கல்வெட்டுகளில் இங்கு முருகன் கோவில் இருந்ததற்குச் சான்று இல்லை. “இன்றைய சுப்பிரமணியர் கோவிலின் குடைவரை கி.பி. 723-இல்உருவானதாக ஒரு கல்வெட்டு கூறுகிறது; ஆனால் அது ‘சம்பு’ என்றதெய்வத்துக்காக, அதாவது சிவனுக்காகஅமைக்கப்பட்டது” என்கிறார் சாந்தலிங்கம். கி.பி. இரண்டு முதல் நான்காம் நூற்றாண்டுக்குள் தொகுக்கப்பட்ட திருமுருகாற்றுப்படைதான் இந்த மலையை முருகனுக்கு உரியதாக முதலில் பாடுகிறது. “சங்க இலக்கியத்தில் முருகன் மலைக் குடிகளின் வீரன். ஆட்டு ரத்தத்தில் தினை சமைத்து அவன் விருந்துண்டதாகப் பாடல்கள் சொல்கின்றன. அவன் மணந்தது குறவர் குலத்து வள்ளியை. திருச்செந்தூரில் வள்ளிக்கு ஒருகுடைவரைக் கோவிலும் உண்டு.” கி.பி. 773 வாக்கில் இது சிவன், பெருமாள், விநாயகர், முருகன், துர்க்கை என ஐந்துதெய்வக் கோவிலானது; பிற்காலப் பாண்டியர் காலத்திலும்முதன்மைத் தெய்வம் “திருப்பரங்குன்றத்து உடைய நாயனார்” என்ற சிவனே.

தமிழ்நாட்டுக்குச் சைவம் வந்த காலமும், கி.பி. 630-இல் கீழக்கரையில் கட்டப்பட்ட பழைய ஜும்மாபள்ளி உள்ளிட்ட முதல் பள்ளிவாசல்கள் தோன்றிய காலமும் ஒன்றே. மதுரையைச் சைவம் வென்றது வன்முறையாக நடந்தது; பாண்டிய மன்னர்கள் சமணர்களைத் துன்புறுத்தினர். சமய வாதத்தில் தோற்ற 8ஆயிரம் சமணர்கள் கழுவேற்றப்பட்டதாகச் சைவத் தல புராணங்களே சொல்கின்றன. இங்கும் தீர்த்தங்கரர் சிற்பங்கள் மீது ஏழாம் நூற்றாண்டில்சிவன்உருவங்கள் செதுக்கப்பட்டன. 14-ஆம் நூற்றாண்டில், தில்லி சுல்தானிடமிருந்து பிரிந்த தளபதிகளின் 43 ஆண்டுகால மதுரை சுல்தானியஆட்சியை, இபின் பதூதா போன்ற முஸ்லிம்வரலாற்றாசிரியர்களே “வன்முறையான காலம்” என்கின்றனர். (அந்தக் காலத்தில்சுல்தானிய அரச குடும்பத்தில் அதிகாரப்போட்டியில் அவர்களுக்குள் மோதி ரத்தம்சிந்தினர்) அதன்கடைசி சுல்தானானசிக்கந்தர் ஷா, போர்த் தளபதியாக அல்லாமல் ஆன்மீகவாதியாக வாழ்ந்தவர்; கி.பி. 1378-இல் இறந்த அவர் மலையில் அடக்கம் செய்யப்பட்டு, விரைவில்தர்கா எழுந்தது. கி.பி. 1182 முதல் இருந்தசையத் சிக்கந்தர் என்ற சமய போதகரின் கல்லறையாகவும்இது இருக்கலாம் என்று முஸ்லிம் வரலாறுகள் குறிப்பிடுவதாக, ஏ.ஜான் வின்சென்ட் தொகுத்த “பரங்குன்றம்: பண்பாடும் அரசியலும்” நூல் கூறுகிறது. கோவிலைப் போலவே தர்காவின் வரலாற்றையும் துல்லியமாக வரையறுப்பது கடினம். அதற்கு 250 ஆண்டுகள் கழித்துத்தான், தெலுங்கு பேசும் மதுரை நாயக்க மன்னர்கள் சுப்பிரமணியர் கோவிலின் இன்றைய அமைப்பைக் கட்டினர்.

சுற்றுவட்டாரக் கிராமக் கோவில்களில் இன்றும் இறைச்சிப் படையலே வழிபாடு; அங்கே தமிழில் வழிபாடு நடத்தும் பார்ப்பனர் அல்லாத பூசாரிகள். அரசுகளின் மானியங்களால் வளர்ந்தசுப்பிரமணியர் கோவில், அவற்றைத் தன்நிர்வாகத்தின் கீழ் கொண்டுவந்தது; இன்று அங்கே பூசாரிகள் முற்றிலும் பார்ப்பனர்கள், வழிபாடு சமஸ்கிருதத்தில். “தென் தமிழ்நாட்டில் மட்டும் குறைந்தது ஐந்நூறு கிராமங்களில் வள்ளிதிருமண நாடகங்கள் நடக்கின்றன. இந்திரன் மகள் தெய்வானையுடனான புராணத் திருமணத்தை எந்தக் கிராமமும் கொண்டாடுவதில்லை” என்கிறார் சாந்தலிங்கம். அந்தத் திருமணமே தமிழ்க்கடவுளைப் பார்ப்பனியத் தெய்வ வரிசையோடு பிணைத்து,சுப்பிரமணியன், கார்த்திகேயன், ஸ்கந்தன் எனப் பெயர்மாற்றியது. அந்தப் பிந்தைய திருமணம்நடந்த இடம்என்று சொல்லப்படுவது திருப்பரங்குன்றம்தான். ஆனாலும் கோவிலுக்கு வருபவர்கள் இந்தத்தொடர்புகளோடு முருகனை அணுகுவதில்லை. மக்களிடம் முருகன் இன்றும்தமிழ் மொழியின்காவலன்; ஆட்டோக்களின் பின்புறத்திலும் கடைச் சுவர்களிலும் அவன் உருவம்;தமிழ் ஆண்களின் பொதுவான பெயர்கள்பலவும் அவன் பெயர்களே.

“சோதனைகளுக்கு நடுவிலும் நல்லிணக்கத்தின் சான்றுகள் இந்த வரலாற்றில் ஏராளம். கோரிப்பாளையம் தர்காவைப் புதுப்பிக்க நாயக்க மன்னர்கள்நிதி அளித்தனர்; மீனாட்சியம்மன் கோவில் பராமரிப்புக்கு முஸ்லிம் மன்னர்கள் செலவிட்டனர். சுல்தானியகாலத்தில் அழிக்கப்பட்ட சில கோவில்களைப் புதுப்பித்தவர்கள் புதுக்கோட்டை முஸ்லிம் குறுநிலத் தலைவர்கள்” என்கிறார் ்சாந்தலிங்கம். சமணர்களின் வாரிசுகள், சைவர்கள்,முருக பக்தர்கள், சூஃபிகள் அனைவருக்கும் இந்த மலை இன்றும் புனிதத் தலம்.

தீபத்தூண் அல்ல, சர்வே தூண்

2025 டிசம்பருக்குப் பின் தொலைக்காட்சிகள் ஒரே குரலில் “தீபத்தூண் பிரச்சனை” என்றன.“தீபத்தூண் வரலாற்றை மாற்றி எழுதும் முயற்சி” என்றது சிஎன்என்-நியூஸ் 18; “திமுகவின் திருப்திப்படுத்தும்அரசியல்” என்றது இந்தியா டுடே; “தீபத்தூணை வக்பு உரிமை கோருகிறது” என்றது என்டிடிவி. ஆனால் 170 ஏக்கர் மலையின் ஒவ்வோர் அங்குலம் குறித்தும் தீர்ப்பளித்த 12 வழக்குகளிலும், அரசு, கோவில், இந்துத்துவக் குழுக்கள் எவரின்மனுக்களிலும், “தீபத்தூண்” என்ற சொல்ஒருமுறைகூட இல்லை. 2025 அக்டோபர் வழக்கும், முந்தைய நீதி மரபுகள் அனைத்தையும் உடைத்த ஒரு நீதிபதியும் கண்டுபிடித்த சொல் அது.

2022-இல் தகவல் அறியும் உரிமைச் சட்டக் கேள்விக்கு, சென்னை புவிசார் தரவுமையமும் டேராடூனில் உள்ள இந்தியநில அளவைத் துறையின் புவிமானவியல் ஆய்வுப் பிரிவும், மலை உச்சியில் 1808, 1871-ஆம் ஆண்டுகளில் அமைக்கப்பட்ட இரண்டு முக்கோணவியல் அளவை நிலையங்கள் உள்ளதாகப் பதிலளித்தன. 1899-இல் வெளியான“இந்தியாவின் பெரும் முக்கோணவியல் அளவை” நூலின் 29-ஆவது தொகுதி மூன்று தூண்களின்இருப்பிடங்களைக் குறிக்கிறது: ஒன்று தர்கா அருகில், மற்றொன்று 150 அடி வடமேற்கில், மூன்றாவது அதிலிருந்து 159 அடி தென்கிழக்கில். இன்று மூன்று தூண்களும் இருக்கும் இடங்களோடு இவை சரியாகப்பொருந்துகின்றன.

“அந்தத் தூணின் குழியில் அதிக

பட்சம் 200 மில்லி எண்ணெய்தான் பிடிக்கும். மலை 319 மீட்டர் உயரம். ஊருக்கே தெரியும் தீபத்தை அதில் எப்படி

ஏற்ற முடியும்? உச்சியில் வீசும் காற்றில், ஏற்றுபவருக்கே அது தெரியாது” என்கிறார்மதுரை எழுத்தாளர் அ.முத்துகிருஷ்ணன். அந்தக் குழியில் எண்ணெயோ கரியோ எரிந்த தடயம் எதுவும் இல்லை என்று தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. உண்மையில் மலை உச்சி ஒருபோதும் சர்ச்சைக்குரிய இடமாக இருந்ததில்லை. ஒரு கிரானைட் சமதளத்தில் சர்வே தூண்; 150 அடி தள்ளி, சற்று உயரத்தில் தர்கா. அந்தத் தூணை அடைய தர்கா வழியாகத்தான் செல்ல வேண்டும்.

திருப்பரங்குன்றம்: காலவரிசை

• கி.மு. 2-ஆம் நூற்றாண்டு: சமணக்கற்படுக்கைகள், தமிழிக் கல்வெட்டு.

• கி.பி. 2–4-ஆம் நூற்றாண்டு: திருமுருகாற்றுப்படை, முருகனின் தலமாக.

• கி.பி. 723: சிவனுக்கான குடைவரை (கல்வெட்டுச் சான்று).

• கி.பி. 773: ஐந்து தெய்வக் கோவில்.

• 7-ஆம் நூற்றாண்டு: தீர்த்தங்கரர் சிற்பங்கள் மீது சிவன் உருவங்கள்.

• கி.பி. 1378: சிக்கந்தர் ஷா மறைவு; தர்கா.

• 17-ஆம் நூற்றாண்டு: நாயக்கர்கள் கட்டிய இன்றைய கோவில் அமைப்பு.

• 1808, 1871: பிரிட்டிஷ் நில அளவை நிலையங்கள்.

நூறாண்டு நீதிமன்ற வரலாறு

மலை உரிமை தொடர்பான முதல்பெரிய வழக்கை, தேவஸ்தானத்தைச் சேர்ந்த கே.ஆர்.வி.அழகப்பச் செட்டியார் 1917-இல்தொடுத்தார். மலையின் கிரானைட்டை வெட்டியெடுக்கும் உரிமை குறித்து பிரிட்டிஷ் அரசுக்கு எதிராகவும், நெல்லித்தோப்பையும் பாதையையும் கோரி தர்காவுக்கு எதிராகவும் அது தொடுக்கப்பட்டது. 1879-இல் அரசு கல் வெட்டுவதைத் தேவஸ்தானம் தடுத்திருந்தது; ஆனால் அது புனிதம் காரணமாக அல்ல; பின்னர் 1897-இல் மலையைச் சுற்றிய சாலை அமைக்க அவர்களே மலையின் பகுதிகளை வெட்டியெடுத்தனர். பலசமயங்களும் தெய்வங்களும் உரிமை கோரும் இத்தகைய பன்முகப் பண்பாட்டுச் சின்னத்தின் உரிமையை எப்படித்தீர்மானிப்பது? இரு தரப்புப் பிரதிநிதிகளுடனும் மலைக்கே சென்று பார்வையிட்டு, வரலாறு, மத உரிமைகள், நிலப் பயன்பாட்டை ஆராய்ந்து நீதிபதி பி.ஜி.ராமஐயர் எழுதிய தீர்ப்புதான் இன்றுவரை மலையின் உரிமையை வரையறுக்கிறது. “நெல்லித்தோப்பும் அதிலுள்ள அனைத்தும், படிக்கட்டுப் பாதை, புதிய மண்டபம், பள்ளிவாசலும் கொடிக்கம்பமும் நிற்கும் குன்றின் முழு உச்சி”முஸ்லிம்களுக்கு உரியவை; பாதையிலுள்ள இரண்டு சிறுகோவில்கள், மலையடிவாரம், சுற்றுச்சாலை உள்ளிட்ட மீதி அனைத்தும் கோவிலுக்கு. பின்னர் சில நீதிபதிகள் இதை மாற்ற முயன்றபோதும், நீதிமன்றங்கள் ஐயரின் கண்டறிதல்களை மீண்டும்நிலைநாட்டின.

1958-இல் நெல்லித்தோப்பு மண்டபத்தை எதிர்த்துக் கோவில் தொடுத்த வழக்கு, ஐயர் தீர்ப்பைச் சுட்டிக்காட்டித் தள்ளுபடியானது; அதற்குள் கோவில் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ்வந்திருந்தது. அளவை அதிகாரி நியமிக்கப்பட்டு, நிலம் அளக்கப்பட்டு, 1965தீர்ப்பில் எல்லைகள்வரையறுக்கப்பட்டன. “1978-இல் எம்ஜிஆர் ஆட்சியில்,நெல்லித்தோப்பை ஒட்டிய ‘குதிரைச்சுனை’ஊற்றைக் கைப்பற்றக் கோவில் மற்றொருமுயற்சி செய்து தோற்றது” என்கிறார் மதுரை வழக்கறிஞர் வாஞ்சிநாதன். உரிமை ஏற்கெனவே தீர்க்கப்பட்டு

விட்டதாகக் கூறி நீதிபதி என்.சுப்பிரமணியன் அதைத் தள்ளுபடி செய்தார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.