முந்தய பக்கம்

திருவொற்றியூரில் மாணவர் கொலை – மேலும் 3 சிறுவர்கள் கைது!

3 hours before
திருவொற்றியூரில் மாணவர் கொலை – மேலும் 3 சிறுவர்கள் கைது!
<p>திருவொற்றியூரில் 12-ஆம் வகுப்பு மாணவர் தனுஷ் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில், மேலும் 3 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>திருவொற்றியூர் வசந்தா நகர் 1வது தெருவில் வசிக்கும் பட்டியலின வகுப்பைச் சார்ந்த மாணவன் தனுஷ் அப்பகுதியில் உள்ள ஜெயகோபால் கரோடியா அரசு மேல்நிலைப் பள்ளியில் +2 படித்து வந்தார். வழக்கம் போல ஆகஸ்ட் 12 அன்று பள்ளிக்குச் சென்ற போது, ஆசிரியர் பள்ளியில் மேல்மாடியில் உள்ள அறையிலிருந்து நோட் புத்தகம் எடுத்து வரச் சொல்லியுள்ளார். மாணவன் தனுஷ் மற்றும் அவருடன் மற்றொரு மாணவனும் மேல்மாடிக்குச் சென்றுள்ளனர். அங்கு கஞ்சா போதையில் இருந்த சில மாணவர்கள் புகையை மாணவர்கள் மீது ஊதியுள்ளனர். இதை தனுசுடன் சென்ற மாணவர் தட்டிக் கேட்டுள்ளார். இருவரும் ஆசிரியரிடமும் புகார் தெரிவித்துள்ளனர். ஆசிரியர்களும் சம்பந்தப்பட்ட மாணவர்களை கண்டித்துள்ளனர்.</p><p>இதை மனதில் வைத்துக் கொண்டு பள்ளியில் போதைப்பொருளை உட்கொண்ட மாணவர்கள் மற்றும் சிலர் கும்பலாக ஒன்றுசேர்ந்து ஆகஸ்ட் 14, 2026 அன்று மாணவன் தனுஷை கடுமையாக தாக்கியதில் சம்பவ இடத்திலேயே தனுஷ் உயிரிழந்துள்ளார். இதுவரை 12 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதில் மூன்று பேர் மட்டுமே 18 வயதுடையவர்கள், மற்றவர்கள் 17 வயதுடையவர்கள்.</p><p>இந்த சூழலில் மாணவர் தனுஷ் கொலை வழக்கில் மேலும் 3 சிறுவர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram