ஆயிரக்கணக்கில் மூடப்படும் பள்ளிகள் பறிக்கப்படும் ஏழைகளின் கல்வி - ஜி. ராமகிருஷ்ணன்
yesterday

ஆயிரக்கணக்கில் மூடப்படும் பள்ளிகள் பறிக்கப்படும் ஏழைகளின் கல்வி - ஜி. ராமகிருஷ்ணன்

மத்தியப் பிரதேசத்தின் பள்ளிக் கல்வித் துறை டிசம்பர் மாதத்தில் நடத்திய ஆய்வு, மாநிலத்தில் 7 லட்சத்து 37ஆயிரம் குழந்தைகளைப் பற்றிய எந்தவொரு பள்ளிப் பதிவுகளும் இல்லை என்று கூறியிருக்கிறது. இவர்கள்அரசு அல்லது தனியார் என எந்தப் பள்ளியிலும் சேர்க்கப்படவில்லை. பெரும்பாலும் பழங்குடியினர் அதிகம்வசிக்கும் மாவட்டங்களைச் சேர்ந்த இக்குழந்தைகள், கல்வி அமைப்பின் பதிவுகளிலேயே இடம்பெறாமல் விடுபட்டுள்ளனர்.

உதாரணமாக, ஜபுவா மற்றும் சிவபுரி மாவட்டங் ங்களில் 29 ஆயிரம் குழந்தைகள் ‘விடுபட்டவர் பட்டியலின்’ (‘DropBox’) கீழ் வருகின்றனர். பள்ளியிலிருந்து பாதியிலேயே வெளியேறும் அபாயத்தில் உள்ள குழந்தைகளைக் குறிக்கத் துறை பயன்படுத்தும் சொல் இதுவாகும். மாநிலம் முழுவதும் உள்ள 55 மாவட்டங்களில், 3,500-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளில் இந்த கல்வியாண்டில் ஒரு புதிய மாணவர் கூடசேரவில்லை. மேலும் சுமார் 6,500 பள்ளிகளில் பத்துக்கும் குறைவான மாணவர்களே புதிதாகச் சேர்ந்துள்ளனர்.

பள்ளியில் சேராத அல்லது இடையில்நின்ற குழந்தைகளின் விவரங்களை அந்தந்தப் பள்ளிகளின் அறிவிப்புப்பலகைகளில் ஒட்டவும், அவர்களை நேரடியாகத் தொடர்பு கொள்ளவும், அந்த விவரங்களை மாநில இணையதளத்தில் பதிவேற்றவும் அனைத்து மாவட்டக்கல்வி அதிகாரிகளுக்கும் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டது. மாநிலம் முழுவதும் 11 லட்சத்து 38 ஆயிரம்குழந்தைகள் ‘விடுபட்டவர் பட்டியல்’ (Drop Box) எனப்படும் பட்டியலில் இடம்பெற்றுள்ள னர். மேலும் 1 லட்சத்து 23 ஆயிரம் குழந்தைகள் ஏற்கனவேபள்ளியிலிருந்து இடைநின்றவர்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளனர். குடும்பங்கள் இடம்பெயர்ந்தது அல்லது வேலைக்காக வேறு இடங்களுக்குசென்றது போன்ற காரணங்களால் மேலும் 1 லட்சத்து 55 ஆயிரம் குழந்தைகள் பள்ளியை விட்டு வெளியேறியுள்ளனர். இத்தகைய சூழலைத் தடுப்பதற்காகவே ‘வீடு தேடிச் சென்று தொடர்பு கொள்ளும் இயக்கம்’ போன்ற சில திட்டங்களை இத்துறைசெயல்படுத்தியது. இருப்பினும், இத்திட்டங்கள் எவற்றின் மூலமும் சென்றடையாத 7 லட்சத்து 50 ஆயிரம்குழந்தைகளை மாநில அரசின் சொந்தத் தணிக்கை கண்டறிந்துள்ளது.

நாடு முழுவதும் இதே நிலைதான்

மத்தியப் பிரதேசம் ஒரு தனித்த நிகழ்வு அல்ல. இது தற்போது நாடு முழுவதும் காணப்படும் ஒரு போக்கின் மிகத் தெளிவான வெளிப்பாடாகும். இப்போக்கு ஒரு குறிப்பிட்ட வர்க்கத் தன்மையைக் கொண்டுள்ளது. ‘சீர்திருத்தம்’ அல்லது ‘முறைப் படுத்துதல்’ போன்ற அதிகாரப்பூர்வச் சொற்கள் அந்தத்

தன்மையை மறைக்கவே பெரிதும் முயல்கின்றன.

அரசின் கொள்கை ஆய்வு அமைப்பான ‘நிதி ஆயோக்’ இது குறித்த புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது: கடந்த பத்தாண்டுகளில் சுமார் 94 ஆயிரம் அரசுப்பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையில் 2 கோடியே 26லட்சம் சரிவு ஏற்பட்டுள்ளது.மொத்த மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளிகளின் பங்கு 2005-ல் 71 சதவீதமாகஇருந்த நிலையில், 2024-25-ல் அது 49.24 சதவீதமாகக் குறைந்துள்ளது. பிப்ரவரி மாதம் மக்களவையில்சமர்ப்பிக்கப்பட்டஅரசுத் தரவுகள் இந்த வீழ்ச்சியின் அளவை உறுதிப்படுத்துகின்றன.கல்விக்கான ஒருங்கிணைந்தமாவட்டத் தகவல் அமைப்பின் புள்ளிவிவரங்களின்படி, நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை2014-15-ல் 11 லட்சத்து 07 ஆயிரமாக இருந்த நிலையில், அது 2023-24-ல் 10 லட்சத்து 17 ஆயிரமாகக் குறைந்துள்ளது.ஏறக்குறைய 89 ஆயிரம் பள்ளிகள்குறைந்துள்ள இந்த எண்ணிக்கை, நிதி ஆயோக்கின் கணக்கெடுப்புடன்கிட்டத்தட்ட முழுமையாக ஒத்துப்போகிறது. அதே பத்தாண்டுக் காலத்தில், தனியார்பள்ளிகளின் எண்ணிக்கை 2 லட்சத்து 88 ஆயிரத்திலிருந்து 3 லட்சத்து 31 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை 2018-19-ல் 1 லட்சத்து 22 ஆயிரமாக இருந்த நிலையில்,அடுத்த ஆண்டிலேயே அது 99 ஆயிரத்து 411 ஆகக் குறைந்தது. அதாவது பன்னிரண்டு மாதங்களில் சுமார் 22ஆயிரத்து 600 பள்ளிகள்குறைந்தன. அதே ஆண்டில் உத்தரப் பிரதேசத்தில் அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை 1 லட்சத்து 63 ஆயிரத்திலிருந்து 1 லட்சத்து 38 ஆயிரமாகக் குறைந்தது. இது25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளின்சரிவாகும்.

இதுகுறித்து மக்களவையில் பதிலளித்த சம்பந்தப்பட்ட அமைச்சர், கல்வி என்பது ‘பொதுப் பட்டியலில்’ உள்ள ஒருதுறை என்றும், இப்போக்கிற்கான முழுப் பொறுப்பும் மாநிலங்களையே சாரும்என்றும் தெரிவித்தார். ஆனால்,இதனை ஏற்க முடியாது. வசிப்பிடத்திற்கு அருகிலேயே பள்ளிகள்அமைவதை உறுதிசெய்யும் ‘கல்வி உரிமைச்சட்டம்’ஒரு மத்தியச் சட்டமாகும். அதில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளைச் செயல்படுத்துவது ஒன்றியஅரசின்பொறுப்பாகும்.

அதிக அளவில் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பது ஏழைகளே!

பள்ளிகள் மூடப்படும் எண்ணிக்கையை, படிப்படியான மக்கள்தொகை நகர்வு, நகர்ப்புற இடப்பெயர்வு போன்ற காரணங்களால் மட்டும் விளக்க முடியாது.மாறாக, இது மிகவும் ஏழ்மையான மற்றும் கிராமப்புறகுழந்தைகள் இருக்கும் மாநிலங்களில் எடுக்கப்பட்ட ஓர் ஒருங்கிணைந்த நிர்வாக முடிவாகும்.

இந்தியாவில் உள்ள அரசுப் பள்ளிகள், அனைத்துத்தரப்பினராலும் சமமாகப் பயன்படுத்தப்படும் ஒரு நடுநிலையான பொதுப் பயன்பாட்டுச் சேவை அல்ல. அவை,விகிதாசாரத்திற்கு அதிகமாக, பட்டியல்சாதியினர், பட்டியல் பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் ஏழ்மையான பிரிவினர் போன்ற ஏழைகளின் பள்ளிகளாகவே இருக்கின்றன. இந்தியர்களில் 26.4 சதவீதம் பேர் இன்னும் அதிகாரப்பூர்வவறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ளனர். அவர்களின்குழந்தைகளே அரசு வகுப்பறைகளை நிரப்புகின்றனர்.

2019-ஆம் ஆண்டின் தேசிய மாதிரி கணக் கெடுப்பு பகுப்பாய்வில், இலவசக் கல்விக்கான அணுகல் சீரற்ற முறையில் குறைந்து வருவதும், முஸ்லிம் மற்றும் பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பழங்குடியினக் குடும்பங்கள் தங்களுக்கு அருகிலுள்ள பள்ளிகளிலிருந்து ஓரங்கட்டப்படுவது கண்டறியப் பட்டிருக்கிறது. ஜம்மு - காஷ்மீரின் சீரமைப்புத் திட்டம்குறித்த அறிக்கை, குழந்தைகள் தற்போது செயல்படும் பள்ளியை அடைய தினமும் நான்கு முதல்ஆறு கிலோமீட்டர் வரை பயணம் செய்வதை ஆவணப்படுத்தியுள்ளது. இது கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் உள்ளஅருகமைப் பள்ளி விதிமுறைஉள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அருகிலுள்ள பள்ளி இல்லாமல் போகும்போது, முதலில் பள்ளியிலிருந்து விலக்கப்படும் சிறுமிகள் மீது இந்தச் சுமசமமற்ற முறையில் விழுகிறது. பள்ளிகளை ஒன்றிணைக்கும் நடவடிக்கையின் நடைமுறை விளைவு என்பது, பெரும்பாலும் ஒரே ஆசிரியர்ஒரே நேரத்தில் ஐந்து வகுப்புகளைக் கையாள வேண்டிய சூழலாகவே அமைகிறது. இதனால் ஒவ்வொருகுழந்தையின் பின்னணியையும் அறிந்துகொள்ள இயலாமல் போகிறது.

கல்வி உரிமைச் சட்டத்தின் வீழ்ச்சி

2010 முதல் அமலில் உள்ள கல்வி உரிமைச் சட்டம்,6 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாயக் கல்வியை உறுதி செய்கிறது. ஆனால்,பள்ளிகளை மூடும் மற்றும் இணைக்கும் போக்கு அந்தச் சிறிய வாய்ப்பையும் கூட அரித்து வருகிறது.அரசு, பள்ளி மற்றும் குடும்பம் ஆகியவற்றுக்கு இடையே அதிகாரச் சமநிலை இருப்பதாக கல்வி உரிமைச் சட்டம்கருதுகிறது. ஆனால் நடைமுறையில் அத்தகைய சமநிலை இல்லை. இதனால், சட்டரீதியாக உரிமையைக் கோரும் வாய்ப்புகள் தவிர்க்க முடியாமல்பயன்படுத்தப்படாமலே போகின்றன. பெற்றோர்களுக்கும் சமூகத்தினருக்கும் முறையான குரலை அளிப்பதற்காககல்வி உரிமைச் சட்டத்தில் உருவாக்கப்பட்ட ‘பள்ளி மேலாண்மைக் குழுக்கள்’ பெரும்பாலும் கூட்டப்படுவதேஇல்லை.

சுமார் ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு முன்பு, அப்போதைய காலனித்துவ அரசிடம் ஜோதிராவ் பூலே முன்வைத்த அதே எதிர்ப்புதான் இது. 1882-ல் ஹண்டர் ஆணையத்திடம் சமர்ப்பித்த குறிப்பில், கல்வி விஷயத்தில் பிரிட்டிஷ் அரசு கடைப்பிடித்த ‘தலையிடாக் கொள்கையை’ பூலே கடுமையாக விமர்சித்தார். ஏற்கனவே சலுகை பெற்ற ஒரு சிறு பிரிவினரின் உயர்கல்விக்கு அதிக வளங்களை ஒதுக்கிய அதே வேளையில், சாமானிய மக்களின் தொடக்கக் கல்வியைப்போதிய நிதியின்றித் தவிக்கவிட்டு, தனியார் மற்றும் மதப் பணி நிறுவனங்களைச் சார்ந்திருக்கசெய்தது அரசின் அடிப்படை கடமைக்குச் செய்த துரோகம் என்று அவர் வாதிட்டார்.இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும், ஏற்கனவே முன்னேறிய நிலையில் உள்ளவர்களுக்குப் பயன்படும் விஷயங்களுக்கு நிதியுதவி அளிப்பதையும், கிராமப்புற மற்றும் தலித்-பழங்குடி இன ஏழைகளின் கல்வியை‘குறைக்கப்பட வேண்டிய ஒரு செலவு’ என்றுகருதுவதையும் அரசு தொடர்ந்து செய்து வருவது கவலைக்குரிய போக்காக இருந்து வருகிறது.பீப்பிள்ஸ் டெமாக்ரசி, ஆகஸ்ட் 9, 2026 தமிழில் தொகுப்பு: ச.வீரமணி