முந்தய பக்கம்

நெல்லை: பாலியல் வன்கொடுமை வழக்கில் பதிரியாருக்கு தூக்கு தண்டனை!

1 hour before
நெல்லை: பாலியல் வன்கொடுமை வழக்கில் பதிரியாருக்கு தூக்கு தண்டனை!

நெல்லையில் பிரார்த்தனைக்கு வந்த 4 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் பாதிரியார் அபிரகாம் (47) என்பவருக்கு தூக்கு தண்டனை விதித்து மாவட்ட போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டு, நெல்லை மாவட்டம் தேவர்குளம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் பிரார்த்தனைக்கு வந்த சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக அபிரகாம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை நெல்லை மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், குற்றம் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து பாதிரியார் அபிரகாமுக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

மேலும், பாதிக்கப்பட்ட 4 சிறுமிகளுக்கும் தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது..

Share
FacebookXWhatsAppTelegram