பாறைக்குழியில் குப்பை கொட்ட எதிர்ப்பு: ஆட்சியரிடம் மனு
14 hours before

பாறைக்குழியில் குப்பை கொட்ட எதிர்ப்பு: ஆட்சியரிடம் மனு

திருப்பூர், செப்.7 -திருப்பூர் அருகே திருமுருகன்பூண்டி நகராட்சி அம்மாபாளையம் பகுதி பாறைக்குழியில் மாநகராட்சி குப்பை கொட்டக் கூடாது என்று அப்பகுதி அனைத்துக் கட்சியினர், பொது மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் நேரில் வலியுறுத்தினர்.

ஏற்கெனவே அப்பகுதியில் போராட்டம் நடத்தி வரும் நிலையில் திங்களன்று ஆட்சியரகத்தில் நகராட்சித் தலைவர்குமார் உள்ளிட்ட அனைத்துக் கட்சி நகர்மன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள், பொது மக்கள் ஆட்சியரை சந்தித்துகுப்பை கொட்ட எதிர்ப்பை பதிவு செய்தனர். எனினும் மேலிட உத்தரவு என்பதால் மாவட்ட நிர்வாகத்தால் ஒன்றும் செய்ய முடியாது என்று ஆட்சியர் கூறியதாகவும்,குப்பை கொட்டுவதை தொடர்ந்தால் அப்பகுதியில் ஆயிரக்கணக்கான மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். மார்க்சிஸ்ட் கட்சியின்நகர்மன்ற உறுப்பினர் சுப்பிரமணியம், ஒன்றியக்குழு உறுப்பினர்பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.