தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

போராட குவிந்த மக்கள்: ஆட்சியர் அலுவலக நுழைவாயில் கதவு மூடல்

14 hours before
போராட குவிந்த மக்கள்: ஆட்சியர் அலுவலக நுழைவாயில் கதவு மூடல்

போராட குவிந்த மக்கள்: ஆட்சியர் அலுவலக நுழைவாயில் கதவு மூடல்

திருப்பூர், செப்.7–திருப்பூரில் குப்பை பிரச்சனை உள்பட பல்வேறு கோரிக்கைகளுக்காக ஆட்சியர் அலுவலகத்திற்கு முற்றுகையிட வந்த மக்களை உள்ளே விடாமல் தடுப்பதற்காக மாவட்ட ஆட்சியர்அலுவலக பிரதான நுழைவாயில் கதவை மூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

வாராந்திர மக்கள் குறை தீர் மனு நீதி நாள் கூட்டம் வழக்கமாக திங்கள்கிழமை நடைபெறுகிறது. அன்றுமாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்வேறு கோரிக்கைகளுக்காக மக்கள் ஆட்சியர் அலுவலகத்திற்கு வருவர். பல்லடம் சாலையில் எல்ஆர்ஜி கல்லூரிக்கு அருகில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் அமைந்துள்ளது. இங்கு திங்கள்கிழமைகளில் நுழைவாயில் பகுதியில் காவலர்கள் நிறுத்தப்பட்டு மனுக் கொடுக்க வருவோரிடம் விசாரித்து, வேறு ஏதேனும் எரிபொருள்கேன், பாட்டில் வைத்திருக்கிறார்களா என்று சோதனை செய்து உள்ளே அனுப்புவது வழக்கம்.

இந்நிலையில், திங்களன்று ஆட்சியரகத்தின் பிரதான வாயிலின் உள்ளே செல்வது, வெளியே வருவது என இரு பெரிய கம்பிக் கதவுகளும் மூடப்பட்டு காவலர்கள் குவிக்கப்பட்டிருந்தனர். ஆட்சியரகத்திற்கு வருவோரை சோதனை செய்து உள்ளே அனுப்பினர். இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில்வந்தோரை சற்று தள்ளியிருக்கும் ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்குச் செல்லும் பாதை வழியாக திருப்பி விட்டனர். குறிப்பாக வெள்ளியம்பாளையம், அம்மாபாளையம் பகுதிகளில் மாநகராட்சி குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆட்சியரிடம் முறையிடுவதற்காக நூற்றுக்கணக்கானோர் திரண்டு வந்திருந்தனர். அதேபோல் மாவட்டத்தின் இதர பகுதிகளிலும் குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளுக்காக தனித்தனியாக நூறு, ஐம்பது பேர் என பெரும் எண்ணிக்கையில் வந்தனர்.

இவர்களை மொத்தமாக உள்ளே செல்வதற்கு அனுமதிக்காமல் காவலர்கள் தடுத்து நிறுத்தினர். அதேபோல் மாற்றுத் திறனாளிகளும் மாதாந்திர உதவித்தொகையை ரூ.6 ஆயிரமாக உ.யர்த்திவழங்கக் கோரி ஆட்சியரகத்தில் முற்றுகைப் போராட்டம் அறிவித்திருந்தனர். எனவே வழக்கமாக உள்ளே செல்வதற்காக திறந்திருக்கும் பிரதான கதவும், மூடப்பட்டிருந்தது. மாற்றுத் திறனாளிகள்நுழைவாயில் பகுதியில் அமர்ந்து கோரிக்கை முழக்கம் எழுப்பிய நிலையில் கைது செய்யப்பட்டனர். பிற அமைப்பினரை குறிப்பிட்ட சிலர் மட்டும்உள்ளே செல்லலாம், மற்றவர்கள் செல்லக் கூடாது என்று தடுத்து நிறுத்தினர்.மக்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு மாவட்ட ஆட்சியரிடம் நேரில் மனுக் கொடுத்து முறை

யிடுவதற்குத்தான் வாராந்திர மனுநீதி நாள் கூட்டம் நடத்தப்படுகிறது. ஆனால் இங்கும் மக்கள் கூட்டமாக வரக்கூடாது என்று தடுக்கின்றனர்.

மக்கள் யாரும் தங்கள் வேலையை கெடுத்து கொண்டு இங்கு வருவதில்லை. மாவட்ட, மாநகராட்சி, உள்ளாட்சிகளின்நடவடிக்கைகள்தான் எங்களை போராடதூண்டுகின்றன. போராடினாலும் அராஜகமாக கைது செய்கின்றனர்.ஆட்சியரிடம் முறையிடவும் அனுமதிக்க மறுக்கின்றனர். பிறகு எதற்காக இந்த ஏற்பாடு? ஜனநாயக உரிமை இருக்கிறது என்று வாயளவில் சொல்லிவிட்டு செயல்பாட்டில்மக்களை முடக்குவது என்ன நியாயம்? என மக்கள் கேள்வி எழுப்பினர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.