காதில் பூ அணிந்து கிராம சபையில் பங்கேற்ற பொதுமக்கள்!
1 hour before

காதில் பூ அணிந்து கிராம சபையில் பங்கேற்ற பொதுமக்கள்!

திருப்பூர், ஆக.16-முதலிபாளையத்தில் நிலவும் சீர்கேட்டை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் காதில் பூ அணிந்தவாறு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பங்கேற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாட்டின் 80 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, திருப்பூர் மாவட்டம், முதலிபாளையத்

தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், அரசுக்கு தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில்,பொதுமக்கள் காதில் பூ அணிந்தவாறு பங்கேற்றனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், முதலிபாளையம், நல்லூரில் உள்ள பாறைக்குழிகளில் மாநகராட்சி சார்பில் டன் கணக்கில்குப்பை கொட்டப்பட்டுள்ளதால் நிலத்தடி நீர், விவசாயம், சுகாதாரம் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த சுற்றுச்சூழல் தின கிராமக்சபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்படி, மாசுபட்ட பாறைக்குழி நச்சுநீரை எடுக்க வேண்டும். பாறைக்குழியில் போடப்பட்ட குப்பையை எடுக்க வேண்டும். குப்பையை எடுக்கும் வரை எச்.டி.பி.சி தாள் கொண்டு மூட வேண்டும்.இல்லாவிட்டால், கிராம சபை கூட்டத்தை நடத்த விட மாட்டோம், என்றனர். இதைத்தொடர்ந்து, முதலிபாளையம் குப்பைக்கிடங்கை எச்டிபிஇ தாளால் மூடுவது; கழிவுகளை அகற்றுவது; மாசுபட்ட நீரை வெளியேற்றுவது தொடர்பான அண்ணா பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப கருத்துரையின்பேரில், துரித நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்ததை தொடர்ந்து,அதனை விரைவுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை வட்டார வளர்ச்சி அலுவலர் மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மதவெறியை புகுத்துவதா?உடுமலைப்பேட்டை கிராமசபைக் கூட்டங்களில், விபி ஜி ராம்ஜி திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம் என்ற பெயரில் உறுதிமொழி ஏற்கச்சொல்லி, ‘பாரத் மாதா கி ஜே’ என கோசமிடுவதற்கு ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் அறிக்கை அனுப்பியுள்ளது. மதச்சார்பற்ற அரசு அலுவலகங்களிலும், ஊராட்சி அலுவலகங்களிலும் மதம் சார்ந்த சொல்லாடல்களையு,ம் கோசங்களையும் திட்டமிட்டு திணிக்கிற ஒன்றிய அரசின் நடவடிக்கையின் ஒருபகுதியாக இது அமைந்துள்ளது. தமிழக அரசு உடனடியாக இந்த உறுதிமொழி அறிக்கையை திரும்பப்பெற வேண்டும். மகாத்மா காந்தி பெயரிலேயே திட்டம் தொடர வேண்டும். தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்துவதை கைவிட்டு, வேலை நாளை 200 ஆகவும், தினக்கூலியாக ரூ.700 ஆகவும் உயர்த்தவேண்டும். இந்த அறிக்கையில் ‘பாரத் மாதா கி ஜே’ கோசத்தை முன்வைத்து, மலிவான அரசியல் செய்யும் நோக்கத்தோடு செயல்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் விவசாயத் தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

சம்பிரதாயக் கூட்டம்அணிக்கடவு ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபையில், ராமச்சந்திராபுரம், கரியாஞ்சாளை, நஞ்சேகவுண்டன்புதூர், சிந்திலுப்பு, சி.நாகூர் ஆகிய கிராமங்களில் குடிநீர் தேவை, பழுதடைந்த சாலைகள், மின்விளக்கு எரியாத நிலை, கழிப்பிட வசதி, நூறுநாள் பணியாளர்களின் கூலி கொடுக்காதது குறித்து பொதுமக்கள் முன்வைத்தனர். அதில், முடிவெடுக்கும் அதிகாரிகள் யாரும் வராமல் கடைநிலை ஊழியராக பணியாற்றும் ஊழியர்களை அனுப்பி சடங்குக்காக சம்பிரதாய முறையில் கூட்டம் நடைபெற்றுள்ளது. அரசின்நோக்கத்தை அதிகாரிகள் அலட்சியப்படுத்துவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டினர்.

வாலிபர் சங்கம் மனுஜல்லிபட்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபையில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கோரிக்கை மனு வழங்கப்பட்டது. அதில், ஜல்லிப்பட்டி புதுநகர் பகுதியில் சுமார் 25 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டு, சேதமடைந்துள்ள பொதுக்கழிப்பிடத்தை சீரமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். சமுதாய நலக்கூடம் அமைத்து தர வேண்டும். குடிநீர் விநியோகத்தை முறைப்படுத்த வேண்டும். பழுதடைந்துள்ள மின் கம்பங்களை அகற்றி, புதிய கம்பங்களை அமைக்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, ஊராட்சி மன்ற செயலாளர் மக்களிடமும், பணியாளரிடமும் நல்ல அணுகுமுறையில் நடந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.