தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

போக்குவரத்து நெரிசலில் மூச்சுத்திணறும் திருப்பூர்!

14 hours before
போக்குவரத்து நெரிசலில் மூச்சுத்திணறும் திருப்பூர்!

போக்குவரத்து நெரிசலில் மூச்சுத்திணறும் திருப்பூர்!

திருப்பூர், செப்.7–தொழில் நகரமான திருப்பூர் மாநகரம் கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்து வருகிறது.முத்தமிழறிஞர் கலைஞர் பழைய பேருந்து நிலையம், பல்லடம் சாலை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தென்னம்பாளையம், திருப்பூர் குமரன் சாலை, ஈஸ்வரன் கோவில் வீதி, மாநகராட்சி சாலை, மங்கலம் சாலை மற்றும் அவிநாசி சாலை ஆகிய முக்கிய பகுதிகளில் தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

இதனால் வாகன ஓட்டிகளும், பயணிகளும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில், முறையான போக்குவரத்து ஒழுங்குமுறை இல்லாததே இந்த நிலைக்குக் காரணம் என பொதுமக்கள் கூறுகின்றனர்.

முக்கிய சந்திப்புகளில் இருந்த சிக்னல்கள் அகற்றப்பட்டு, சாலைகள் அடைக்கப்பட்டுள்ளன. அதற்குப் பதி

லாக நீண்ட தூரம் சுற்றிச் செல்லும் வகையில் ’யு-டர்ன்’ திருப்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மாற்றம் ஒரு சில இடங்களில்மட்டுமே பலன் அளித்துள்ளது; பெரும்பாலான இடங்களில் கூடுதல் நெரிசலையும் குழப்பத்தையுமே ஏற்படுத்தியுள்ளது.இந்த நெரிசல் காரணமாக தொழிலாளர்கள் நேரத்திற்கு வேலைக்கு செல்ல முடியாமலும், தொழில் நிறுவனங்களின் சரக்குபோக்குவரத்து மற்றும் வங்கிப் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டும் வருகின்றன. மேலும், ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட நெரிசலில் சிக்கி மருத்துவமனைக்கு செல்வதில் பெரும் தாமதம் ஏற்படுகிறது. எனவே, மாநகர காவல் துறையும், நிர்வாகமும் உடனடியாக ஆலோசனை மேற்கொண்டு, இந்த சுழற்சி முறையை சீரமைத்து போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தரத்தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.