முந்தய பக்கம்

பயிர் கடன் ரத்து கோரி விவசாயிகள் தாலியைக் காட்டி போராட்டம்

2 hours before
பயிர் கடன் ரத்து கோரி விவசாயிகள்  தாலியைக் காட்டி போராட்டம்
<p><strong>பயிர் கடன் ரத்து கோரி விவசாயிகள் தாலியைக் காட்டி போராட்டம்</strong></p><p>திருவள்ளூர், ஜூலை 31-திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பன்நோக்கு கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் கவிதா தலைமையில் மாவட்ட அளவிலான விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தேர்தல் வாக்குறுதிப்படி விவசாயிகளின் அனைத்துப் பயிர்க்கடன்களை யும் முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்திக் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து கோரிக்கையை வலியுறுத்தி விவசாயிகள் கூட்டத்திலிருந்து வெளிநடப்புச் செய்தனர். பின்னர் கண்களில் கருப்புக் துணி கட்டிக்கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தாலியைத் தவிர வேறு எதுவும் தங்க ளிடம் இல்லை எனக் கூறி தாலியைக் காட்டிய தால் ஆட்சியர் அலுவலகப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram