திருவண்ணாமலை அரசு மருத்துவமனை பிரசவ வார்டில் அடிப்படை வசதிகள் இல்லை! கர்ப்பிணிகளின் உறவினர்கள் குற்றச்சாட்டு
14 hours before

திருவண்ணாமலை அரசு மருத்துவமனை பிரசவ வார்டில் அடிப்படை வசதிகள் இல்லை! கர்ப்பிணிகளின் உறவினர்கள் குற்றச்சாட்டு

திருவண்ணாமலை, செப் 15-திருவண்ணாமலை அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்திற்காக வரும் கர்ப்பிணிகளுக்கும், அவர்களுடன் வரும் உறவினர்களுக்கும் போதியஅடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என்றும், மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் தனியார்பாதுகாவலர்கள் பணம் கேட்பதாகவும் கர்ப்பிணிகளின் உறவினர்கள் பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

திருவண்ணாமலை மாநகரின் புறவழிச் சாலையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது. திருவண்ணாமலை மட்டுமின்றிமாவட்டத்தின் பல்வேறு பகுதிகள்மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இந்த மருத்துவமனையை பயன்படுத்தி வருகின்றனர்.

மருத்துவமனை வளாகத்தில் புறநோயாளிகள் பிரிவு, தாய்-சேய் நலப்

பிரிவு, ரத்த வங்கி, விபத்து மற்றும்அவசர சிகிச்சைப் பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுக்கானகட்டடங்கள் செயல்பட்டு வருகின்றன. தினந்தோறும் ஏராளமான நோயாளிகள் மற்றும் கர்ப்பிணிகள் சிகிச்சைக்காக வந்து செல்லும் நிலையில்,அவர்களுடன் வரும் உறவினர்களுக்கு போதிய காத்திருப்பு மற்றும் ஓய்விட வசதிகள்இல்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குறிப்பாக, ஒருங்கிணைந்த மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் பிரசவத்திற்காகஅனுமதிக்கப்படும் கர்ப்பிணிகள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாகஅவர்களின் கணவர்கள் தெரிவித்தனர். பிரசவத்திற்குப்பிறகு தாயையும் பச்சிளம் குழந்தையையும் தங்க வைப்பதற்கான படுக்கை வசதிகள் போதுமானதாக இல்லை என்றும், சில நேரங்களில் தரையில் படுக்கவேண்டிய நிலை ஏற்படுவதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்தனர்.

மேலும், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் உதவியாளர்களுக்கு தனியாக காத்திருக்கவோ, உணவு அருந்தவோ போதிய இடவசதி இல்லை என்றும் கூறப்படுகிறது.இதனால் மருத்துவமனை வளாகத்தில் கிடைக்கும் இடங்களில் உடைமைகளை வைத்துக் கொண்டு அமருவதுடன், மரத்தடிகளில் அமர்ந்து உணவு உண்ணும் நிலையும் காணப்படுவதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகளும் போதுமானதாக இல்லை என அவர்கள் குற்றம் சாட்டினர். குடிநீருக்காகவும், கழிப்பறை பயன்பாட்டிற்காகவும் பணம்செலுத்த வேண்டிய சூழல் இருப்பதாகவும், சில நேரங்களில் வெளியே பணம் கொடுத்து குடிநீர் வாங்க வேண்டிய நிலை ஏற்படுவதாகவும் தெரிவித்தனர்.

மேலும், பிரசவ வார்டில் பல்வேறுபணிகளுக்காக ரூ.500 முதல் ரூ.1,000 வரை லஞ்சம் கேட்கப்படுவதாகவும், மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் தனியார் பாதுகாவலர்கள் நோயாளிகள் மற்றும் உறவினர்களிடம் பணம்கேட்பதாகவும் சிலர் குற்றம் சாட்டினர். இந்த குற்றச்சாட்டுகள் குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கைஎடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.இதுகுறித்து கர்ப்பிணிகளின் கணவர்கள் மணிசெல்வம் (கீழ்பென்னாத்தூர்), முகிலன் (செங்கம்)ஆகியோர் கூறுகையில், “அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனையை நம்பி தினந்தோறும் ஏராளமான கர்ப்பிணிகள் வருகின்றனர். ஆனால், அவர்களுக்கும் உடன் வரும்உறவினர்களுக்கும் தேவையான குடிநீர், கழிப்பிடம், தங்குமிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லை. மழை, வெயில் எனஎந்த சூழ்நிலையிலும் மருத்துவமனைவளாகத்திலேயே காத்திருக்க வேண்டியுள்ளது. இரவு நேரங்களில் கொசுக்கடியில் அவதிப்பட வேண்டியுள்ளது.

கர்ப்பிணிகளுக்கு போதியபடுக்கை வசதிகளை ஏற்படுத்துவதுடன், உறவினர்களுக்காக தனிகாத்திருப்பு அறை மற்றும் ஓய்விட வசதிகளை ஏற்படுத்த வேண்டும். குறைந்த விலையில் உணவு கிடைக்கும் வகையில் கேண்டீன் வசதியும் ஏற்படுத்தவேண்டும். பணம் கேட்பதாக கூறப்படும் புகார்கள் குறித்தும் அதிகாரிகள் உரிய விசாரணை நடத்த வேண்டும்” என்றனர்.இதுகுறித்து மருத்துவக் கல்லூரிமுதல்வர் கூறியதாவது: திருவண்ணாமலை அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நாளொன்றுக்கு 40-க்கும் மேற்பட்ட பிரசவங்கள் நடைபெற்று வருகின்றன. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்துகர்ப்பிணிகள் அரசு மருத்துவமனையை நம்பி சிகிச்சைக்காக வருவதால், தற்போதுள்ளகட்டட வசதிகள் போதுமானதாகஇல்லை. கர்ப்பிணிகள், தாய்மார்களின் தேவையை கருத்தில் கொண்டு கூடுதல் கட்டடம் கட்டுவதற்காக தமிழக அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. கூடுதல் கட்டட வசதிகிடைத்தவுடன் தற்போதுள்ள பல்வேறு சிரமங்களுக்கு தீர்வு காணப்படும் என்றார்.