அவுட்சோர்சிங் முறையை கைவிடுக: அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
1 hour before

அவுட்சோர்சிங் முறையை கைவிடுக: அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

தருமபுரி, அக்.13-அரசுத்துறைகளில் அவுட்சோர்சிங் முறையை கைவிட்டு, காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசுத்துறைகளில் லட்சக்கணக்கில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். ஆய்வுக்கூட்டம் என்ற பெயரில்அதிகாரிகள் அதிகார துஷ்பிரயோகம் செய்வதையும், ஆணவப்போக்குடன் நடந்துகொள்வதையும் அரசுதடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் செவ்வாயன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். இதன்ஒருபகுதியாக, தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, வட்டத்தலைவர் ராஜ் கண்ணு தலைமை வகித்தார். மாவட்ட இணைச்செயலாளர் முருகன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். தருமபுரி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு மாவட்டச் செயலாளர் ஏ.தெய்வானை, பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு மாவட்டத் தலைவர் எம். சுருளிநாதன் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதேபோன்று, பாலக்கோட்டில் மாவட்ட துணைத்தலைவர் சாக்ரட்டீஸ், காரிமங்கலத்தில் மாவட்ட இணைச்செயலாளர்கள் அழகிரி, தேவகி, பாப்பிரெட்டிப்பட்டியில் மாவட்டதுணைத்தலைவர்கள் சங்கர், கிருஷ்ணமூர்த்தி, நல்லம்பள்ளியில் மாவட்ட துணைத்தலைவர் முருகன் ஆகியோர் தலைமையிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

திருப்பூர்

திருப்பூர் வடக்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, அரசு ஊழியர் சங்க வட்டக்கிளைச் செயலாளர் பி.விஸ்வநாதன் தலைமை ஏற்றார். மாவட்ட இணைச் செயலாளர் ஆர்.ராமன் உரையாற்றினார். வருவாய்த்துறை வட்டப் பொறுப்பாளர் கர்ணன் நன்றி கூறினார். உடுமலை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வட்டக்கிளைச் செயலாளர் வெங்கிடுசாமி தலைமையில்நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்டச் செயலாளர் பாலசுப்பிரமணியம், மாநில நிர்வாகி அம்சராஜ் உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றினர்.

கோவை

கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம், தெற்கு வட்டக்கிளை, கிணத்துக்கிடவு, சூலூர், பொள்ளாச்சி, உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் திரளான அரசு ஊழியர்கள் பங்கேற்றனர். இதில், அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர்ஜெகநாதன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்று உரையாற்றினர்.